சூரா 86: பிரகாசமான நட்சத்திரம் (அல்-தாரிக்)
[86:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[86:1] ஆகாயம் மற்றும் அல்-தாரிக்கின் மீது சத்தியமாக.
[86:2] அல்-தாரிக் என்பது என்னவென்று உமக்குத் தெரியுமா?
[86:3] பிரகாசமான நட்சத்திரம்.
[86:4] நிச்சயமாக, ஒவ்வொருவரும் நன்கு பாதுகாக் கப்பட்டவர்களாக இருக்கின்றனர்.
[86:5] மனிதன் தன்னுடைய படைப்பைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்கட்டும்.
[86:6] வெளித்தள்ளப்பட்ட திரவத்திலிருந்து அவன் படைக்கப்பட்டான்.
[86:7] முதுகெலும்பு மற்றும் உள்ளுறுப்புகளுக்கு இடையில் இருந்து.
[86:8] அவர் நிச்சயமாக அவனை மீண்டும் உயிர்ப்பித்து எழுப்புவதற்கு ஆற்றலுடையவர்.
[86:9] அனைத்து இரகசியங்களும் அறியப்பட்டதாகி விடுகின்ற அந்நாள்.
[86:10] அவனுக்கு எந்தச் சக்தியோ, அன்றி ஓர் உதவியாளரோ இருக்காது.
[86:11] (தண்ணீரைத்) திருப்பியனுப்புகின்ற ஆகாயத்தின் மீது சத்தியமாக.
[86:12] (தாவரங்களை வளர்ப்பதற்காகப்) பிளக்கின்ற பூமியின் மீது சத்தியமாக.
[86:13] இது ஆழ்ந்த கருத்துள்ளதொரு விவரிப்பு ஆகும்.
[86:14] இலேசாக எடுத்துக் கொள்ளப்படக் கூடிய தல்ல.
[86:15] அவர்கள் திட்டம் மற்றும் சூழ்ச்சி செய்கின்றனர்.
[86:16] ஆயினும் நானும் அவ்வாறே செய்கின்றேன்.
[86:17] நம்ப மறுப்பவர்களுக்குக் குறுகியதொரு அவகாசத்தைச் சற்றே அவகாசமளிப்பீராக.