சூரா 15: அல்-ஹிஜ்ர் பள்ளத்தாக்கு (அல்-ஹிஜ்ர்)
[15:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[15:1] அ.ல.ர.* இவை (இந்த எழுத்துக்கள்) இந்த வேதத்தின் சான்றுகளாகும்; ஆழ்ந்ததொரு குர்ஆன்.
அடிகுறிப்பு

[15:2] மிக நிச்சயமாக, நம்ப மறுத்தவர்கள், தாங்கள் அடிபணிந்தோராக இருந்திருக்க வேண்டுமே என்று விரும்புவார்கள்.
[15:3] அவர்கள் உண்ணட்டும், சுகமனுபவிக்கட்டும், மேலும் அவர்களுடைய விருப்பமான எண்ணங் களில் குருட்டுத்தனமாக இருக்கட்டும்; அவர்கள் கண்டு கொள்வார்கள்.
[15:4] ஒரு குறிப்பிட்ட, முன்னரே தீர்மானிக்கப்பட்ட நேரத்திற்கு ஏற்பவே அன்றி, நாம் எந்தச் சமூத்தையும் ஒருபோதும் அழித்ததில்லை.
[15:5] எந்தச் சமூகத்தின் முடிவும், ஒருபோதும் முற்படுத்தப்படவோ அல்லது தாமதப்படுத்தப் படவோ இயலாது.
[15:6] அவர்கள் கூறினர், “இந்த நினைவூட்டலைப் பெற்றவரே, நீர் புத்தி சுவாதீனமில்லாதவர்.
[15:7] “நீர் உண்மையாளராக இருந்தால், நீர் ஏன் வானவர்களைக் கீழே கொண்டு வரவில்லை?”
[15:8] குறிப்பிட்ட காரியங்களுக்காகவே அன்றி வானவர்களை நாம் கீழே அனுப்புவதில்லை. இல்லையென்றால், ஒருவரும் அவகாசம் அளிக்கப்பட்டவர்களாக இருக்க மாட்டார்கள்.

கடவுளின் உடன்படிக்கைத் தூதர்*

[15:9] நிச்சயமாக, நாம் தான் இந்நினைவூட்டலை வெளிப்படுத்தி இருக்கின்றோம், மேலும், நிச்சய மாக, நாம் இதனைப் பாதுகாப்போம்*.
அடிகுறிப்பு

[15:10] கடந்துபோன சமூகங்களுக்கு உமக்கு முன்னர் நாம் (தூதர்களை) அனுப்பியிருக்கின்றோம்.
[15:11] ஒவ்வொரு முறையும் ஒரு தூதர் அவர்களிடம் சென்ற போது, அவர்கள் அவரை கேலி செய்தனர்.
[15:12] இவ்விதமாக நாம் குற்றவாளிகளின் மனங் களைக் கட்டுப்படுத்துகின்றோம்.
[15:13] அதன் விளைவாக, அவர் மீது அவர்களால் நம்பிக்கை கொள்ள இயலாது. கடந்து போன தலைமுறையினரிலிருந்தே இதுதான் வழி முறையாக இருந்து வந்துள்ளது.
[15:14] அவர்கள் ஏறுவதற்காக, விண்ணிற்குள் ஒரு வாயிலை அவர்களுக்காக நாம் திறந் திருந்தாலும்;
[15:15] அவர்கள், “எங்களுடைய கண்கள் ஏமாற்றப் பட்டு விட்டன. நாங்கள் சூனியம் செய்யப் பட்டவர்களாகி விட்டோம்” என்று கூறுவார்கள்.
[15:16] விண்ணில் நட்சத்திர மண்டலங்களை நாம் அமைத்தோம், மேலும் காண்பவர்களுக்கு அழகாக அதனை ஆக்கினோம்.
[15:17] மேலும் விரட்டப்பட்ட ஒவ்வொரு சாத்தானுக் கெதிராகவும் அதனை நாம் பாதுகாத்தோம்.
[15:18] அவர்களில் எவரேனும் கவனித்துக் கேட்பதற் காக அதனருகில் இரகசியமாக நெருங் கினால், சக்தி மிக்கதொரு ஏவுகணை அவர் களைப் பின்னால் துரத்தும்.
[15:19] பூமியைப் பொறுத்தவரை, நாம் அதனை நிர்மாணித்தோம், மேலும் நிலைப்படுத்து பவைகளை (மலைகளை) அதன்மீது அமைத் தோம், மேலும் அதன் மீது முற்றிலும் சமச்சீராக ஒவ்வொன்றையும் நாம் வளர்த்தோம்.
[15:20] உங்களுக்கும், மேலும் நீங்கள் வாழ்வாதார மளித்திடாத படைப்புகளுக்கும், வசிக்கத்தக் கதாக * நாம் அதனை ஆக்கினோம்.
அடிகுறிப்பு

