சூரா 9: இறுதியான எச்சரிக்கை (பரா’அஹ்)
[9:0]பிஸ்மில்லாஹ் இல்லை*
[9:1]உங்களுடன் ஓர் உடன்படிக்கை செய்து கொள்ளும் இணைத் தெய்வ வழிபாடு செய் வோருக்கு, கடவுள் மற்றும் அவருடைய தூதரிடமிருந்து, இதில் ஓர் இறுதியான எச்சரிக்கை வெளியிடப்படுகின்றது.
அடிகுறிப்பு

[9:2]ஆகையால், நான்கு மாதங்களுக்குப் பூமியில் சுதந்திரமாகச் சுற்றுங்கள், மேலும் கடவுள்-இடமிருந்து நீங்கள் தப்பித்து விட முடியாது என்பதையும், நம்ப மறுப்பவர்களைக் கடவுள் இழிவுபடுத்துகின்றார் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
[9:3]கடவுள் இணைத்தெய்வ வழிபாடு செய்பவர் களைக் கைவிட்டு விட்டார், மேலும் அவருடைய தூதரும் அவ்வாறே செய்தார், என்று புனித யாத்திரையின் மகத்தான நாளில் கடவுள் இடமிருந்தும் அவருடைய தூதரிடமிருந்தும் மக்கள் அனைவருக்கும் ஒரு பிரகடனம் இதிலே வெளியிடப்படுகின்றது. இனி நீங்கள் வருந்தித் திருந்தினால், அது உங்களுக்குச் சிறந்ததாக இருக்கும். ஆனால் நீங்கள் திரும்பி விட்டால், பின்னர் கடவுள்-இடமிருந்து நீங்கள் தப்பித்து விட முடியாது என்பதை அறிந்து கொள்ளுங்கள். நம்ப மறுப்போருக்கு வலிமிகுந்ததொரு தண்டனையை வாக்களிப் பீராக.
[9:4]இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்கள் உங்களுடன் ஓர் உடன்படிக்கையில் கையொப்ப மிட்டு அதனை மீறாமலும், அன்றி உங்களுக் கெதிராக மற்றவர்களுடன் ஒன்று சேர்ந்து கொள்ளாமலும் இருந்தால், அவர்களுடனான உங்கள் உடன்படிக்கையை காலாவதியாகும் நாள் வரை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். கடவுள் நன்னெறியாளர்களை நேசிக்கின்றார்.
[9:5]புனித மாதங்கள் கடந்த உடன், (அவர்கள் சமா தானம் செய்து கொள்ள மறுத்தால்) இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்களை நீங்கள் போரில் எதிர் கொள்ளும்போது நீங்கள் அவர்களைக் கொல்லலாம், அவர்களைத் தண்டிக்கலாம், மேலும் அவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையையும் தடுக்கலாம். அவர்கள் வருந்தித்திருந்தி, மேலும் தொடர்புத் தொழுகை களை (ஸலாத்) கடைப்பிடித்து மேலும் கடமையான தர்மத்தையும் (ஜகாத்) கொடுத்தால், அவர்களைச் செல்ல நீங்கள் விட்டு விட வேண்டும். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[9:6]இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்களில் ஒருவர் உங்களோடு பாதுகாப்புடன் கடந்து செல்லும் பாதையை தேடினால், அவருக்கு நீங்கள் பாதுகாப்புடன் கடந்து செல்லும் பாதையை வழங்க வேண்டும், இவ்விதமாக அவர் கடவுள்-ன் வார்த்தையைச் செவியேற்க இயலும், பின்னர் அவருடைய பாதுகாப்பான இடத்திற்கு அவரை அனுப்பி விடுங்கள். இது ஏனெனில் அவர்கள் அறியாத மக்களாக இருக்கின்றனர்.
[9:7]கடவுள்-இடமும் அவருடைய தூதரிடமும் எந்த வாக்குறுதியையும் இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்கள் எப்படிக் கேட்க இயலும்? புனித மஸ்ஜிதில் உங்களோடு ஒரு சமாதான உடன் படிக்கையில் கையொப்பமிட்டவர்கள் விதி விலக்காவார்கள். இத்தகையதொரு உடன் படிக்கையை அவர்கள் மதித்து மேலும் அதனை உறுதியாகக் கடைப்பிடித்தால், நீங்களும் அவ்வாறே உறுதியாக கடைப் பிடிக்க வேண்டும். கடவுள் நன்னெறியாளர்களை நேசிக்கின்றார்.
[9:8]வெற்றியடையும் ஒரு சந்தர்ப்பம் எப்பொழுதாவது அவர்களுக்குக் கிடைக்கும் பட்சத்தில், உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள உறவு முறையின் எந்த உரிமையையும், அன்றி எந்த உடன்படிக்கையையும் அவர்கள் ஒரு போதும் கடைப்பிடிக்காத போது, எப்படி (ஒரு வாக் குறுதியைக் கேட்க இயலும்). அவர்கள் வெறும் வார்த்தைகளால் உங்களைச் சமாதானப்படுத் தினார்கள், அதே சமயம் அவர்களுடைய இதயங் களோ எதிர்ப்பில் இருக்கின்றன, மேலும் அவர் களில் அதிகமானோர் தீயவர்கள்.
[9:9]அவர்கள் கடவுள்-ன் வெளிப்பாடுகளை ஓர் அற்ப விலைக்கு வணிகம் செய்து விட்டனர். அதன் விளைவாக, அவர்கள் மக்களை, அவருடைய பாதையில் இருந்து துரத்தி விட்டனர். அவர்கள் செய்தது உண்மையில் துக்ககரமானதாகும்!
[9:10]அவர்கள் எந்த நம்பிக்கையாளரிடத்திலும், உறவுமுறைகளின் எந்த உரிமையையும், ஒருபோதும் கவனத்தில் கொள்வதில்லை, மேலும் அவர்களுடைய எந்த உடன்படிக்கையையும் அவர்கள் உறுதியாகக் கடைப்பிடிப்பதில்லை; இவர்கள் தான் மெய்யான வரம்பு மீறியவர்கள் ஆவர்.

வருந்தித்திருந்துதல்: பழைய பாவங்களைத் துடைத்தெடுத்து விடுகின்றது

[9:11]அவர்கள் வருந்தித்திருந்தி, மேலும் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடித்து, மேலும் கடமையான தர்மத்தைக் (ஜகாத்) கொடுத்து வந்தால், அப்போது அவர்கள், மார்க்கத்தில் உங்கள் சகோதரர்கள் ஆவர். அறிந்து கொள்ளும் மக்களுக்கு இவ்வாறு நாம் வெளிப்பாடுகளை விளக்குகின்றோம்.
[9:12]அவர்கள் தங்களுடைய உடன்படிக்கைகளைக் காப்பதாக வாக்குறுதி செய்துவிட்டுப் பின்னர் தங்களுடைய சத்தியப்பிரமாணங்களை மீறினால், மேலும் உங்களுடைய மார்க்கத்தை தாக்கினால் நம்பிக்கையற்றவர்களின் தலைவர்களுடன் நீங்கள் போரிடலாம்-அவர்கள் விலகிக் கொள்ளும் பொருட்டு-அவர்களுடனான உங்களுடைய உடன்படிக்கைக்கு அதற்கு மேலும் நீங்கள் கட்டுப்பட்டவர்கள் இல்லை.
[9:13]தங்கள் உடன்படிக்கைகளை மீறியவர்கள், தூதரை ஊரை விட்டு வெளியேற்ற முயன்றவர்கள் மேலும், அவர்கள் தான் போரை முதன்முதலில் துவக்கியவர்கள் என்றபோதும் இம்மக்களுடன் நீங்கள் சண்டையிட மாட்டீர்களா? அவர்களுக்கு நீங்கள் பயப்படுகின்றீர்களா? நீங்கள் நம்பிக்கை யாளர்களாக இருந்தால், நீங்கள் அஞ்ச வேண்டிய ஒருவர் கடவுள் தான்.
[9:14]நீங்கள் அவர்களுடன் சண்டையிட வேண்டும், ஏனெனில் கடவுள் உங்கள் கரங்களால் அவர் களைத் தண்டிப்பார், அவர்களை இழிவுபடுத்து வார், அவர்கள் மேல் உங்களுக்கு வெற்றியை வழங்குவார், மேலும் நம்பிக்கையாளர்களின் நெஞ்சங்களைக் குளிரவைப்பார்.
[9:15]இன்னும் நம்பிக்கையாளர்களின் இதயங்களில் உள்ள கோபத்தையும் அவர் நீக்கி விடுவார். கடவுள் தான் நாடுவோரை மீட்டுக் கொள்வார். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.

