சூரா 8க்குரிய அடிக்குறிப்புகள்

*8:12-16 யுத்தங்கள் அனைத்தும் 60:8-9 ன் அடிப்படைச்சட்டத்தின்படியே மேற்கொள்ளப்படும்.

*8:17 கடவுள் மீது கொள்ளும் நம்பிக்கை என்பது, அவருடைய தன்மைகளின் மீது நம்பிக்கை கொள்வதை அவசியமாக்குகின்றது, அவர்தான் அனைத்தையும் செய்கின்றார் என்பது அதில் ஒன்றாக இருக்கின்றது. கடவுளைப் பற்றி அறிந்து கொள்ளாமல், நம்பிக்கை என்பது இல்லை (23:84-90). தீமையான விஷயங்களுக்கு நாமே உள்ளாகிக் கொள்கின்றோம், மேலும் கடவுளின் சட்டங்களுக்கு ஏற்ப, அவை சாத்தானால் நிறைவேற்றப்படுகின்றன (4:78-79, 42:30)

*8:24 பின் இணைப்பு 17 ஐ பார்க்கவும். நன்னெறியாளர்கள் தங்கள் உடம்பை விட்டு வெளியேறும் போது, நேராக அவர்கள் சுவனம் செல்கின்றனர்.

*8:25 உதாரணத்திற்கு ஓரினப்புணர்ச்சிக்கு இடமளிக்கின்ற ஒரு சமூகம் பூகம்பத்தால் தாக்குறலாம்.

*8:30 அரேபியாவின் பலம் வாய்ந்த குலத்திலிருந்து முஹம்மதைக் கடவுள் தன்னுடைய இறுதி வேதம் வழங்கப்பட்டவராகத் தேர்ந்தெடுத்தார்.குலச்சட்டங்களும், பழக்கவழக்கங்களும் தான் முஹம்மதைக் கொன்று விடுவதிலிருந்து-கடவுள் அனுமதியால்-நம்ப மறுப்பவர்களைத் தடுத்துக் கொண்டிருந்தது. அது போலவே, மத்தியக் கிழக்குப் பகுதியிலிருந்து தன்னுடைய உடன்படிக்கைத்தூதரை, அங்கிருந்தால் கொல்லப்பட்டிருப்பார் என்ற நிலையில், கடவுளின் தூதுச் செய்தி பூலோகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் விரைந்து பரவ இயலும் வண்ணம் U.S.A. நோக்கி வரச் செய்தது கடவுளின் நாட்டமே ஆகும். இது கணித ரீதியில் உறுதி செய்யப்படுகின்றது. இந்த சூரா & வசன எண் = 8+ 30=38=19 X 2

*8:35 இஸ்லாத்தின் மார்க்கச் செயல்பாடுகள் அனைத்தும் ஆப்ரஹாமின் மூலமாகவே நமக்கு வந்தது; குர்ஆன் வெளிப்படுத்தப்பட்டப் போது, “அடிபணிதலின்” எல்லாச் சடங்குகளும் ஏற்கனவே வழக்கில் இருந்து வந்தன (21:73, 22:78).

*8:36 கடவுள்-ஐயும் அவரது அற்புதத்தையும் எதிர்த்துப் போரிடுவதற்காகவே, சவுதி அரேபியாவில் உள்ள இணைத்தெய்வ வழிபாடு செய்யும் சீர்கெட்ட இஸ்லாத்தின் தலைவர்கள், வருடந்தோறும் பெருந்தொகையினை ஒதுக்குகின்றனர். உதாரணமாக, புகழ்பெற்ற லெபனீய பதிப்பகமான “தார் அல் இல்ம்லில் மலாயீன்” (இலட்சக்கணக்கானோருக்கு அறிவு) 1983- மார்ச்சில் “குர்ஆனின் அற்புதம்” என்கிற அரபி மொழிபெயர்ப்பை வெளியிட்டது. சவுதிகள் அனைத்துப் பிரதிகளையும் விலைக்கு வாங்கி அவற்றை அழித்து விட்டனர்.