[15:21] அதில் உள்ள எந்த ஒன்றும், எல்லையற்ற அளவில், நமக்குச் சொந்தமாக இல்லாமல் இல்லை. ஆனால் நாம் அவற்றை மிகச் சரியான அளவில் கீழே இறக்கி அனுப்புகின்றோம்.
[15:22] மேலும் மகரந்தச் சேர்க்கை செய்பவைகளாகக் காற்றுகளை நாம் அனுப்புகின்றோம், மேலும் நீங்கள் அருந்துவதற்காக விண்ணிலிருந்து தண்ணீரைக் கீழிறங்கி வரச் செய்கின்றோம். இல்லையெனில், சுவைக்கத்தக்கதாக அதனை வைத்திருக்க உங்களால் இயலாது.
[15:23] நாம் தான் வாழ்வையும், மரணத்தையும் கட்டுப் படுத்துகின்றோம், மேலும் நாமே இறுதியான வாரிசுகள் ஆவோம்.
[15:24] மேலும், உங்களில் முன்னேறிச் செல்பவர்களை முற்றிலும் நாம் அறிவோம், மேலும் பின்வாங்கிச் செல்பவர்களையும் முற்றிலும் நாம் அறிவோம்.
[15:25] நிச்சயமாக உமது இரட்சகர் அவர்களை ஒன்று கூட்டுவார். அவர் ஞானம் மிக்கவர், எல்லாம் அறிந்தவர்.

