சூரா 79: பறிப்பவர்கள் (அல்-நாஸியாத்)
[79:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[79:1] (நம்ப மறுப்பவர்களின் ஆன்மாக்களை) பல வந்தமாகப் பறிப்பவர்கள் (ஆகிய வானவர்கள்).
[79:2] மேலும் (நம்பிக்கையாளர்களின் ஆன்மாக் களை) மகிழ்ச்சியோடு மென்மையாக எடுப் பவர்கள்.
[79:3] மேலும் எல்லா இடங்களிலும் மிதக்கின்ற வர்கள்.
[79:4] ஆர்வத்துடன் ஒருவரையொருவர் முந்துபவர்கள்-
[79:5] பல்வேறு கட்டளைகளை நிறைவேற்றுவதற் காக.
[79:6] அதிர்வானது அதிரும் அந்நாள்.
[79:7] இரண்டாவது ஊதுதலைத் தொடர்ந்து.
[79:8] குறிப்பிட்ட சில மனங்கள் திகிலூட்டப்பட்டு விடும்.
[79:9] அவர்களுடைய கண்கள் கீழ் நோக்கிய வையாகி விடும்.
[79:10] அவர்கள் கூறுவார்கள், “ சமாதியிலிருந்து நாம் மீண்டும் படைக்கப்பட்டு விட்டோம்!
[79:11] “நாம் சிதைந்து போன எலும்புகளாக மாறிவிட்ட பின்னர் எவ்வாறு இது நிகழ்ந்தது?”
[79:12] அவர்கள், “இது மீண்டும் நிகழச்சாத்திய மில்லாத ஒன்றாகும்” என்று கூறி இருந்தனர்.
[79:13] அதற்கு எடுத்துக் கொள்வதெல்லாம் ஓர் இடிப்புதான்.
[79:14] உடனே அவர்கள் எழுந்து விடுவார்கள்.
[79:15] மோஸஸின் சரித்திரத்தைப் பற்றி நீர் அறிந்து கொண்டீரா?
[79:16] துவா எனும் புனிதப்பள்ளத்தாக்கில் அவரு டைய இரட்சகர் அவரை அழைத்தார்.
[79:17] “ஃபேரோவிடம் செல்வீராக; அவன் வரம்பு மீறி விட்டான்.”
[79:18] அவனிடம் கூறுவீராக, “நீ சீர்திருந்த மாட்டாயா?
[79:19] “நீ பயபக்தியுடையவனாக மாறும் பொருட்டு, உன்னுடைய இரட்சகரிடம் உன்னை வழிநடத்த என்னை அனுமதிப்பாயாக.”
[79:20] அவர் பின்னர் அவனிடம் அந்த மாபெரும் அற்புதத்தைக் காட்டினார்.
[79:21] ஆனால் அவன் நம்பமறுத்தான் மேலும் கலகம் செய்தான்.
[79:22] பின்னர்அவன் மிக விரைவில் திரும்பிச் சென்று விட்டான்.
[79:23] அவன் ஒன்று கூட்டினான் மேலும் பிரகடனம் செய்தான்.
[79:24] அவன், “ நான் தான் உங்களுடைய இரட்சகன்; மிகவும் உயர்ந்தவன்” என்று கூறினான்.
[79:25] அதன் விளைவாக, கடவுள் அவனை மறுவுல கிலும், அவ்வண்ணமே இந்த முதல் வாழ்விலும் தண்டனைக்கு உட்படுத்தினார்.
[79:26] பயபக்தியுடையோருக்கு இது ஒரு படிப்பினையாகும்.
[79:27] படைக்கப்படுவதற்கு வானத்தை விடவும் மிகக் கடினமானவர்களா நீங்கள்? அவர் அதனை நிர்மாணித்தார்.
[79:28] அதன் பெரும் எண்ணிக்கையிலான பொருட் களை அவர் உயர்த்தினார், மேலும் அதனைப் பூரணப்படுத்தினார்.
[79:29] அதன் இரவுப் பொழுதை அவர் இருளுடைய தாக்கினார், மேலும் அதன் காலைப் பொழுதை அவர் பிரகாசமானதாக்கினார்.
[79:30] அவர் பூமியை முட்டை வடிவில்* ஆக்கினார்.
அடிகுறிப்பு

[79:31] அதிலிருந்தே அதற்குரிய தண்ணீர் மற்றும் புல்வெளியை அவர் உருவாக்கினார்.
[79:32] மலைகளை அவர் நிலைநிறுத்தினார்.
[79:33] இவை அனைத்தும் உங்களுக்கும், உங்களு டைய கால்நடைகளுக்கும் வாழ்விற்கான ஆதாரங்களை வழங்குவதற்காகவேயாகும்.
[79:34] பின்னர், அந்த மாபெரும் அடியானது வரும் போது.
[79:35] அதுதான் மனிதன் தான் செய்த ஒவ்வொன் றையும் நினைத்துப் பார்க்கின்ற நாளாகும்.
[79:36] நரகம் இருப்புநிலைக்குக் கொண்டு வரப்படும்.
[79:37] வரம்பு மீறிவிட்ட ஒருவனைப் பொறுத்த வரை.
[79:38] இந்த வாழ்வில் மூழ்கியவனாக இருந்தவன்.
[79:39] நரகம்தான் வசிப்பிடமாக இருக்கும்.
[79:40] தன்னுடைய இரட்சகரின் மாட்சிமையை அஞ்சி, மேலும் பாவகரமான காமங்களில் இருந்து தன்னை தடுத்துக் கொண்டவனைப் பொறுத்த வரை.
[79:41] சுவனம்தான் வசிப்பிடமாக இருக்கும்.
[79:42] அவர்கள் அந்த நேரத்தைப் பற்றியும், மேலும் எப்பொழுது அது நிகழ்ந்தேறும் என்றும் உம்மிடம் கேட்கின்றனர்!
[79:43] அதன் நேரத்தைப் பற்றி அறிவிக்க விதிக்கப் பட்டிருப்பவர் (முஹம்மதான) நீர் அல்ல.
[79:44] உம்முடைய இரட்சகரே அதன் விதியைத் தீர்மானிக்கின்றார்.
[79:45] உம்முடைய இறைப்பணியானது அதனை எதிர்பார்ப்பவர்களை எச்சரிப்பதேயாகும்.
[79:46] அவர்கள் அதனைக் காண்கின்ற அந்நாளில், தாங்கள் ஒரு மாலைப்பொழுதோ அல்லது ஒரு நாளின் பாதியோ உயிருடன் இருந்ததை போல் அவர்கள் உணர்வார்கள்.