சூரா 9க்குரிய அடிக்குறிப்புகள்

*9:1 இந்த சூராவில் பஸ்மலாஹ் இடம் பெறாமலிருப்பது, இந்த சூரா சிதைக்கப்பட்டிருக்கின்றது என்பதற்குக் குர்ஆனை இயற்றிய சர்வ வல்லமையுடையவரிடமிருந்து கிடைக்கப் பெற்ற ஓர் ஆழ்ந்த அடையாளம் மட்டுமல்ல, அது தன்னளவிலேயே ஒரு பிரமிப்பூட்டும் அற்புதத்தின் உதாரணமாகத் திகழ்கின்றது. விபரங்களை பின்இணைப்பு 24 & 29ல் பார்க்கவும்.

*9:24 எந்த மனிதனும் உண்மையில் நம்பிக்கை கொள்வதற்கும், கடவுளுக்கு மட்டுமே அர்ப்பணித்தவாறு வழிபாடு செய்வதற்கும் எதிராக மன வேறுபாடுகள் அழுத்திக் கொண்டிருப்பதால் (12:103, 106) , ஒரு குடும்பம் முழுவதும் நம்பிக்கை கொள்வதைக் காணக்கிடைப்பதரிது . இவ்விதமாக , அதிகமான நம்பிக்கையாளர்கள் இந்த கேள்வியைச் சந்திக்க வேண்டியதாகி விட்டது: “ நானா , அல்லது கடவுள் மற்றும் அவருடைய தூதரா?” நம்பிக்கையாளர்களுக்கு இந்த கேள்வியானது துணைகளாலோ, அல்லது பெற்றோர்களாலோ, அல்லது குழந்தைகளாலோ, அல்லது இதுபோன்ற பலராலோ தவறாமல் முன்வைக்கப்படுகின்றது. தவறாமல் நம்பிக்கையாளர்கள் சரியான தேர்வையே செய்கின்றனர். இது எல்லா நம்பிக்கையாளர்களுக்கும் ஒரு கட்டாய சோதனையாகும் (29:2).

*9:24 குர்ஆனின், கணிதரீதியான ஆதாரம் கடவுளின் உடன்படிக்கைத் தூதரைக் குறிப்பாகச் சுட்டிக்காட்டுகின்றது. “ ரஷாத்” என்பதன் எண்மதிப்பு (505) ம், கலீஃபா என்பதன் எண்மதிப்பு (725) ம், வசன எண் (24)ம், ஒன்று கூட்டப்பட்டால் நாம் பெறுவது, 505+725+24=1254=19 X 66.

* 9:31 நிரூபிக்கப்பட்ட இவ்வேதத்தில் கற்பிக்கப்பட்டுள்ளபடி, கடவுளை மட்டும் வழிபடுவதையும், மேலும் கடவுளுடைய வார்த்தைகளை மட்டும் உறுதியாகப் பின்பற்றுவதையும் பற்றி “ முஸ்லிம் அறிஞர்”களிடம் நீங்கள் ஆலோசிப்பீர்களானால் , அதற்கு எதிராகவே அவர்கள் உங்களுக்கு அறிவுரை கூறுவார்கள். இயேசுவின் உண்மை நிலை குறித்து போப்பிடம் நீங்கள் ஆலோசிப்பீர்களானால் , திரித்துவத்தை பின்பற்றும்படி அவர் உங்களுக்குஅறிவுரை கூறுவார். நீங்கள் கடவுளின் போதனைக்கு எதிரான “ முஸ்லிம் அறிஞர்களின்” அறிவுரைக்குக் கீழ்ப்படிந்தாலோ, அல்லது கடவுளுக்குப் பதிலாக போப்பின் அறிவுரையை எடுத்துக் கொண்டாலோ, நீங்கள் கடவுளுக்கு பதிலாக இந்த சமயத் தலைவர்களைத் தெய்வங்களாக அமைத்துக் கொண்டவர்களாக ஆகி விடுவீர்கள்.