தவிர்க்கப்பட முடியாத சோதனை

[9:16]உங்களில் பாடுபடுவோர் எவரென்றும், மேலும் கடவுள்-ன் எதிரிகளுடனோ, அல்லது அவருடைய தூதரின் எதிரிகளுடனோ, அல்லது நம்பிக்கை யாளர்களின் எதிரிகளுடனோ, ஒருபோதும் கூட்டு வைத்துக் கொள்ளாதவர்கள் எவரென்றும், கடவுள் பிரித்து அடையாளம் காட்டாத நிலையில் நீங்கள் தனித்து விட்டு விடப்படுவீர்கள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டீர்களா? நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.
[9:17]தங்களுடைய நம்பமறுத்தலை ஒப்புக் கொண்டவர்களாக இருக்கும் நிலையில், இணைத்தெய்வ வழிபாடு செய்வோர் கடவுள்-ன் மஸ்ஜிதுகளில் அடிக்கடி பிரவேசிக்கக் கூடாது. இவர்கள் தங்களுடைய காரியங்களைப் பயனற்றதாக ஆக்கிக் கொண்டனர், மேலும் அவர்கள் என்றென்றும் நரகத்தில் தங்கியிருப்பர்.
[9:18]கடவுள்-ன் மீதும், இறுதிநாளின் மீதும், நம்பிக்கைக் கொண்டோரும் மேலும் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைபிடித்து, கடமையான தர்மத்தை (ஜகாத்) வழங்கி வருவோரும், மேலும் கடவுள்-ஐத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்களும் மட்டுமே கடவுள்-ன் மஸ்ஜிதுகளில் அடிக்கடி பிரவேசிக்கக் கூடியவர்கள். இவர்கள் நிச்சயமாக வழிகாட்டப்பட்டவர்களில் உள்ளவர்கள் ஆவார்கள்.

அரேபியர்களை நோக்கிக் கேள்வி

[9:19]புனிதப் பயணிகளுக்குத் தண்ணீர் புகட்டுவதை, மேலும் புனித மஸ்ஜிதைக் குறித்து அக்கறை எடுத்துக் கொள்வதை, கடவுள்-ன் மீதும், இறுதிநாளின் மீதும் நம்பிக்கை கொள்வதற்கும், மேலும் கடவுள்-ன் பாதையில் பாடுபடுவதற்கும் மாற்றானது என எண்ணிக் கொண்டு விட்டீர்களா? கடவுள்-ன் பார்வையில் அவை சமமானவையல்ல. தீய மக்களைக் கடவுள் நேர்வழியில் செலுத்து வதில்லை.

நற்செய்தி

[9:20]நம்பிக்கை கொண்டு, மேலும் ஊரைவிட்டு வெளியேறி, மேலும் கடவுள் -ன் பாதையில் தங்களுடைய செல்வத்தையும் தங்களுடைய வாழ்வுகளையும் கொண்டு பாடுபடுபவர்கள், கடவுள்-ன் பார்வையில் மிகப்பெரிய அந்தஸ் துடையவர்கள். இவர்கள் தான் வெற்றியாளர்கள்.
[9:21]அவர்களுடைய இரட்சகர் அவர்களுக்கு நற்செய்தியளிக்கின்றார்: அவரிடமிருந்து கருணையும் மற்றும் அங்கீகாரமும், மேலும் தோட்டங்களும், அங்கே அவர்கள் என்றென்றும் நிலைத்திருக்கும் பேரானந்தத்தில் மகிழ்ந் திருப்பார்கள்.
[9:22]அதிலே அவர்கள் நிரந்தரமாக தங்கியிருப்பார்கள். ஒரு மகத்தான வெகுமதியைக் கடவுள் தன் வசம் வைத்திருக்கின்றார்.

நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தால்

[9:23]நம்பிக்கை கொண்டோரே, நம்பிக்கை கொள்வதைவிட நம்ப மறுத்தலுக்கு அவர்கள் முன்னுரிமை கொடுத்தால், உங்களுடைய பெற்றோர்களானாலும் மேலும் உங்களுடைய உடன் பிறப்புகளானாலும் கூட, நீங்கள் அவர்களுடன் கூட்டு வைத்துக் கொள்ளாதீர்கள். உங்களில் எவர்கள் தங்களை அவர்களுடன் இணைத்துக் கொள்கின்றார்களோ அவர்கள் வரம்பு மீறுகின்றார்கள்.

முக்கியத்துவம் வாய்ந்த அளவுகோல்

[9:24]பிரகடனம் செய்வீராக : “உங்களுடைய பெற்றோர் களும், உங்களுடைய குழந்தைகளும், உங்களு டைய உடன்பிறப்புக்களும், உங்களுடைய வாழ்க் கைத் துணைகளும், உங்களுடைய குடும்பமும், நீங்கள் சம்பாதித்து வைத்துள்ள செல்வமும், உங்களைக் கவலை கொள்ளச் செய்யும் ஒரு வியாபாரமும், மேலும் உங்கள் பிரியத்திற்குரிய இல்லங்களும், கடவுள்-ஐயும் அவருடைய தூதரையும்** அவருடைய பாதையில் பாடுபடுவதையும் விட உங்கள் நேசத்திற்குரிய தாயிருந்தால், பிறகு கடவுள் தனது தீர்ப்பைக் கொண்டு வரும் வரை சற்றுக்காத்திருங்கள்.” தீய மக்களைக் கடவுள் நேர்வழியில் செலுத்துவ தில்லை.
அடிகுறிப்பு

[9:25]பல சூழ்நிலைகளில் கடவுள் உங்களுக்கு வெற்றியை வழங்கியிருக்கின்றார். ஆயினும் “ஹுனைன்” அன்று, உங்களுடைய பெரும் எண்ணிக்கையால் நீங்கள் மிகவும் பெருமை கொண்டு விட்டீர்கள். அதன் விளைவாக, அது எந்த விதத்திலும் உங்களுக்கு உதவவில்லை, மேலும் பரந்த பூமியானது உங்களைச் சுற்றிலும் மிகவும் குறுகியதாக ஆகிவிட்டது, அதனால் நீங்கள் பின்னால் திரும்பி ஓடினீர்கள்.
[9:26]அதன்பின்னர் கடவுள் தன்னுடைய தூதர் மீதும் நம்பிக்கையாளர்கள் மீதும் மன அமைதி யை இறக்கி வைத்தார். மேலும் அவர், கண்ணுக்குத் தெரியாத படையினரையும், அனுப்பி வைத்தார். இவ்வாறு அவர் நம்ப மறுத்தவர்களைத் தண்டித்தார். இதுவே நம்ப மறுப்பவர்களுக்கான பிரதிபலனாகும்.
[9:27]இறுதியாக, தான் நாடுவோரைக் கடவுள் மீட்கின்றார், கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[9:28]நம்பிக்கை கொண்டோரே, இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்கள் அசுத்தமாகி விட்டார் கள்; இவ்வருடத்திற்குப் பின்னர் அவர்கள் புனித மஸ்ஜிதை நெருங்க அனுமதிக்க வேண்டாம். வருமான இழப்பிற்கு நீங்கள் அஞ்சினால், கடவுள் அவருடைய நாட்டத்திற்கு ஏற்ப, அவருடைய வாழ்வாதாரங்களை உங்கள் மீது பொழிவார். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.
[9:29]கடவுள் மீதும், அன்றி இறுதிநாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாதவர்களை, அன்றி கடவுள்-ம் அவருடைய தூதரும் தடைசெய்த வற்றைத் தடுத்துக் கொள்ளாதவர்களை, அன்றி வேதத்தைப் பெற்றவர்களில் சத்தியமார்க்கத்தின்படி நடந்து கொள்ளாதவர் களை அவர்கள் விரும்பியோ அல்லது விரும்பாமலோ தகுந்த வரியைச் செலுத் தாதவர்களை எதிர்த்து நீங்கள் திரும்பவும் போரிட வேண்டும்.

இறை நிந்தனைகள்

[9:30]யூதர்கள், “எஸ்ரா கடவுள்-ன் மகனாவார்” என்று கூறினார்கள், அதே சமயம் கிறிஸ்தவர் கள், “ இயேசு கடவுள்-ன் மகனாவார்!” என்று கூறினார்கள். இவையாவும் அவர்களின் வாய்களால் கூறப்படும் இறைநிந்தனைகளே யாகும். இவ்வாறாக, அவர்கள் கடந்தகாலத்திய நம்பமறுத்தவர்களின் இறை நிந்தனைகளுக்கு இணையாகவே செய்கின்றார்கள். கடவுள் அவர்களைக் கண்டனம் செய்கின்றார். அவர் கள் நிச்சயமாக விலகிச் சென்று விட்டனர்.

கடவுளின் போதனைகளுக்குப் பதிலாக சமயத் தலைவர்களின் போதனைகளை ஆதரித்தல்

[9:31]கடவுள்-க்கு பதிலாக, அவர்கள் தங்களுடைய சமயத் தலைவர்களையும், அறிஞர்களையும் இரட்சகர்களாக* அமைத்துக் கொண்டனர். மற்றவர்கள் மேரியின் மகனாகிய மெசையாஹ் விற்குத் தெய்வீகத் தன்மை கொடுத்தனர். அவர்கள் யாவரும் ஒரே தெய்வத்தை மட்டுமே வழிபாடு செய்ய வேண்டும் என்றே கட்டளை யிடப்பட்டிருந்தனர். அவரையன்றி வேறு தெய்வம் இல்லை. அவர் துதிப்பிற்குரியவர், பங்குதாரர்கள் எவரையும் கொள்வதை விட்டும் உயர்வானவர்.
அடிகுறிப்பு

[9:32]அவர்கள் தங்களுடைய வாய்களைக்கொண்டு கடவுள்-ன் ஒளியினை ஊதியணைத்துவிட விரும்புகின்றார்கள், ஆனால் நம்ப மறுப்பவர் கள் வெறுத்தபோதிலும், கடவுள் தனது ஒளி முழுமைப்படுத்தப்படுவதை வலியுறுத்து கின்றார்.

