சூரா 91: சூரியன் (அல்-ஷம்ஸ்)
[91:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[91:1] சூரியன் மற்றும் அதன் பிரகாசத்தின் மீது சத்தியமாக.
[91:2] அதனை பின் தொடர்கின்ற சந்திரன்.
[91:3] வெளிப்படுகின்ற பகல்.
[91:4] மூடிக் கொள்கின்ற இரவு.
[91:5] ஆகாயமும் மேலும் அதனைக் கட்டமைத்த அவரும்.
[91:6] பூமியும் மேலும் அதனைக் காப்பாற்றுகின்ற அவரும்.
[91:7] ஆன்மாவும் மேலும் அதனை படைத்த அவரும்.
[91:8] பின்னர் அதற்கு கெட்டது எது, மேலும் நல்லது எது என்று காட்டினார்.
[91:9] அதனை மீட்டுக் கொள்பவர் வெற்றியடைந் தவர் ஆவார்.
[91:10] அதனை அலட்சியப்படுத்துபவன் தோல்வி அடைந்தவன் ஆவான்.
[91:11] தமூதுகளின் நம்பிக்கையின்மை அவர்கள் வரம்பு மீற காரணமானது.
[91:12] அவர்களில் மிகவும் மோசமானவனை அவர்கள் பின்பற்றினர்.
[91:13] கடவுள்-ன் தூதர் அவர்களிடம், “ இது கடவுள்-ன் ஒட்டகம் ஆகும்; இப்பெண் ஒட்டகத்தை நீரருந்த விட்டு விடுங்கள்” என்று கூறினார்.
[91:14] அவர்கள் அவரை நம்ப மறுத்தனர் மேலும் அதனை வெட்டி விட்டனர். பின்னர் அவர்களு டைய இரட்சகர் அவர்களுடைய பாவத்திற்காக அவர்களைப் பழி வாங்கினார் மேலும் அவர்களை அழித்தார்.
[91:15] இருப்பினும், அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களும் கவனம் அற்றவர்களாகவே இருக்கின்றனர்.