மனித இனம்

[15:26] குயவனின் களிமண்ணைப் போன்ற, பழமை யான சேற்றில் இருந்து மனிதனை நாம் படைத் தோம்.
[15:27] ஜின்களைப் பொறுத்தவரை, அதற்கு முன்னர், கொழுந்து விட்டெரியும் நெருப்பிலிருந்து, அவற்றை நாம் படைத்தோம்.
[15:28] உமது இரட்சகர் வானவர்களிடம் கூறினார், “குயவனின் களிமண்ணைப் போன்ற, பழமையான சேற்றில் இருந்து ஒரு மனிதனை நான் படைக் கின்றேன்.
[15:29] “அவரை நான் பூரணப்படுத்தி, மேலும் என் ஆவியில் இருந்து அவருக்குள் நான் ஊதியவுடன், அவருக்கு முன்னர் நீங்கள் சிரம்பணிந்து விழுந்திட வேண்டும்”.
[15:30] வானவர்கள் சிரம்பணிந்து விழுந்தனர்; அவர்கள் அனைவரும்,
[15:31] (சாத்தான்) இப்லீஸைத் தவிர. சிரம் பணிந்தவர் களுடன் இருந்திட அவன் மறுத்து விட்டான்.
[15:32] அவர், “(சாத்தான்) இப்லீஸே, சிரம் பணிந் தவர்களுடன் நீ ஏன் இருக்கவில்லை?” என்று கூறினார்.
[15:33] அவன், “குயவனின் களிமண்ணைப் போன்ற, பழமையான சேற்றில் இருந்து நீர் படைத்த ஒரு மனிதர் முன், நான் சிரம் பணிவதற்கில்லை” என்று கூறினான்.
[15:34] அவர் கூறினார், “ஆகையால், நீ கண்டிப்பாக வெளியேறியாக வேண்டும்; நீ விரட்டப்பட்டவனாக இருக்கின்றாய்.
[15:35] “தீர்ப்பளிக்கப்படும் நாள் வரை எனது கண்டனத்திற்கு நீ உள்ளாகி விட்டாய்”.
[15:36] அவன், “என் இரட்சகரே, அவர்கள் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் அளிப்பீராக” என்று கூறினான்.
[15:37] அவர் கூறினார், “உனக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
[15:38] “குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரம் வரை”.
[15:39] அவன் கூறினான், “என் இரட்சகரே, நான் வழிதவறிச் செல்வதை நீர் நாடிவிட்டதால், பூமியின் மீது நிச்சயமாக நான் அவர்களை வசீகரிப்பேன்; அவர்கள் அனைவரையும் நான் வழிகேட்டில் செலுத்தி விடுவேன்.
[15:40] “உம்மை வழிபடுபவர்களில் உமக்கு மட்டுமே முற்றிலும் அர்ப்பணித்துக் கொண்டவர்களைத் தவிர”.
[15:41] அவர் கூறினார், “இது மீற முடியாததொரு சட்டம் ஆகும்.
[15:42] “என்னுடைய அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமுமில்லை. உன்னைப் பின்பற்றும் வழிதவறியவர்கள் மீது மட்டுமே உனக்கு அதிகாரம் உள்ளது.
[15:43] “மேலும் அவர்கள் அனைவரையும் நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.
[15:44] “அதற்கு ஏழு வாயில்கள் உள்ளன. ஒவ்வொரு வாயிலும் அவர்களில் ஒரு குறிப்பிட்ட பங்கைப் பெற்றுக் கொள்ளும்.”
[15:45] நன்னெறியாளர்களைப் பொறுத்தவரை, தோட்டங் களையும், மற்றும் நீரூற்றுகளையும் அவர்கள் அனுபவிப்பார்கள்.
[15:46] அமைதி நிறைந்தவர்களாகவும், மேலும் பாதுகாப்புப் பெற்றவர்களாகவும் அதில் நுழையுங்கள்.
[15:47] அவர்களுடைய இதயங்களிலிருந்து பொறா மைகள் அனைத்தையும் நாம் அகற்றி விடு வோம். ஒரு குடும்பத்தினரைப் போல், அவர்கள் அருகருகில் உள்ள ஆசனங்கள் மீது இருப்பார்கள்.
[15:48] அங்கே அவர்கள் ஒருபோதும் எந்தக்களைப் பிற்கும் உள்ளாக மாட்டார்கள்; அங்கிருந்து அவர்கள் ஒருபோதும் வெளியேற்றப்படவும் மாட்டார்கள்.
[15:49] நானே மன்னிப்பவர், மிக்க கருணையாளர் என்பதை என் அடியார்களுக்குத் தெரியப் படுத்துவீராக.
[15:50] மேலும் எனது தண்டனையோ மிகவும் வலி நிறைந்த தண்டனை ஆகும்.