“அடிபணிதல் “ வெற்றியடைய வேண்டும் என விதிக்கப்பட்டுள்ளது

[9:33]அவர்தான் தன்னுடைய தூதரை* வழிகாட்டலைக் கொண்டும், மேலும் சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பி வைத்தவர், மேலும் இணைத் தெய்வவழிபாடு செய்பவர்கள் வெறுத்த போதிலும், அதனை அனைத்து மார்க்கங்களையும் மிகைக்கும்படி செய்வார்.
அடிகுறிப்பு

மார்க்கத்தைத் தொழிலாகக் கொண்டவர்களிடம் எச்சரிக்கையோடிருங்கள்

[9:34]நம்பிக்கை கொண்டோரே, ஏராளமான சமயத் தலைவர்களும் இன்னும் பிரச்சாரகர்களும் மக்களின் பணத்தை சட்ட விரோதமாக அபகரித்துக் கொள்கின்றனர், மேலும் கடவுள்-ன் பாதையை விட்டும் விரட்டு கின்றனர். எவர்கள் தங்கத்தையும் வெள்ளி யையும் சேர்த்து வைத்துக் கொண்டு, மேலும் அவற்றைக் கடவுள்-ன் பாதையில் செலவு செய்யாமல் இருக்கின்றனரோ, அவர்களுக்கு வலிமிகுந்ததொரு தண்டனையை வாக்களிப் பீராக.
[9:35]அவர்களுடைய தங்கமும், வெள்ளியும் நரக நெருப்பில் கொதிக்க வைக்கப்பட்டுப், பின்னர் அவர்களுடைய நெற்றிகளையும், அவர் களுடைய ஓரங்களையும், மேலும் அவர் களுடைய முதுகுகளையும் எரிக்கப் பயன்படுத்தப்படும் அந்நாள் வரும்: “இதுதான் உங்களுக்காக நீங்கள் சேர்த்து வைத்தது, எனவே நீங்கள் சேர்த்து வைத்ததைச் சுவையுங்கள்.”

கடவுளின் வழிமுறை: ஒரு வருடத்திற்குப் பன்னிரண்டு மாதங்கள்

[9:36]கடவுள்-ஐப் பொறுத்தவரை, மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு* ஆகும். வானங் கள் மற்றும் பூமியை அவர் படைத்த நாள் முதல், இதுவே கடவுள்-ன் சட்டமாக இருந்து வந்துள்ளது. அவற்றில் நான்கு புனிதமானவை. இதுவே முழுமையான மார்க்கமாகும்; புனித மாதங்களின் போது (சண்டையிடுவதன் மூலம்) உங்கள் ஆன்மாக்களுக்கு நீங்கள் தீங்கிழைத்துக் கொள்ளக் கூடாது. ஆயினும், அவர்கள் உங்களுக்கெதிராக முழுமையான போரை அறிவித்தால், (புனித மாதங்களின் போது கூட) இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்களுக்கெதிராக முழுமையான போரை நீங்களும் அறிவிக்கலாம், மேலும் கடவுள் நன்னெறியாளர்களின் பக்கம் இருக்கின்றார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அடிகுறிப்பு

புனித மாதங்களை மாற்றிக் கொள்ளுதல்

[9:37]புனித மாதங்களை மாற்றிக் கொள்ளுதல் மிதமிஞ்சிய நம்பமறுப்பின் ஓர் அடையாளம் ஆகும்; நம்பமறுத்துவிட்டவர்களின் வழிகேட்டை அது அதிகமாக்குகின்றது. கடவுள்-ஆல் புனித மாக்கி வைக்கப்பட்ட மாதங்களின் எண்ணிக் கையை மட்டும் தக்கவைத்துக் கொண்டு, அவர்கள் புனிதமாதங்களையும் வழக்கமான மாதங்களையும் மாற்றிக் கொள்கின்றனர். கடவுள் புனிதமாக்கியதை இவ்வாறு அவர்கள் மீறுகின்றார்கள். அவர்களின் தீமையான காரியங்கள் அவர்களின் கண்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளன.கடவுள் நம்பமறுக்கும் மக்களை வழிநடத்துவதில்லை.
அடிகுறிப்பு

[9:38]நம்பிக்கை கொண்டோரே, “கடவுள்-ன் பாதையில் தயாராகுங்கள்”, “என்று உங்களி டம் சொல்லப்பட்டால், ஏன் நீங்கள் பூமியுடன் கனமாக ஒட்டிக்கொண்டவர்களாக மாறிவிடு கின்றீர்கள்? மறுவுலகின் இடத்தில் இவ்வுலக வாழ்க்கையை நீங்கள் தேர்ந்தெடுத்து விட்டீர்களா? மறுவுலகுடன் ஒப்பிடுகையில், இவ்வுலகின் பொருட்கள், ஒன்றுமேயில்லை.
[9:39]நீங்கள் தயாராகாவிடில், உங்களை அவர் வலிமிகுந்த வேதனை செய்வார், மேலும் வேறு மக்களை உங்களின் இடத்தில் மாற்றியமைத்து விடுவார்; அவரை ஒருபோதும் உங்களால் சிறிதளவும் புண்படுத்த முடியாது. கடவுள் சர்வ சக்தியுடையவர்.

கண்களுக்குத் தெரியாத கடவுளின் படைவீரர்கள்

[9:40]அவரை (தூதரை) நீங்கள் ஆதரிக்கத் தவறினால், கடவுள் ஏற்கனவே அவருக்கு ஆதரவளித்துள்ளார். இவ்விதமாக, நம்ப மறுப்பவர்கள் அவரைத் துரத்தியபோது, மேலும் குகையில் இருந்த இருவரில் ஒருவராக அவர் இருந்தபோது, அவர் தன் தோழரிடம், “கவலை கொள்ளாதீர்; கடவுள் நம்மோடு இருக்கின்றார்” என்று கூறினார். அப்போது கடவுள் அவர்மீது ஆறுதலையும், பாதுகாப்பையும் இறக்கி அனுப்பினார், மேலும் கண்களுக்குத் தெரியாத படையினரைக் கொண்டு அவருக்கு ஆதரவளித்தார். நம்ப மறுப்பவர்களின் கூற்றை அவர் கீழானதாக ஆக்கினார். கடவுள்-ன் வார்த்தை மேலான அரசாளும். கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.

சிறந்த நம்பிக்கையாளர்கள் கடவுளின் பாதையில் பாடுபடுகின்றார்கள்

[9:41]இலேசானதோ அல்லது பாரமானதோ, நீங்கள் உடனடியாக தயாராக வேண்டும், மேலும் கடவுள்-ன் பாதையில் உங்களின் செல்வத்தையும் மற்றும் உங்களின் வாழ்வுகளையும் கொண்டு பாடுபடவேண்டும். நீங்கள் மட்டும் அறிந்திருந்தால், இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்.