* 9:33 இவ்வறிக்கையானது, ஓர் எழுத்துக் கூட மாறாமல், இங்கும், 61:9லும் இடம் பெறுகின்றது. நாம் ரஷாத் -ன் எழுத்தெண் மதிப்பான (505)ஐயும், அதனைத் தொடர்ந்து கலீஃபாவின் எழுத்தெண்மதிப்பான (725) ஐயும், அதனைத் தொடர்ந்து இவ்வறிக்கை இடம் பெறக்கூடிய சூரா மற்றும் வசன எண்களாகிய (9:33 மற்றும் 61:9) ஐயும் எழுதினால், நமக்குக் கிடைப்பது 505725933619 ஆகும், இவ்வெண் ஒரு 19ன் பெருக்குத் தொகையாகும். இங்கு தூதர் என்பது ரஷாத் கலீஃபாதான் என்பதை இது உறுதிப்படுத்துகின்றது. இன்னும் அதிகமாக, 9:33லிருந்து 61:9வரையுள்ள வசனங்களின் எண்ணிக்கையும் (3902) அத்துடன் 9+33+61+9+ரஷாத் கலீஃபாவின் எண்மதிப்பு (1230) ஐயும் கூட்டினால், நாம் பெறுவது 5244 ஆகும். இதுவும் 19ன் பெருக்குத் தொகையாகும். 9:33 மற்றும் 61:9ன் ஒவ்வொரு எழுத்தின் எழுத்தெண்மதிப்பையும் கூட்டிக்கொண்டே வந்தால் கிடைக்கும் மொத்த எண்மதிப்பு 7858. இந்த எண்ணுடன் இருவசனங்களிலும் உள்ள எழுத்துக்கள் (120) ஐயும் 9:33 லிருந்து 61:9 வரையிலான வசனங்களின் எண்ணிக்கை (3902) ஐயும் , “ரஷாத் கலீஃபா”வின் மதிப்பு (1230) ஐயும் கூட்டினால், நமக்கு கிடைப்பது 7858 +120+3902+1230 = 13110 = 19 ஓ 690 இதுவும் 19ன் பெருக்கு தொகையே. பின் இணைப்பு 1,2 மற்றும் 26 ஐ பார்க்கவும்.

*9:36 “மாதம்” எனும் வார்த்தை குர்ஆனில் 12 முறையும், “நாள்” எனும் வார்த்தை 365 முறையும்குறிப்பிடப்பட்டுள்ளது.

* 9:37 சீர்கெட்ட முஸ்லிம் உலகின் கருத்துப்படி புனித மாதங்கள் ரஜப், ஜுல் - காயிதா, ஜுல் - ஹிஜ்ஜா மற்றும் முஹர்ரம் (இஸ்லாமிய காலண்டரின் 7வது 11வது 12வது மற்றும் 1வது மாதங்கள்) . ஆயினும் குர் ஆனைக் கவனமாக ஆராய்ந்தால் அவை ஜீல் ஹிஜ்ஜா, முஹர்ரம்,ஸபர் மற்றும் ரபியுல் அவ்வல் (12வது, 1வது, 2வது, 3வது) மாதங்கள் ஆகத்தான் இருக்க வேண்டும் என்பது வெளிப்படுகின்றது. 2:196 ன் அடிக்குறிப்பைப் பார்க்கவும்.

* 9:54 இது, குர்ஆனுக்கு முன்னரே தொடர்புத் தொழுகைகள் (ஸலாத்) வழக்கத்தில் இருந்தது என்பதற்கான மற்றுமொரு சான்றாகும். மேலும் அது ஆப்ரஹாமின் வழிவந்தது. (21:73 ஐ பார்க்கவும்) மேலும் இது, “தொடர்புத் தொழுகைகளின் விபரங்கள் குர்ஆனில் எங்கு கூறப்பட்டுள்ளது?” என்று கேட்பதன் மூலமாக, குர்ஆன் முழுமையானது, மேலும் முழுவதும் விவரிக்கப்பட்டது என்ற கடவுளின் அறிவிப்பிற்கெதிராக அறை கூவல் விடுபவர்களைத் திகைக்கச் செய்கின்றது. (6:19,38,114)

*9:80 முஹம்மது தன் சொந்தப் பெற்றோரின் உடன்பிறந்த சகோதரர்கள் மற்றும் பெற்றோரின் உடன்பிறந்தோருடைய மக்கள் ஆகியோரின் சார்பாகக் கூட பரிந்துரை செய்ய முடியாது எனும்போது, அவரை ஒருபோதும் சந்தித்திராத அந்நியர்களை, அவர் தங்கள் சார்பாகப் பரிந்துரை செய்வார் என்று எண்ண வைப்பது எது? ஆப்ரஹாம் தன் தந்தையின் சார்பாகப் பரிந்துரை செய்ய முடியாது. அன்றியும் நோவா தன் மகனின் சார்பாகவும் பரிந்துரை செய்ய முடியாது (11:46 & 60:4).