வானவர்கள் ஆப்ரஹாமைப் பார்க்கச் செல்கின்றனர்

[15:51] ஆப்ரஹாமின் விருந்தினர்களைப் பற்றி அவர்களுக்கு அறிவிப்பீராக.
[15:52] அவருடைய இல்லத்திற்குள் அவர்கள் நுழைந்த போது, அவர்கள், “அமைதி” என்று கூறி னார்கள், அவர், “நாங்கள் உங்களைப் பற்றி மிகவும் அஞ்சியவர்களாக இருக்கின்றோம்” என்று கூறினார்.
[15:53] அவர்கள் , “அஞ்சாதீர். நாங்கள் உமக்கு ஒரு நற்செய்தியை வைத்திருக்கின்றோம்: அறி வூட்டப்பெற்ற ஒரு மகன்“ என்று கூறினார்கள்.
[15:54] அவர், “நான் மிகவும் வயதானவராக இருக்கும்போது, இத்தகைய நற்செய்தியை எப்படி நீங்கள் எனக்குத் தர இயலும்? இப்பொழுதுமா இந்த நற்செய்தியை எனக்குத் தருகின்றீர்கள்?”என்று கூறினார்.
[15:55] அவர்கள், “நாங்கள் உமக்குத் தரும் நற்செய்தி உண்மையானதே; விரக்தியடைந்து விடாதீர்” என்று கூறினார்கள்.
[15:56] அவர், “வழிதவறியவர்களைத் தவிர, எவரும் தன் இரட்சகரின் கருணையில் விரக்தியடைய மாட்டார்கள்” என்று கூறினார்.
[15:57] அவர், “தூதர்களே, உங்களுடைய பணி என்ன?” என்று கூறினார்.
[15:58] அவர்கள் கூறினர், “குற்றம் புரிந்த மக்களிடம் நாங்கள் அனுப்பப்பட்டு இருக்கின்றோம்.
[15:59] “லோத்தின் குடும்பத்தாரைப் பொறுத்தவரை, அவர்கள் அனைவரையும் நாங்கள் காப்பாற்றி விடுவோம்.
[15:60] “ஆனால் அவருடைய மனைவியை அல்ல; அழிந்தவர்களுடன் இருந்திட அவள் விதிக்கப்பட்டுள்ளாள்.”

லோத்

[15:61] அத்தூதர்கள் லோத்தின் நகரத்திற்குச் சென்றனர்.
[15:62] அவர், “நீங்கள் அறிமுகமில்லாத மக்களாக இருக்கின்றீர்கள்” என்று கூறினார்.
[15:63] அவர்கள் கூறினர், “அவர்கள் சந்தேகப்பட்டுக் கொண்டிருப்பதை நாங்கள் உம்மிடம் கொண்டு வந்துள்ளோம்.
[15:64] “நாங்கள் சத்தியத்தையே உம்மிடம் கொண்டு வந்துள்ளோம்; நாங்கள் உண்மையாளர்களாக இருக்கின்றோம்.
[15:65] “இரவுப் பொழுதில் உமது குடும்பத்தினரை அழைத்துச் சென்று விட வேண்டும். அவர்களுக்குப் பின்னால் இருந்து கொள்ளும், மேலும் உங்களில் எவரும் திரும்பிப் பார்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும். கட்டளையிடப்பட்டபடி நேராகச் சென்று விடும்.”
[15:66] காலையில் அம்மக்கள் அழிக்கப்பட இருக் கின்றனர் என்கின்ற இக்கட்டளையை நாம் அவரிடம் சேர்ப்பித்தோம்.
[15:67] அந்த நகரத்து மக்கள் மகிழ்ச்சியுடன் வந்தார்கள்.
[15:68] அவர் கூறினார், “இவர்கள் எனது விருந் தாளிகள்; என்னைச் சங்கடத்திற்கு உள்ளாக் காதீர்கள்.
[15:69] “கடவுள்-ஐ அஞ்சுங்கள், மேலும் என்னைக் கேவலப் படுத்தாதீர்கள்.”
[15:70] அவர்கள், “எவரொருவருடனும் தொடர்பு கொள்ளக் கூடாது என நாங்கள் உம்மைத் தடுத்திருந்தோம் அல்லவா?” என்று கூறினார்கள்.
[15:71] அவர், “உங்களுக்கு வேண்டுமென்றால், இதோ என் மகள்கள் இருக்கின்றனர்” என்று கூறினார்.
[15:72] ஆனால், அந்தோ, அவர்களுடைய காமத்தால் அவர்கள் முற்றிலும் குருடர்களானார்கள்.
[15:73] அதன் விளைவாக, காலையில் அவர்களைப் பேரழிவு தாக்கியது.
[15:74] நாம் அதனைத் தலைகீழாகப் புரட்டினோம், மேலும் நாசம் விளைவிக்கும் பாறைகளை அவர்கள் மீது பொழிந்தோம்.
[15:75] அறிவுத்திறன் கொண்டோருக்கு இது ஒரு படிப்பினையாகும்.
[15:76] இதுவே எப்பொழுதும் வழிமுறையாக இருக்கும்.
[15:77] நம்பிக்கையாளர்களுக்கு இது ஓர் அத்தாட்சி யாகும்.
[15:78] வனத்தில் வசித்த மக்களும் வரம்பு மீறியவர் களாக இருந்தனர்.
[15:79] அதன் விளைவாக, அவர்களிடமிருந்து நாம் பழிக்குப்பழிவாங்கினோம், மேலும் இவ்விரு சமூகங்களும் முற்றிலும் பதியப்பட்டதாக உள்ளது.
[15:80] அல்-ஹிஜ்ர் சமூகத்தவரும் தூதர்களை நம்ப மறுத்தனர்.
[15:81] நம்முடைய வெளிப்பாடுகளை நாம் அவர் களுக்கு கொடுத்தோம், ஆனால் அவர்கள் அவற்றை அலட்சியம் செய்தனர்.
[15:82] மலைகளைக் குடைந்து அதிலிருந்து பாது காப்பான இல்லங்களை அமைத்துக் கொள்பவர்களாக அவர்கள் இருந்தனர்.
[15:83] காலையில் அவர்களைப் பேரழிவு தாக்கியது.
[15:84] அவர்கள் சேர்த்து வைத்தவை அவர்களுக்கு உதவி செய்து விடவில்லை.