சரீர உழைப்பில்லாதவர்கள்

[9:42]ஒரு விரைவான பொருளாதார லாபமும், மேலும் ஒரு குறுகியதூரப் பயணமும் இருந்திருந்தால், அவர்கள் உம்மைப் பின் தொடர்ந்திருப்பார்கள். ஆனால் பாடுபடுவதென்பது அவர்களுக்கு மிகப்பெரிய விஷயமாக இருக்கின்றது. அவர்கள்: “எங்களால் முடிந்திருந்தால், நாங்களும் உங்களுடன் தயாராகியிருப்போம்” என்று கடவுள் மீது சத்தியம் செய்வார்கள். இவ்வாறு அவர்கள் தங்களுக்கே தீங்கிழைத்துக் கொள்கின்றார்கள், மேலும் அவர்கள் பொய்யர்கள் என்பதைக் கடவுள் அறிகின்றார்.
[9:43]கடவுள் உம்மை மன்னித்து விட்டார்: பொய்யர் களிடமிருந்து உண்மையாளர்கள் யார் என்பதை உம்மால் அடையாளம் காண முடிவதற்கு முன்னால், (பின்னால் தங்கி விடுவதற்கு) அவர்களுக்கு ஏன் அனுமதியளித்தீர்?
[9:44]கடவுள்-ன் மீதும் இறுதிநாளின் மீதும் மெய் யாகவே நம்பிக்கை கொண்டவர்கள், தங்களு டைய செல்வத்தையும், தங்களுடைய வாழ்வு களையும் கொண்டு பாடுபடும் வாய்ப்பைத் தவிர்த்திட உம்முடைய அனுமதியைக் கேட்க மாட்டார்கள். கடவுள் நன்னெறியாளர்களை முற்றிலும் அறிந்திருக்கின்றார்.
[9:45]கடவுள்-ன் மீதும் இறுதி நாளின் மீதும் மெய் யாகவே, நம்பிக்கை கொள்ளாத மக்கள்தான் விலக்களிக்கப்பட வேண்டுமென விரும்புவார்கள். அவர்களுடைய இதயங்கள் சந்தேகம் நிரம்பி யவை. மேலும் அவர்களுடைய சந்தேகங்கள் தான் அவர்களைத் தடுமாறச் செய்கின்றன.
[9:46]மெய்யாகவே அவர்கள் தயாராகி விட விரும்பியிருந்தார்களானால், அதற்காக அவர்கள் முழுமையாக தயார் செய்திருப்பார்கள். ஆனால் கடவுள் அவர்களுடைய பங்களிப்பை விரும்ப வில்லை, ஆதலால் அவர்களை ஊக்கம் இழக்கச் செய்தார்; “ பின் தங்குபவர்களுடன் பின்னாலேயே தங்கி விடுங்கள்,” என்று அவர்களிடம் சொல்லப் பட்டது.
[9:47]உங்களோடு அவர்கள் தயாராகியிருந்தால், அவர்கள் குழப்பத்தை உண்டாக்கியிருப்பார்கள், மேலும் உங்கள் மத்தியில் சச்சரவுகளையும் பிரிவினைகளையும் உண்டாக்கியிருப்பார்கள். உங்களில் சிலர் அவர்களுக்கு செவிசாய்க்கக் கூடியவர்களாக இருந்தீர்கள். கடவுள் வரம்பு மீறுபவர்களை முற்றிலும் அறிந்திருக்கின்றார்.
[9:48]கடந்த காலத்திலும் அவர்கள் உங்கள் மத்தியில் குழப்பத்தைப் பரப்ப நாடினார்கள், மேலும் உங்களுக்காக விஷயங்களை குழப்பவும் செய்தார்கள். ஆயினும், இறுதியில் சத்தியம் வென்றது, மேலும் அவர்கள் வெறுத்தபோதிலும், கடவுள்-ன் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
[9:49]அவர்களில் சிலர், “ (பின்தங்கிக் கொள்ள) எனக்கு அனுமதிதாருங்கள்; இத்தகையதொரு கஷ்டத்தை என்மேல் சுமத்தாதீர்கள்” என்று கூறுவார்கள் உண்மையில் இவ்விதமாக, அவர்கள் ஒரு பயங்கரமான கஷ்டத்திற்கு உள்ளாகி விட்டார்கள்; நரகம் நம்ப மறுப்பவர்களைச் சூழ்ந்துள்ளது.
[9:50]உங்களுக்கு ஏதேனும் நல்லது நிகழ்ந்தால், அவர்கள் துன்புறுகின்றனர், மேலும் உங்களுக்கு ஒரு துன்பம் நேருமானால், குதூகலத்துடன் திரும்பிச் சென்றவர்களாக “நாங்கள் தான் உங்களிடம் இவ்வாறு கூறினோமே” என்று கூறுகின்றார்கள்.
[9:51]கடவுள் எங்களுக்கு விதித்ததைத் தவிர வேறெதுவும் எங்களுக்கு நேராது. அவரே எங்கள் இரட்சகரும், எஜமானரும் ஆவார். நம்பிக்கையாளர்கள் கடவுள்-ஐ உறுதியாக நம்ப வேண்டும்” என்று கூறுவீராக.
[9:52]“(வெற்றி அல்லது வீரமரணம் ஆகிய) இரண்டு நல்ல விஷயங்களில் ஒன்றை மட்டுமே நீங்கள் எங்களுக்காக எதிர்பார்க்க இயலும், அதே சமயம் நாங்கள் உங்களுக்கு கடவுள்-இடமிருந்து தண்டித்தலையும் மேலும் அவரிடமிருந்து அல்லது எங்கள் கரங்களிலிருந்து தண்டனையையும் எதிர்பார்க்கின்றோம். ஆகையால், காத்திருங்கள், நாங்களும் உங்களுடன் காத்திருக்கின்றோம்” என்று கூறுவீராக.
[9:53]“விருப்பத்துடனோ அல்லது விருப்பமின்றியோ, செலவிடுங்கள். உங்களிடமிருந்து எதுவும் ஏற்றுக்கொள்ளப்படாது, ஏனெனில் நீங்கள் தீயமக்களாக இருக்கின்றீர்கள்,” என்று கூறுவீராக.

முஹம்மதிற்கு முன்பே தொடர்புத் தொழுகை வழக்கத்தில் இருந்தது

[9:54]அவர்கள் செலவு செய்வதை ஏற்றுக்கொள்வதி லிருந்து தடுத்தது எதுவென்றால், அவர்கள் கடவுள்-ஐயும் மேலும் அவருடைய தூதரையும் நம்ப மறுத்ததும், மேலும் அவர்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்)* கடைப்பிடிக்கும் போது, அவற்றை அவர்கள் சோம்பலுடன் கடைப் பிடித்ததும், மேலும் அவர்கள் தானம் வழங்கிய போது, மனமின்றி அவர்கள் அதைச் செய்ததுமேயாகும்.
அடிகுறிப்பு

வெளிப்படையான உலக வெற்றிகள்

[9:55]அவர்களுடைய செல்வத்தாலோ அல்லது அவர்களுடைய குழந்தைகளாலோ கவரப்பட்டு விடாதீர்கள். கடவுள் இவைகளை அவர்களுக் கான தண்டனைக்கு மூல காரணங்களாக ஆக்குகின்றார், மேலும் (அவர்கள் மரணிக்கும் போது) அவர்கள் நம்ப மறுத்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களது ஆன்மாக்கள் பிரிந்து செல்கின்றன.
[9:56]அவர்கள் உங்களைச் சார்ந்தவர்களாக இல்லாத அதே சமயம், அவர்கள் உங்களைச் சார்ந்தவர்கள்தான் என்று அவர்கள் கடவுள் மீது சத்தியம் செய்கின்றனர்; அவர்கள் பிளவுண்டாக்கும் கூட்டத்தினர் ஆவர்.
[9:57]ஒரு புகலிடத்தையோ, அல்லது குகையையோ, அல்லது ஒளிந்து கொள்ளும் ஓர் இடத்தையோ, அவர்கள் காண்பார்களாயின், அவர்கள் அதன் பால் விரைந்து சென்று விடுவார்கள்.
[9:58]அவர்களில் சிலர் உம்முடைய தர்மப்பங் கீட்டினை விமர்சிக்கின்றனர்; அதிலிருந்து அவர்களுக்குத் தரப்பட்டால், அவர்கள் திருப்தியடைகின்றனர், ஆனால் அதிலிருந்து அவர்களுக்குத் தரப்படாவிட்டால், அவர்கள் ஆட்சேபிப்பவர்களாக ஆகிவிடுகின்றனர்.
[9:59]கடவுள்-ம், அவருடைய தூதரும் அவர்களுக்கு எதைக் கொடுத்தார்களோ அதைக் கொண்டு அவர்கள் திருப்தி கொள்ள வேண்டும். “எங்களுக்குக் கடவுள் போதுமானவர். கடவுள் அவருடைய கொடைகளில் இருந்து எங்களுக்கு வழங்குவார், மேலும் அவருடைய தூதரும் அவ்வாறே செய்வார். நாங்கள் கடவுள்-ஐ மட்டுமே தேடுகின்றோம்,” என்று அவர்கள் கூறியிருக்க வேண்டும்.

தானதர்மத்தின் பங்கீட்டு முறை

[9:60]தான தர்மங்கள் ஏழைகளுக்கும், தேவை யுடையவர்களுக்கும், அவற்றை வசூலிக்கும் பணியாளர்களுக்கும், புதிதாக மாறியவர் களுக்கும், அடிமைகளை விடுதலை செய்வ தற்கும், திடீர் செலவினங்கள் சுமத்தப் பட்டவர் களுக்கும், கடவுள்-ன் பாதையிலும், மேலும் பயணத்தில் உள்ள அந்நியர்களுக்கும், சென்றிட வேண்டும். கடவுள்-ன் கட்டளை இவ்விதமானதாகும். கடவுள் எல்லாம் அறிந்தவர். ஞானம் மிக்கவர்.
[9:61]அவர்களில் சிலர் “அவர் எல்லாவற்றையும் கேட்டுக் கொள்கின்றார்” என்று கூறுபவர் களாக வேதம் வழங்கப்பட்டவரை புண்படுத்து கின்றனர். “அவர் உங்களைக் கவனத்துடன் கேட்பது உங்களுக்குச் சிறந்தது. அவர் கடவுள் - ஐ நம்புகின்றார், மேலும் நம்பிக்கை யாளர்கள் மீது நம்பிக்கை வைக்கின்றார். உங்களிலுள்ள நம்பிக்கை கொண்டவர் களுக்கு அவர் ஒரு கருணையுமாவார்” என்று கூறுவீராக. கடவுள் -ன் தூதரை புண்படுத்து பவர்கள் வலிமிகுந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.
[9:62]அவர்கள் உங்களிடம் உங்களைத் திருப்திப் படுத்துவதற்காகக், கடவுள் மீது சத்தியம் செய்கின்றனர், ஆனால் அவர்கள் மெய்யாக வே நம்பிக்கையாளர்களாக இருந்தால், கடவுள் - ம் அவருடைய தூதரும் தான் திருப்தி செய்யப்படுவதற்கு மிகவும் தகுதியானவர்கள்.

கடவுள்-ஐயும் அவருடைய தூதரையும் எதிர்ப்பதற்கான தண்டனை

[9:63]எவர் ஒருவர் கடவுள்-ஐயும், அவருடைய தூதரையும் எதிர்க்கின்றாரோ, அவர் நரக நெருப்பிற்கு என்றென்றும் உள்ளாகிவிட்டார் என்பது அவர்களுக்குத் தெரியாதா? இதுவே மோசமான இழிவாகும்.

