சூரா 89: விடியற்காலை (அல்-ஃபஜ்ர்)
[89:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[89:1] விடியற்காலையின் மீது சத்தியமாக.
அடிகுறிப்பு

[89:2] மேலும் பத்து இரவுகள்*.
அடிகுறிப்பு

[89:3] இரட்டைப்படை மற்றும் ஒற்றைப்படையின் மீது* சத்தியமாக.
[89:4] கடந்து செல்கின்ற இரவின் மீது சத்தியமாக.
[89:5] அறிவுத்திறன் உடைய ஒருவருக்கு, ஆழ்ந்ததொரு பிரமாணம்.
[89:6] ஆதிற்கு உம்முடைய இரட்சகர் என்ன செய்தார் என்பதை நீர் கவனித்திருக்கின்றீரா?
[89:7] இரம்; உயர்ந்த கட்டடங்களையுடைய நகரம்.
[89:8] அதனைப் போன்ற எந்த ஒன்றும் எங்கேயும் இருந்ததில்லை.
[89:9] அத்துடன் தங்களுடைய பள்ளத்தாக்குகளில் பாறைகளைக் குடைந்துகொண்ட, தமூதுகள்.
[89:10] மேலும் பலம் பொருந்திய ஃபேரோ.
[89:11] அவர்கள் அனைவரும் பூமியின் மீது வரம்பு மீறினார்கள்.
[89:12] அவர்கள் தீமைகளை எங்கெங்கிலும் பரப்பினார்கள்.
[89:13] அதன் விளைவாக, சவுக்கடியின் ஒரு தண்டனையை உம்முடைய இரட்சகர் அவர்கள் மீது கொட்டினார்.
[89:14] உம்முடைய இரட்சகர் எப்பொழுதும் விழிப்புடனிருக்கின்றார்.
[89:15] மனிதன் தன்னுடைய இரட்சகரால் அருட் கொடைகள் மற்றும் சந்தோஷத்தைக் கொண்டு சோதிக்கப்படுகின்ற பொழுது, அவன், “என் இரட்சகர் என் பால் தாராள மானவராக இருக்கின்றார்” என்று கூறுகின் றான்.
[89:16] ஆனால் அவர் அவனை வாழ்வாதாரங்களைக் குறைத்தலின் மூலம் சோதித்தால், அவன், “என் இரட்சகர் என்னை இழிவுபடுத்து கின்றார்!”என்று கூறுகின்றான்.
[89:17] தவறு! அநாதையை மதிக்காததன் மூலம் நீதான் அதனை உன் மீதே வரவழைத்துக் கொண்டாய்.
[89:18] மேலும் ஏழைகளின் பால் தர்மத்தை ஆதரிக்காததாலும்.
[89:19] மேலும் உதவியற்ற அநாதைகளின் சொத்துக் களை விழுங்கியதாலும்.
[89:20] மேலும் பணத்தை மிகவும் அதிகமாக நேசித்ததாலும்.
[89:21] உண்மையில், பூமி பொடிப்பொடியாக நொறுக்கப்படுகின்ற, முற்றிலும் பொடிப் பொடியாக நொறுக்கப்படுகின்ற பொழுது.
[89:22] மேலும் அணி அணியாக வானவர்களுடன் உம்முடைய இரட்சகர் வருகின்றார்.
[89:23] அந்நாளில், ஜஹன்னா முன்னால் கொண்டு வரப்படும். அந்நாளில், மனிதன் நினைவு கூர்வான்-ஆனால், என்ன ஒரு நினைவு கூர்தல்-அது மிகவும் தாமதமானதாக இருக்கும்.
[89:24] அவன், “ஐயோ, (நிரந்தரமான) என்னுடைய வாழ்விற்காக நான் தயார் செய்து இருந்திருக்க வேண்டுமென விரும்புகின்றேன்” என்று கூறுவான்.
[89:25] அந்நாளில், அவர் தருகின்ற தண்டனையை விட மிகவும் மோசமானதாக எந்தத் தண்டனை யும் இருக்க இயலாது.
[89:26] அவருடைய சிறைவாசம் போல சக்தி வாய்ந்ததாக எந்த சிறைவாசமும் இருக்காது.
[89:27] திருப்தியடைந்த ஆன்மாவே, உன்னைப் பொறுத்த வரை.
[89:28] திருப்தியுற்றதாகவும் மேலும் திருப்தியளிப் பதாகவும், உன்னுடைய இரட்சகரிடம் திரும்பி விடு.
[89:29] என்னுடைய அடியார்களுக்குள் நல்வரவாகுக.
[89:30] என்னுடைய சுவனத்திற்குள் நல்வரவாகுக.