உலகமுடிவு திரை விலக்கப்படுகின்றது*

[15:85] வானங்களையும் பூமியையும், மற்றும் அவற்றிற் கிடையில் உள்ள ஒவ்வொன்றையும், ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகவே அன்றி நாம் படைக்கவில்லை. உலக முடிவு வந்தே தீரும், எனவே கனிவுடன் அவர்களை அலட்சியம் செய்வீராக.
அடிகுறிப்பு

[15:86] உமது இரட்சகர்தான் படைத்தவர், எல்லாம் அறிந்தவர்.
[15:87] நாம் உமக்கு ஏழு ஜோடிகளையும், மேலும் மகத்தான குர்ஆனையும் தந்துள்ளோம்.
[15:88] மற்ற (தூதர்களுக்கு) நாம் வழங்கியவற்றின் மீது நீர் பொறாமை கொள்ளாதீர், மேலும் (நம்ப மறுப்பவர்களால்) துக்கமடையாதீர், மேலும் நம்பிக்கையாளர்களிடத்தில் உமது இறக்கை களைத் தாழ்த்திக் கொள்வீராக.
[15:89] மேலும், “நான் தெளிவாக எச்சரிப்பவரே ஆவேன்” என்று பிரகடனம் செய்வீராக.
[15:90] பிரிவினையாளர்கள் மீது நாம் நடவடிக்கை எடுப்போம்.
[15:91] அவர்கள் பாரபட்சத்துடன் மட்டுமே குர்ஆனை ஏற்றுக்கொள்கின்றனர்.
[15:92] உமது இரட்சகர் மீது ஆணையாக, அவர்கள் அனைவரையும் நாம் விசாரிப்போம்,
[15:93] அவர்கள் செய்த ஒவ்வொன்றைக் குறித்தும்.
[15:94] ஆகையால், உமக்குக் கொடுக்கப்பட்ட கட்டளைகளைச் செயல்படுத்துவீராக, மேலும் இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்களைப் புறக்கணித்து விடுவீராக.
[15:95] பரிகாசம் செய்பவர்களிடமிருந்து உம்மை நாம் காப்பாற்றிவிடுவோம்,
[15:96] அவர்கள் கடவுள்-உடன் மற்றொரு தெய்வத் தை அமைத்துக் கொள்கின்றனர். அவர்கள் நிச்சயமாகக் கண்டு கொள்வார்கள்.
[15:97] அவர்களுடைய கூற்றுக்களால் நீர் தொல்லைப் படக்கூடும் என்பதை நாம் முற்றிலும் நன்கறி வோம்.
[15:98] நீர் உமது இரட்சகரின் புகழைப் பாடவேண்டும், மேலும் சிரம் பணிந்தோருடன் இருந்திட வேண்டும்.
[15:99] மேலும், உறுதிப்பாட்டை* அடைந்திடும் பொருட்டு, உமது இரட்சகரை வழிபடுவீராக.
அடிகுறிப்பு