நயவஞ்சகர்கள்

[9:64]தங்களுடைய உள்ளங்களில் உள்ளவற்றை வெளிப்படுத்தும் விதமாக ஒரு சூரா வெளிப்பட்டுவிடுமோ என்று நயவஞ்சகர்கள் கவலையுறுகின்றார்கள். “பரிகாசம் செய்து கொண்டேயிருங்கள். நீங்கள் எதைக் குறித்துப் பயந்து கொண்டிருக்கின்றீர்களோ அதையே மிகச்சரியாகக் கடவுள் வெளிப்படுத்துவார்,” என்று கூறுவீராக.
[9:65]நீர் அவர்களைக் கேட்டால், “நாங்கள் பரிகாசம் செய்துகொண்டும், மேலும் ஏமாற்றிக் கொண்டும் மட்டுமே இருந்தோம்,” என்று அவர்கள் கூறுவார்கள். “நீங்கள் கடவுள்-ஐயும், அவருடைய வெளிப்பாடுகளையும், மேலும் அவருடைய தூதரையும் பரிகாசம் செய்கின் றீர்கள் என்பதை தெளிவாக உணர்ந்து கொண்டீர்களா?” என்று கூறுவீராக
[9:66]சாக்குப் போக்கு சொல்லாதீர்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டதன் பின்னர் நம்ப மறுத்து விட்டீர்கள். உங்களில் சிலரை நாம் மன்னித்து விட்டாலும், உங்களில் உள்ள மற்றவர்களை, அவர்களுடைய தீய செயல்களின் விளைவாக நாம் தண்டிப்போம்.
[9:67]நயவஞ்சக ஆண்களும் மற்றும் நயவஞ்சக பெண்களும் ஒருவர் மற்றவரைச்சார்ந்தவர்களே- அவர்கள் தீமையை ஆதரிக்கின்றனர் மேலும் நன்னெறியைத் தடுக்கின்றனர், மேலும் அவர் கள் கஞ்சத்தனம் கொண்டவர்கள். அவர்கள் கடவுள்-ஐ மறந்து விட்டனர், எனவே அவர் அவர்களை மறந்து விட்டார். நயவஞ்சகர்கள் உண்மையாகவே தீயவர்கள்தான்.
[9:68]நயவஞ்சக ஆண்களுக்கும், மற்றும் நயவஞ்சகப் பெண்களுக்கும், அவ்வாறே நம்ப மறுப்பவர் களுக்கும் கடவுள் நரக நெருப்பை வாக்களிக் கின்றார், அங்கே அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். அது அவர்களுக்குப் போது மானது. கடவுள் அவர்களை தண்டனைக்கென விதித்து விட்டார்; அவர்கள் நிலைத்திருக்கும் ஒரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.

கடவுளின் வழிமுறை மாறுவதில்லை

[9:69]உங்களுக்கு முன்னர் இருந்தவர்களில் சிலர் உங்களை விடவும் பலமானவர்களாக இருந் தனர், மேலும் அதிகமான செல்வத்தையும் பிள்ளைகளையும் கொண்டிருந்தனர். அவர்கள் தங்களுக்குச் சொந்தமான பொருட்களில் மூழ்கியவர்களாகி விட்டனர். அதேபோல், உங்களுக்கு முன்னர் இருந்தவர்கள் மூழ்கிய அதே விதமாகவே, நீங்களும் உங்களுக்குச் சொந்தமான பொருட்களில் மூழ்கியவர்களாகி விட்டீர்கள். அவர்கள் கவனமற்றிருந்த அதே விதமாக, நீங்களும் கவனமற்றவர்களாகி விட்டீர்கள். இத்தகைய மக்கள்தான் இவ்வுலகம் மற்றும் மறுவுலகம் ஆகிய இரண்டிலும், தங்களு டைய காரியங்களைப் பயனற்றதாக்கியவர்கள்; அவர்கள்தான் நஷ்டமடைந்தவர்கள்.

நஷ்டமடைந்தவர்கள்

[9:70]முந்திய தலைமுறையினரிடமிருந்து அவர்கள் எதனையும் கற்றுக் கொள்ள வில்லையா; நோவாவின் சமூகத்தார், ‘ஆது, தமூது, ஆப்ரஹாமின் சமூகத்தார், மித்யன்வாசிகள், மற்றும் (சோடம் மற்றும் கொமர்ராஹ்வைச் சேர்ந்த) தீய செயல்களைப் புரிந்தவர்களிடமிருந்து? அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளுடன் சென்றனர். கடவுள் அவர்களுக்கு தீங்கு இழைக்கவில்லை; அவர்கள்தான் தங்களுடைய சொந்த ஆன் மாக்களுக்குத் தீங்கிழைத்துக் கொண்டார்கள்.

வெற்றி பெற்றவர்கள்

[9:71]நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவருக்கொருவர் நேசர்கள் ஆவர். அவர்கள் நன்னெறியை ஆதரிக்கின்றனர், மேலும் தீமையைத் தடுக்கின்றனர், அவர்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிக்கின்றனர், மேலும் கடமையான தர்மத்தை (ஜகாத்) கொடுக்கின்றனர், மேலும் அவர்கள் கடவுள்-க்கும் அவருடைய தூதருக்கும் கீழ்ப்படிகின் றனர். இவர்கள் கடவுள்-உடைய கருணையால் பொழியப்படுவார்கள். கடவுள் சர்வ வல்லமை யுடையவர், ஞானம் மிக்கவர்.
[9:72]நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும் மேலும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களையும், ஏதேன் தோட்டங்களில் மகத்தான மாளிகைகளையும் கடவுள் வாக்களிக்கின்றார், அங்கே அவர்கள் என்றென் றும் தங்கியிருப்பார்கள். மேலும் கடவுள்-ன் அருட்கொடைகளும் அங்கீகாரமும் இன்னும் மிகப்பெரியதாகும். இதுவே மாபெரும் மகத்தான வெற்றியாகும்.

நம்ப மறுப்பவர்களிடம் நீங்கள் கண்டிப்புடன் இருக்க வேண்டும்

[9:73]வேதம் வழங்கப்பட்டவரே, நம்ப மறுப்பவர் களுக்கும், நயவஞ்சகர்களுக்கும் எதிராகப் போராடுவீராக, மேலும் அவர்கள் மீதான நடவடிக்கைகளில் கண்டிப்புடன் இருப்பீராக. அவர்களுடைய விதி நரகமாகும்; எத்தகைய தொரு துன்பகரமான தங்குமிடம்!
[9:74]நம்பிக்கையின்மையின் வார்த்தையை அவர்கள் கூறியிருந்த போதிலும், அதனை ஒரு போதும் கூறவில்லை என்று அவர்கள் கடவுள் மீது சத்தியம் செய்கின்றனர்; அடிபணிந்தோர் ஆகி விட்ட பின்னர் அவர்கள் நம்பமறுத்து விட்டனர். உண்மையில், அவர்கள் தங்களிடம் ஒருபோதும் இருந்திராததை விட்டு விலகிக் கொண்டு விட்டனர். கடவுள்-ம் அவருடைய தூதரும் அவருடைய அருளையும், வாழ்வாதாரங்களையும் அவர்கள் மேல் பொழிந்திருந்தும் அவர்கள் கலகம் செய்து விட்டனர். அவர்கள் வருந்தித்திருந்தி விட்டால், அது அவர்களுக்கு மிகச் சிறந்ததாக இருக்கும். ஆனால் அவர்கள் திரும்பிச் சென்று விட்டால், கடவுள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் அவர்களுக்கு வலிமிக்க தண்டனையைத் தருவார். அவர்களுக்கு இரட்சகராகவும் எஜமானராகவும் இருப்பதற்குப் பூமியில் எவர் ஒருவரையும் அவர்கள் காணமாட்டார்கள்.
[9:75]அவர்களில் சிலர்: “கடவுள் அவரது அருளைக் கொண்டு எங்கள் மேல் பொழிந்தால், நாங்கள் தர்மம் செய்யக் கூடியவர்களாக இருப்போம், மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்து வோம்,” என்று வாக்குறுதி கூட அளித்தனர்.
[9:76]ஆனால், அவர் தன் வாழ்வாதாரங்களைக் கொண்டு அவர்கள் மீது பொழிந்த போது அவர்கள் கஞ்சர்களாகி விட்டனர், மேலும் வெறுப்புக் கொண்டவர்களாகித் திரும்பிச் சென்று விட்டனர்.
[9:77]அதன் விளைவாக, அவரை அவர்கள் சந்திக்கும் நாள்வரை, அவர்களுடைய இதயங் களில் நயவஞ்சகத்தைக் கொண்டு, அவர் களை அவர் பீடித்தார். இது, அவர்கள் கடவுள் -இடம் செய்த வாக்குறுதிகளை முறித்த காரணத்தாலும், மேலும் அவர்கள் பொய்கள் சொல்லிக்கொண்டு இருந்த காரணத்தாலுமே ஆகும்.
[9:78]கடவுள் அவர்களுடைய இரகசியங்களையும், மற்றும் அவர்களுடைய சூழ்ச்சிகளையும் அறிந்திருக்கின்றார் என்பதையும், மேலும் கடவுள் எல்லா இரகசியங்களையும் அறிந் தவராக இருக்கின்றார் என்பதையும் அவர்கள் தெளிவாக புரிந்து கொள்ளவில்லையா?
[9:79]எவர்கள் அதிகமாகக் கொடுப்பதற்காகத் தாராள மனம் கொண்ட நம்பிக்கையாளர்களை குறைகூறுகின்றார்களோ, மேலும் குறைவாகக் கொடுப்பதற்காக ஏழை நம்பிக்கை யாளர்களை கேலி செய்கின்றார்களோ, அவர்களைக் கடவுள் இகழ்கின்றார். அவர்கள் வலிமிகுந்த தொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்