*9:101 நயவஞ்சகர்கள் நம்பிக்கையாளர்களுடன் அமர்ந்து கொண்டு , தூதுச் செய்தியையும், சான்றுகளையும் கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்து விட்டுப், பின்னர் தங்களுடைய விஷமத்தனமான சந்தேகங்களைப் பரப்பி விடுகின்றனர். இப்பொழுதும், எப்பொழுதும் அவர்கள் இருமடங்கு தண்டனையைப் பெறுவார்கள் என்பது குர்ஆனின் ஒரு விதியாகும்.

*9:107 வழிபாடுகளைக் கடவுளுக்கு மட்டும் முற்றிலும் அர்ப்பணிக்காத எந்த ஒரு மஸ்ஜிதும் சாத்தானைச்சார்ந்ததே, கடவுளைச் சார்ந்ததல்ல. உதாரணமாக, ஆப்ரஹாம், முஹம்மது மற்றும் / அல்லது அலி ஆகியோரின் பெயர்களை “அதான்” மற்றும் அல்லது தொழுகைகளில் உச்சரிப்பது 2:136, 2:285, 3:84, & 72:18 ஆகியவற்றில் உள்ள கடவுளின் கட்டளைகளை மீறுவதாகும். துரதிர்ஷடவசமாக இது, சீர்கெட்டுப்போன முஸ்லிம் உலகம் முழுவதும் நிறைந்துள்ள பொதுவானதொரு இணைத்தெய்வ வழிபாட்டு முறையாக இருக்கின்றது.

*9:1 & *9:127 பஸ்மலாஹ் முன்னால் சேர்க்கப்படாத ஒரே சூரா இதுதான். 14 நுற்றாண்டுகளாகக் குர்ஆனுடைய மாணவர்களுக்கு இந்த விசித்திரம் புதிராக இருந்தது. மேலும் இதனை விளக்குவதற்கு ஏராளமான கோட்பாடுகள் முன் வைக்கப்பட்டன. கவனத்தை கவரும் விதமாக பஸ்மலாஹ் இங்கு இல்லாமலிருப்பது மூன்று நோக்கங்களை நிறைவேற்றுகின்றது என்பதை நாம் இப்போது தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். 1) இரண்டு போலி வசனங்களை (9:128-129) சேர்ப்பதன் மூலம் இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்கள் குர்ஆனைச் சிதைப்பதற்கென விதிக்கப்பட்டிருந்தனர் என்பதை முன்னரே அறிவிக்கும் ஒரு தெய்வீகப் பிரகடனத்தின் அடையாளமாக இது திகழ்கின்றது. 2) குர்ஆனில் கடவுளின் கணிதக் குறியீட்டின் பணிகளில் ஒன்றான, அதாவது எந்த மாற்றத்திற்கும்எதிராகக் குர்ஆனைப் பாதுகாப்பது என்பதை, நடைமுறையில் செய்து காட்டுகின்றது. 3) குர்ஆனுடைய குறியீட்டிற்கு கூடுதலான அற்புத அம்சங்களை இது வழங்குகின்றது. அவற்றின் அசாதாரணமான முக்கியத்துவம் காரணமாக பின் இணைப்பு 24 மற்றும் 29ல் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உடனடியாகக் கவனிக்கப்பட்ட ஒரு விஷயம், சூரா 9ன்இறுதிவரை இடம் பெறும் “கடவுள்” என்ற வார்த்தையின் எண்ணிக்கை 1273 (19 X 67) ஆகும். போலியான இரு வசனங்களான 128&129ம் சேர்த்துக் கொள்ளப்பட்டால் இந்த அற்புத நிகழ்வும் இன்னும் பலவும் மறைந்து போய் விடும்.