சூரா 7க்குரிய அடிக்குறிப்புகள்

*7:1 குர்ஆனின் அற்புதக் கணிதக் குறியீட்டில் இந்த தலைப்பு எழுத்துக்களின் பங்கு என்ன என்பதை அறிய பின் இணைப்பு-1ஐ பார்க்கவும்.

* 7:9 நம்முடைய படைப்பாளரை கவனத்தில் கொள்ளத் தவறுவது, ஆன்மா ரீதியாக பட்டினி கிடக்கவும் ஆன்மாவிற்கு இறுதியான “நஷ்டத்தை” ஏற்படுத்தவும் வழி நடத்தும்.

*7:16 சாத்தான் ஒரு நிரூபிக்கப்பட்ட பொய்யன், மேலும் அவனை ஏற்றுக் கொண்டவர்களும் அவ்வாறே இருப்பார்கள் (2:36, 6:22-23, & 7:20ஐ பார்க்கவும்).

*7:46-49 ஆரம்பத்தில் அங்கு நான்கு இடங்கள் இருக்கும். (1)மேலான சுவனம் (2) தாழ்வான சுவனம் (3)ஆன்மா தூய்மையடையும் இடம் மற்றும் (4) நரகம். பின்னர் ஆன்மா தூய்மையடையும் இடம் தாழ்வான சுவனத்துடன் இணைக்கப்படும்.

*7:54 படைப்பின் ஆறுநாட்கள் என்பது உவமானமானது ; அவை நம்முடைய மிகச்சிறிய கிரகமான பூமியின் ஒன்றுக்கொன்று தொடர்புடைய சிக்கலான தன்மையை அறிவிக்கும் ஒரு அளவுகோலாகத் திகழ்கின்றது. பூமியானது “ நான்கு நாட்களில்” படைக்கப்பட்டது. (41:10 ஐ பார்க்கவும்)

*7:102 இந்த வாழ்வானது நம்மை மீட்டுக்கொள்வதற்கான நம்முடைய கடைசி வாய்ப்பாகும். ஆனால் பெரும்பாலான மக்கள் பிடிவாதமான கலகத் தன்மையுடனும், தீயதன்மையுடனும் இருப்பவர்களாக நிரூபிக்கப்பட்டுள்ளனர் (அறிமுகவுரையைப் பார்க்கவும்).

* 7:142 இந்த எண்கள் இவ்விதமாக குறிப்பிடப்பட்டிருப்பது முக்கியமானதாகும். பின் இணைப்பு 1ல் விவரித்திருப்பதன்படி, குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து எண்களின் கூட்டுத் தொகை 162146, 19 X8534.

* 7:148 தங்கக் கன்றுக்குட்டி எவ்வாறு ஒரு கன்றுக்குட்டியின் சப்தத்தை பெற்றது என்பது அடிக்குறிப்பு 20:96ல் விவரிக்கப்பட்டிருக்கின்றது.

*7:156 கடமையான தர்மத்தின் (ஜகாத்) முக்கியத்துவம், கொடுக்க முடியாத அளவு வலியுறுத்தப்பட்டுவிடவில்லை. 6:141ல் நிர்ணயிக்கப்பட்டுள்ளபடி, ஜகாத்தானது, ஒருவருடைய நிகர வருமானத்தின் 2.5% எனும் விகிதம், பெற்றோர், உறவினர், அநாதைகள், ஏழைகள் மற்றும் பயணத்தில் உள்ள அந்நியர் என்ற இந்த வரிசைக் கிரமத்தின் படி கொடுத்தாக வேண்டும் மேலும் 2:215 ஐ பார்க்கவும்.

*7:157 உபாகமம் 18:15-19 மேலும், ஜான் 14:16-17 மற்றும் 16:13ல் முஹம்மது முன்னறிவிக்கப்பட்டுள்ளார்.

*7:172 இவ்வாறு ஒவ்வொரு மனிதப் பிறவியும் கடவுளைப் பற்றிய இயற்கையான அறிவைக் கொண்டே பிறக்கின்றது.

*7:174 இந்த வாழ்வு கடவுளின் சாம்ராஜ்யத்திற்கு திரும்பிச் செல்வதற்கான நம்முடைய இறுதி வாய்ப்பாகும். (அறிமுகவுரையைப் பார்க்கவும்).

*7:187 கடவுளுடைய உடன்படிக்கைத் தூதர் மூலம் இச்செய்தியை வெளிப்படுத்துவதற்கு உகந்த நேரம் கி.பி. 1980 என்பது முன்னரே விதிக்கப்பட்டுவிட்டது. (15:87, 72:27 மற்றும் பின் இணைப்பு 2 மற்றும் 11 ஐ பார்க்கவும்).

*7:187 நம்ப மறுப்பவர்களுக்கு மட்டுமே அந்த “நேரம் திடீரென” வரும் ( பின் இணைப்பு 11 ஐ பார்க்கவும்).

*7:205 நாளின் பெரும்பகுதி உங்கள் எண்ணங்களை ஆக்ரமித்திருக்கும் எவரோ, அல்லது எதுவோ அதுவே உங்கள் கடவுளாக இருக்கின்றது. இவ்விஷயம் கடவுள் நம்பிக்கையுள்ள பலர் நரகத்திற்கென்றே விதிக்கப்பட்டு விட்டவர்கள் என்ற உண்மையை விளக்குகின்றது (12:106, 23:84-90 மற்றும் பின் இணைப்பு 27ஐ பார்க்கவும்).