சாத்தானின் மிகத்திறன் வாய்ந்ததொரு தூண்டில் இரை: பரிந்துரை எனும் கட்டுக்கதை

[9:80]அவர்களுக்காக நீர் பாவமன்னிப்புக் கேட்டாலும், அல்லது அவர்களுக்காக நீர் பாவ மன்னிப்புக் கேட்காவிட்டாலும்-அவர்களுக் காக நீர் எழுபதுமுறை பாவமன்னிப்புக் கேட்டாலும்-கடவுள் அவர்களை மன்னிக்க மாட்டார். இதற்கு காரணம் அவர்கள் கடவுள்-ஐயும் அவருடைய தூதரையும் நம்ப மறுத்ததே யாகும். கடவுள் தீய மக்களை வழிநடத்த மாட்டார்.
அடிகுறிப்பு

[9:81]கடவுள்-ன் தூதருக்குப் பின்னால் அவர்கள் தங்கி விட்டது குறித்து சரீர உழைப்பில்லா தவர்கள் மகிழ்வடைந்தார்கள், மேலும் தங்கள் செல்வத்தையும் தங்கள் வாழ்வுகளையும் கொண்டு கடவுள்-க்காகப் பாடுபடுவதை வெறுத்தார்கள். அவர்கள், “இந்த வெயிலில் நாம் ஒன்று திரண்டு புறப்பட வேண்டாம்!” என்று கூறினார்கள். அவர்கள் மட்டும் புரிந்துகொள்ள முடிந்தால், “நரகத்தின் நெருப்பு இதனைவிட அதிக சூடானதாகும்,” என்று கூறுவீராக.
[9:82]அவர்கள் குறைவாகச் சிரிக்கட்டும், மேலும் அதிகமாக அழட்டும். இது அவர்கள் சம்பாதித்த பாவங்களுக்கான பிரதிபலனாகும்.
[9:83]அவர்கள் உம்மோடு சேர்ந்து தயாராவதற்கு உம்முடைய அனுமதியை அவர்கள் கேட்கும் சூழ்நிலைக்குக் கடவுள் உம்மை மீண்டும் கொண்டு வந்தால், “நீங்கள்” என்னோடு மீண்டும் சேர்ந்து ஒருபோதும் தயாராகவும் வேண்டாம், அன்றி என்னோடு சேர்ந்து எந்த எதிரியுடனும் எப்பொழுதும் போரிடவும் வேண்டாம். ஏனெனில் சரீர உழைப்பில்லாதவர்களோடு சேர்ந்திருக்க வேண்டும் என்பதை நீங்கள் முதலிலேயே தேர்ந்தெடுத்து விட்டீர் கள். ஆகையால், நீங்கள் சரீர உழைப்பில்லாத வர்களுடன் சேர்ந்து தங்கிவிடத்தான் வேண்டும்” என்று கூற வேண்டும்.
[9:84]அவர்களில் எவரும் மரணித்து விடும்போது, அவர்களுக்காக நீர் ஈமப் பிரார்த்தனையைக் கடைப்பிடிக்கவும் வேண்டாம், அன்றியும் அவருடைய அடக்கஸ்தலத்தில் நிற்கவும் வேண்டாம். அவர்கள் கடவுள்-ஐயும் அவருடைய தூதரையும் நம்பமறுத்து விட்டனர், மேலும் பாவகரமான நிலையிலேயே மரணித்து விட்டனர்.

இவ்வுலகப் பொருட்கள் ஒன்றுமேயில்லை

[9:85]அவர்களுடைய செல்வத்தாலோ அல்லது அவர் களுடைய குழந்தைகளாலோ கவரப்பட்டு விடாதீர்; கடவுள் இவைகளை இவ்வுலகில் அவர்களுக்கு துக்கத்திற்கான மூலகாரணங் களாக ஆக்குகின்றார், மேலும் நம்ப மறுப்பவர் களாக அவர்களுடைய ஆன்மாக்கள் பிரிந்து செல்கின்றன.
[9:86]“கடவுள் மீது நம்பிக்கை கொண்டு, மேலும் அவருடைய தூதருடன் சேர்ந்து போராடுங்கள்” என்று அறிவிக்கும் ஒரு சூரா வெளிப்படுத்தப் படும்போது, அவர்களில் உள்ள பலமானவர்கள் கூட, “பின்தங்கிக் கொள்ள எங்களை விட்டு விடுங்கள்!” என்று கூறுகின்றனர்.
[9:87]அவர்கள் சரீர உழைப்பில்லாதவர்களுடன் சேர்ந்திருப்பதை தேர்ந்தெடுத்துக் கொண் டனர். அதன் விளைவாக, அவர்களுடைய இதயங்கள் முத்திரையிடப்பட்டன. எனவே, அவர்களால் புரிந்து கொள்ள முடியாது.

நம்பிக்கையாளர்கள் பாடுபட ஆர்வத்துடன் இருப்பார்கள்

[9:88]தூதரையும், அவருடன் நம்பிக்கை கொண்டவர் களையும் பொறுத்தவரை, அவர்கள் தங்கள் செல்வத்தையும், தங்கள் வாழ்வுகளையும் கொண்டு ஆர்வத்துடன் பாடுபடுவார்கள். இவர்கள் எல்லா நல்ல விஷயங்களுக்கும் தகுதியானவர்களாகி விட்டார்கள்; இவர்களே வெற்றி பெற்றவர்கள்.
[9:89]கடவுள் அவர்களுக்காக ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களைத் தயார் செய்து வைத்துள்ளார், அங்கே அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். இதுவே மிகப்பெரும் மகத்தான வெற்றியாகும்.
[9:90]அரேபியர்கள் சாக்குப் போக்குகளை உருவாக் கிக் கொண்டு, பின் தங்கிக் கொள்ள அனுமதி தேடியவர்களாக உம்மிடம் வந்தனர். இது, கடவுள்-ஐயும் அவருடைய தூதரையும் அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்ததைச் சுட்டிக் காட்டுகின்றது-அவர்கள் பின்தங்குகின்றனர். உண்மையில், அவர்களில் உள்ள நம்ப மறுப்போர் வலிமிகுந்ததொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.
[9:91]பலஹீனர்கள், அல்லது நோயாளிகள், அல்லது கொடுப்பதற்கு எதனையும் காணாதவர்கள், கடவுள்-க்கும் அவருடைய தூதருக்கும் அர்ப்பணித்தவர்களாக அவர்கள் இருக்கும் வரை, குற்றம் பிடிக்கப்படமாட்டார்கள். அவர்களில் உள்ள நன்னெறியாளர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் கூறப்படக் கூடாது. கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[9:92]உங்களோடு சேர்ந்து கொள்ள விரும்பியவர் களாக உம்மிடம் வந்து, ஆனால் நீர் அவர் களிடம், “உங்களைச் சுமந்து செல்ல என்னிடம் எதுவும் இல்லை” என்று கூறினீரே, அவர்களும் மன்னிக்கப்பட்டு விட்டனர். பங்களிப்புக் கொடுப்பதற்கு தங்களால் இயலவில்லையே என்று மெய்யாகவே துக்கமடைந்தவர்களாக, தங்களுடைய கண்களில் கண்ணீரோடு பின்னர் அவர்கள் திரும்பிச் சென்றனர்.
[9:93]தங்களுக்கு ஒரு காரணமும் இல்லாமல் இருந்த போதிலும், பின் தங்கிக் கொள்ள உம்மிடம் அனுமதி கேட்கின்றவர்கள் மீது தான் குற்றச்சாட்டு உள்ளது. அவர்கள் சரீர உழைப்பில்லாதவர்களோடு, இருந்து கொள்வதை தேர்ந்தெடுத்துக் கொண்டனர். அதன் விளைவாக, கடவுள் அவர்களுடைய இதயங்களில் முத்திரையிட்டு விட்டார், மேலும் இவ்விதமாக, அவர்கள் எந்த அறிவையும் அடைவதில்லை.

கஷ்ட காலங்கள் நயவஞ்சகர்களை வெளிப்படுத்த உதவி செய்கின்றன

[9:94](போரில் இருந்து) அவர்களிடம் நீர் திரும்பி வரும்போது அவர்கள் உம்மிடம் வருத்தம் தெரிவிக்கின்றனர். “வருத்தம் தெரிவிக்க வேண்டாம்; இதற்கு மேலும் நாங்கள் உங்களை நம்ப மாட்டோம். கடவுள் உங்களைப் பற்றி எங்களுக்குத் தெரிவித்து விட்டார்” என்று கூறுவீராக. கடவுள் உங்களுடைய செயல்களைப் பார்ப்பார், மேலும் தூதரும் அவ்வாறே செய்வார், பின்னர் எல்லா இரகசியங்களையும், அறிவிப்புகளையும் அறிந்தவரிடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள், அதன் பின்னர் நீங்கள் செய்த ஒவ்வொன்றையும் அவர் உங்களுக்குத் தெரிவிப்பார்.
[9:95]அவர்களிடம் நீர் திரும்பி வரும் போது, அவர் களை நீர் புறக்கணித்து விடக்கூடும் என்பதற் காக, அவர்கள் உம்மிடம் கடவுள் மீது சத்தியம் செய்வார்கள். அவர்களைப் புறக்கணித்து விடுவீராக. அவர்கள் அசுத்தமானவர்கள், மேலும் அவர்கள் சம்பாதித்த பாவங்களுக்குப் பிரதிபலனாக, நரகம்தான் அவர்களுடைய விதியாகும்.
[9:96]அவர்களை நீர் மன்னித்து விடும் பொருட்டு, அவர்கள் உம்மிடம் சத்தியம் செய்கின்றனர். நீர் அவர்களை மன்னித்தாலும், கடவுள் இத்தகைய தீய மக்களை மன்னிக்க மாட்டார்.

