சூரா 17க்குரிய அடிக்குறிப்புகள்

2:30

*17:1 “மஸ்ஜிதுல் அக்ஸா” என்பதன் பொருள், “ சிரம் பணிதல் நடைபெறும் தொலைவிலுள்ள இடம்” என்பதாகும், அது பல நூறு கோடி ஒளி வருடங்கள் தள்ளி உள்ளது. குர்ஆன் வழங்கப்படுவதற்காக முஹம்மது, அவருடைய ஆன்மா, மேலான சுவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டார் என்பதை இவ்வசனம் நமக்கு தெரிவிக்கின்றது (2:185, 44:3, 53:1-18, & 97:1).

*17:13 பிறப்பிலிருந்து இறப்புவரை, ஓர் ஒளிநாடாவில் உள்ளதைப்போல், உங்கள் வாழ்க்கை ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும்போது, அதே பதிவு நமக்குக் கிடைக்கக்கூடியதாக ஆக்கப்படும். 57:22, & பின் இணைப்பு 14 ஐ பார்க்கவும்.

*17:46 “மட்டும்” என்கின்ற அரபி வார்த்தையானது 7:70, 39:45, 40:12 & 84 மற்றும் 60:4, ஆகிய வசனங்களில் கடவுளைக் குறிக்கின்றது. இந்த எண்களை நீங்கள் கூட்டினால் உங்களுக்கு கிடைப்பது 361, 19 X 19. ஆனால் குர்ஆனைக் குறிக்கின்ற, 17:46ஐ நீங்கள் உட்படுத்தினால், கூட்டுத்தொகை 19ன் பெருக்குத் தொகையாகாது, ஆகையால் 17:46ல் உள்ள “ மட்டும்” என்பது குர்ஆனை மட்டும் என்பதையே குறிக்கின்றது (பின்இணைப்பு 18).

*17:60 17:1லும், மற்றும் 53:1-18லும் கூறப்பட்டுள்ளபடி, குர்ஆனைப்பெற்றுக் கொள்வதற்காக மிக உயர்வான வானத்திற்கு முஹம்மது சென்ற பயணம் ஒரு சோதனையே, ஏனெனில் மக்கள் விசுவாசத்தின் அடிப்படையில் முஹம்மதை நம்ப வேண்டியிருந்தது.

*17:66 பௌதீகயியல் மற்றும் பௌதீக வேதியியல் மூலமாக, தண்ணீரானது நமது பல்வேறு தேவைகளை நிறைவு செய்ய முற்றிலும் ஏற்றதாக ஆகுமளவு தனித்துவமான தன்மைகளைக் கொண்டுள்ளது என்று நாம் இப்போது அறிந்துள்ளோம்.

*17:93 கடவுளின் உடன்படிக்கைத் தூதர், ரஷாத் கலீஃபா இவ்விதமான சவால்கள் விடப்பட்டார், ஒரு புதிய புத்தகத்தைக் கொண்டு வர வேண்டும், அல்லது விண்ணிலிருந்து துண்டங்களைக் கொண்டு வர வேண்டும் என்ற சவால்கள் உட்பட. வசனம் 3:81 கடவுளின் உடன்படிக்கைத் தூதருடைய பணிகளை வரையறுக்கின்றது. பின்இணைப்பு 2&26ல் திணறடிக்கின்ற சான்றுகள் விவரிக்கப்பட்டுள்ளன.