அரேபியர்கள்

[9:97]அரேபியர்கள் நம்பிக்கையின்மையிலும், நயவஞ்சகத்தனத்திலும் மிகவும் மோசமான வர்கள், மேலும் கடவுள் தன் தூதருக்கு வெளிப்படுத்தி இருக்கின்ற சட்டங்களை மிகவும் அலட்சியம் செய்யக்கூடியவர்கள். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.
[9:98]சில அரேபியர்கள் (கடவுளுக்காக) அவர்கள் செலவிடுவதை ஒரு நஷ்டம் எனக் கருது கின்றனர், மேலும் ஒரு பேரழிவு உங்களைத் தாக்கக்கூடும் என்று எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டும் இருக்கின்றனர். அவர்கள் தான் மிகமோசமான பேரழிவிற்கு உள்ளாவார்கள். கடவுள் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.
[9:99]மற்ற அரேபியர்கள் கடவுள்-ன் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளவே செய்கின்றனர், மேலும் அவர்கள் செலவிடு வதை கடவுள் -ஐ நோக்கிய ஒரு சாதனமாக வும் தூதருக்கு ஆதரவளிக்கும் ஓர் உபாயமாக வும், கருதுகின்றனர். உண்மையில், அது அவர்களை மிக அருகில் கொண்டு வரவே செய்யும். கடவுள் தனது கருணைக்குள் நுழைய அவர்களை அனுமதிப்பார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[9:100]ஊரைத் துறந்து வெளியேறிய ஆரம்பகால முன்னோடிகளையும் (முஹாஜிரீன்), மேலும் அவர்களுக்கு அடைக்கலம் தந்த ஆதரவாளர் களையும் (அன்சார்), மேலும் நன்னெறியில் அவர்களைப் பின்பற்றியவர்களையும் பொறுத்த வரை, கடவுள் அவர்களைக் கொண்டு திருப்தி அடைந்தார், மேலும் அவர்களும் அவரைக் கொண்டு திருப்தி அடைந்தனர். அவர்களுக்காக ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களை அவர் தயார் செய்து வைத்துள்ளார், அங்கே அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். இதுவே மிகப்பெரும் மகத்தான வெற்றியாகும்.

நயவஞ்சகர்களுக்கு தண்டனை இருமடங்காக்கப்படும்

[9:101]உங்களைச் சுற்றியுள்ள அரேபியர்களில், நயவஞ்சகர்கள் இருக்கின்றனர். இன்னும், நகரவாசிகளிலும், நயவஞ்சகத்திற்குப் பழகிப் போனவர்கள் இருக்கின்றனர். அவர்களை உமக்குத் தெரியாது, ஆனால் நமக்கு அவர் களைத் தெரியும். அவர்களுக்கு தண்டனை யை நாம் இருமடங்காக்குவோம், அதன் பின்னர், இறுதியில் அவர்கள் பயங்கரமான தண்டனையில் போடப்பட்டவர்களாகி விடுவார்கள்.
அடிகுறிப்பு

[9:102]தங்கள் பாவங்களை ஒப்புக் கொள்ளும் மற்றவர்கள் இருக்கின்றனர்; அவர்கள் நல்ல செயல்களுடன் கெட்ட செயல்களைக் கலந்து விட்டனர். கடவுள் அவர்களை மீட்டுக் கொள் வார். ஏனெனில் கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[9:103]அவர்களைத் தூய்மைப் படுத்துவதற்காகவும், மேலும் அவர்களைப் புனிதப்படுத்துவதற் காகவும், அவர்களுடைய செல்வத்திலிருந்து ஒரு தர்மத்தை ஏற்றுக்கொள்வீராக. மேலும் அவர்களை ஊக்கப்படுத்துவீராக, ஏனெனில் உமது ஊக்கம் அவர்களுக்கு மறுவுறுதியைத் தரும். கடவுள் செவியேற்பவர், எல்லாம் அறிந் தவர்.
[9:104]கடவுள், தன்னை வழிபடுவர்களின் வருந்தித் திருந்துதலை ஏற்றுக் கொள்கின்றார், மேலும் தர்மங்களை ஏற்றுக் கொள்கின்றார், மேலும் கடவுள் தான் மீட்சி அளிப்பவர், மிக்க கருணை யாளர் என்பதை அவர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளவில்லையா?
[9:105]“நன்னெறியான செயல்களை செய்யுங்கள்; கடவுள் உங்கள் செயல்களைக் காண்பார், மேலும் தூதரும் நம்பிக்கையாளர்களும் அவ்வாறே செய்வார்கள். இறுதியில், எல்லா இரகசியங்களையும், அறிவிப்புகளையும் அறிந்தவரிடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள், அப்போது நீங்கள் செய்த ஒவ்வொன்றையும் அவர் உங்களுக்குத் தெரிவிப்பார்,” என்று கூறுவீராக.
[9:106]மற்றவர்கள் கடவுள்-ன் தீர்மானத்திற்காகக் காத்திருக்கின்றனர்; அவர்களை அவர் தண்டிக்கலாம், அல்லது அவர்களை அவர் மீட்டுக் கொள்ளலாம். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.

கடவுள் மற்றும் அவருடைய தூதரை எதிர்க்கும் மஸ்ஜிதுகள்

[9:107]இணைத் தெய்வ வழிபாட்டைத் தொடர்ந்து செயல்படுத்துவதன் மூலம் மஸ்ஜிதுகளை துஷ்பிரயோகம் செய்து, நம்பிக்கையாளர் களைப் பிளவுபடுத்தி, மேலும் கடவுள்-ஐயும் அவருடைய தூதரையும் எதிர்ப்பவர்களுக்கு வசதி செய்து தருபவர்கள் இருக்கின்றனர். அவர்கள் பக்திபூர்வமாக:“எங்கள் நோக்கங்கள் தூய்மையானவை!” என்று சத்தியம் செய் கின்றனர்: அவர்கள் பொய்யர்கள் என்று கடவுள் சாட்சியம் அளிக்கின்றார்.
அடிகுறிப்பு

அந்த மஸ்ஜிதுகளில் தொழக்கூடாது

[9:108]அத்தகையதொரு மஸ்ஜிதில் நீர் ஒரு போதும் தொழவேண்டாம். முதல் நாளிலிருந்தே நன்னெறியின் அடிப்படையில் நிர்மாணிக்கப் பட்டதொரு மஸ்ஜித் எதுவோ, அதுதான் உமது தொழுகைக்கு மிகவும் தகுதியானது. அதனுள் தூய்மைப்படுத்தப்படுவதை விரும்பும் மக்கள் இருக்கின்றனர். தங்களைத் தூய்மைப் படுத்திக் கொள்ள விரும்புபவர்களையே கடவுள் நேசிக்கின்றார்.
[9:109]சிறந்தவர், தனது கட்டடத்தை கடவுள் மீது கொண்ட பக்தியின் அடிப்படையிலும், அவருடைய திருப்தியைப் பெறுவதற்காகவும் நிர்மாணிக்கின்ற ஒருவரா, அல்லது தன்னுடன் சேர்ந்து நரக நெருப்பில் விழுந்து விடக் கூடியவாறு, நொறுங்கிக் கொண்டிருக்கும் ஒரு செங்குத்தான மலையின் மீது தனது கட்டடத்தை நிர்மாணிக்கின்ற ஒருவனா? வரம்பு மீறுகின்ற மக்களை கடவுள் வழிநடத்துவதில்லை.
[9:110]அவர்களால் நிர்மாணிக்கப்பட்ட இத்தகைய தொரு கட்டடம் அவர்களுடைய இதயங்கள் அசைவற்றதாகி விடும்வரை, அவர்களுடைய இதயங்களில் சந்தேகத்திற்கானதொரு மூலா தாரமாக தொடர்ந்து இருக்கின்றது. கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.

மிகவும் இலாபகரமான முதலீடு

[9:111]நம்பிக்கையாளர்களிடமிருந்து அவர்களுடைய வாழ்வுகளையும் மேலும் அவர்களுடைய செல்வங்களையும் சுவனத்திற்குப் பகரமாக, கடவுள் விலைக்கு வாங்கிக் கொண்டார். இவ்வாறாக, அவர்கள் கடவுள்-க்காக சண்டை யிடுவார்கள், கொல்வதற்கு விரும்புவார்கள், மேலும் கொல்லப்படுவார்கள். தோராவிலும், சுவிஷேசத்திலும் மற்றும் இந்தக் குர்ஆனிலும் அவருடைய சத்திய வாக்குறுதி இத்தகையதே-மேலும் தனது வாக்குறுதியை கடவுள்-ஐ விடச் சிறந்த முறையில் நிறை வேற்றுபவர் வேறு யார்? இத்தகையதொரு பரிமாற்றத்தைச் செய்து கொள் வதற்காக நீங்கள் மகிழ்ச்சியடைய வேண்டும். இதுவே மகத்தான மாபெரும் வெற்றியாகும்.

நம்பிக்கையாளர்கள்

[9:112]அவர்கள் வருந்தித்திருந்துபவர்கள், வழிபாடு செய்பவர்கள், புகழ்பவர்கள், தியானம் செய் பவர்கள், குனிபவர்கள் மற்றும் சிரம் பணிபவர்கள், நன்னெறியை ஆதரிப்பவர்கள், மேலும் தீமையைத் தடுப்பவர்கள், மேலும் கடவுள்-ன் சட்டங்களைப் பாதுகாப்பவர்கள். இத்தகைய நம்பிக்கையாளர் களுக்கு நற்செய்தி கூறுவீ ராக.

கடவுளின் விரோதிகளை நீங்கள் கைவிட்டு விடவேண்டும்: ஆப்ரஹாம் தன் தந்தையைக் கைவிட்டு விட்டார்

[9:113]வேதம் வழங்கப்பட்டவரோ, அன்றி நம்பிக்கை கொண்டவர்களோ இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கேட்கக் கூடாது, அவர்கள் நரகத்திற்கென விதிக்கப் பட்டவர்கள் என்பதை அவர்கள் தெளிவாகப் புரிந்து கொண்டு விட்ட பின்னர், அவர்கள் மிகவும் நெருங்கிய உறவினர்களானாலும் சரியே.
[9:114]ஆப்ரஹாம் தன் தந்தைக்காகப் பாவ மன்னிப்புக் கோரியதற்கான ஒரே காரணம், அவர் அவ்விதம் செய்வதாக அவரிடம் வாக்குறுதி செய்திருந்தது மட்டுமே. ஆனால் அவர் கடவுள்-ன் ஒரு விரோதி என்பதை அவர் அடையாளம் கண்டு கொண்டவுடன், அவர் அவரைக் கைவிட்டு விட்டார். ஆப்ரஹாம் அசாதாரணமான கனி வுடையவராகவும், இரக்கம் மிக்கவராகவும் இருந்தார்.
[9:115]எந்த மக்களையும் கடவுள் வழிநடத்திவிட்ட பின்னர் அவர்கள் எதனை எதிர்பார்க்க வேண்டும் என்பதை முதலில் சுட்டிக்காட்டாமல் அவர்களை வழிகேட்டில் அனுப்புவதில்லை. கடவுள் அனைத்து விஷயங்களையும் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.
[9:116]வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் கடவுள்-க்குரியது. அவர் வாழ்வையும் மரணத் தையும் கட்டுப்படுத்துகின்றார். கடவுள்-ஐத் தவிர உங்களுக்கு ஓர் இரட்சகராகவும் எஜமான ராகவும் எவரும் இல்லை.
[9:117]கடவுள் வேதம் வழங்கப்பட்டவரையும், ஊரைத் துறந்து வந்தவர்களையும் (முஹாஜிரீன்), கஷ்ட காலங்களில் அவரைப் பின்பற்றி அவர்களுக்கு அடைக்கலம் தந்து உபசரித்தவர்களையும் (அன்ஸார்), மீட்டுக் கொண்டார். அப்போது தான் அவர்களில் சிலருடைய இதயங்கள் கிட்டத்தட்டத் தடுமாறி விட்டன. ஆனால் அவர்களை அவர் மீட்டுக் கொண்டார், ஏனெனில் அவர்கள் பால் இரக்கம் கொண்டவராகவும், மிக்க கருணை யாளராகவும் அவர் இருக்கின்றார்.

தூதரைக் கைவிடக் கூடாது

[9:118]பின்தங்கிய மூவரும் கூட (மீட்டுக் கொள்ளப் பட்டனர்). அவர்கள் தங்களைப் பற்றிய எல்லா நம்பிக்கைகளையும் கிட்டத்தட்ட கைவிட்டு விடும் அளவிற்கு, விசாலமான இந்தப் பூமி அவர்களுக்கு மிகவும் நெருக்கடியானதாகி விட்டது. இறுதியில், கடவுள்-இடம் சென்றாலன்றி,அவரிடமிருந்து தப்பிப்பதற்கில்லை என்பதை அவர்கள் தெளிவாக உணர்ந்து கொண்டனர். அவர்கள் வருந்தித் திருந்தும் பொருட்டு, அவர் பின்னர் அவர்களை மீட்டுக் கொண்டார். கடவுள் மீட்பவர், மிக்க கருணையாளர்.
[9:119]நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள் இடம் பயபக்தியுடன் இருக்க வேண்டும், மேலும் உண்மையாளர்களுடன் இருக்க வேண்டும்.
[9:120]நகரவாசிகளோ, அன்றி அவர்களைச் சூழ்ந்து இருக்கும் அரேபியர்களோ, கடவுள்-ன் தூதரிட மிருந்து, (அவர் போருக்காக புறப்படும் போது) பின்தங்கிக் கொள்வதை தேடக் கூடாது. அன்றி யும் அவருக்கு ஆதரவளிப்பதை விடத் தங்களு டைய சொந்த விவகாரங்களுக்கு அவர்கள் முன்னுரிமை தரக் கூடாது. இது ஏனெனில், அவர்கள் கடவுள்-க்காக எந்த அளவிலாவது தாகத்தையோ அல்லது கடினமான உழைப்பையோ, அல்லது பசியையோ அனுபவிப்பார்களேயானால், அல்லது நம்பமறுப்பவர்களுக்கு கோபமூட்டும் ஓர் அடியை எடுத்து வைத்தாலோ அல்லது எதிரியின் மீது ஏதேனும் கஷ்டத்தை ஏற்படுத்தினாலோ அது அவர்களுக்குரிய ஒரு வரவாக பதியப்படாமல் இருப்பதில்லை. நன்னெறியான செயல்கள் செய்பவர்களுக்குப் பிரதிபலன் அளிக்க கடவுள் ஒரு போதும் தவறுவதில்லை.
[9:121]அன்றியும் அவர்கள் எந்த அளவில் செலவு களுக்குள்ளானாலும், சிறியதோ அல்லது பெரிய தோ, அன்றி அவர்கள் எந்தப் பள்ளத் தாக்கைக் கடந்தாலும், அவர்களுக்குரிய வரவாக பதியப் படாமல் இருப்பதில்லை. கடவுள் நிச்சயமாக அவர்களுடைய செயல்களுக்காக அவர்களுக்கு தாராளமாக வெகுமதியளிப்பார்.

மார்க்கக் கல்வியின் முக்கியத்துவம்

[9:122]நம்பிக்கையாளர்கள் தயாராகிப் புறப்படும் போது, அவர்கள் எல்லோரும் அவ்வாறு செய்துவிட வேண்டாம். ஒவ்வொரு பிரிவி லிருந்தும் சிலர், தங்கள் நேரத்தை அர்ப்பணித் துக் கொண்டு மார்க்கத்தைக் கற்றுக் கொள் வதற்காக ஒன்று திரண்டு புறப்பட வேண்டும். இவ்விதமாக, அவர்கள் திரும்பி வரும்போது தங்கள் சமூகத்தாரிடம், அவர்கள் மார்க்கத் தை தெரிந்து கொண்டவர்களாக தொடர்ந்து இருந்து, அறிவைப்பரப்ப இயலும்.

நம்ப மறுப்பவர்கள்

[9:123]நம்பிக்கை கொண்டோரே, உங்களைத் தாக்கும் நம்ப மறுப்பவர்களிடம் நீங்கள் சண்டையிட வேண்டும்-அவர்கள் உங்களிடம் கடுமையைக் காணட்டும்-மேலும் கடவுள் நன்னெறியாளர் களுடன் இருக்கின்றார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

நயவஞ்சகர்கள்

[9:124]ஒரு சூரா வெளிப்படுத்தப்பட்டபோது, அவர் களில் சிலர், “இந்த சூரா உங்களில் எவரேனும் ஒருவருடைய விசுவாசத்தைப் பலப்படுத் தியதா?” என்று கூறுவார்கள். உண்மையில், அது நம்பிக்கை கொண்டோரின் விசுவாசத்தைப் பலப்படுத்தவே செய்தது, மேலும் அவர்கள் எந்த ஒரு வெளிப்பாட்டிலும் மகிழ்ச்சியே அடைகின்றனர்.
[9:125]தங்கள் இதயங்களில் சந்தேகங்களைத் தாங்கி இருப்போரைப் பொறுத்தவரை, அது உண்மை யில் அவர்களுடைய அசுத்தத்துடன் மேலும் அசுத்தத்தையே கூட்டியது, மேலும் அவர்கள் நம்ப மறுப்பவர்களாக மரணித்தார்கள்.
[9:126]ஒவ்வொரு வருடமும் ஒரு முறையோ அல்லது இருமுறைகளோ அவர்கள் கடினமான சோதனையில் கஷ்டப்படுகின்றனர் என்பதை அவர்கள் காணவில்லையா? ஆயினும், அவர் கள் வருந்தித்திருந்த எப்பொழுதும் தவறி விடுகின்றனர், மேலும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவும் தவறிவிடுகின்றனர் அல்லவா?

ஒரு சரித்திரக் குற்றத்தின் திரை விலக்கப் படுகின்றது: கடவுளின் வார்த்தையோடு புகுந்து மாற்றம் உண்டு பண்ணுதல். கடவுள் மறுக்க முடியாத சான்றுகளை வழங்குகின்றார்

[9:127]ஒரு சூரா வெளிப்படுத்தப்பட்ட போதெல்லாம், அவர்களில் சிலர்: “உங்களை எவரேனும் ஒருவர் பார்க்கின்றாரோ? என்று கூறுவதைப் போல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அதன் பின்னர் அவர்கள் சென்று விட்டனர். இவ்விதமாக, கடவுள் அவர்களுடைய இதயங் களைத் திசை திருப்பி விட்டார், ஏனெனில் அவர்கள் புரிந்து கொள்ளாத மக்களாக இருக்கின்றனர்.
அடிகுறிப்பு