சசூரா 30: ரோமானியர்கள் (அல்-ரூம்)
[30:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[30:1] அ.ல.ம.*
அடிகுறிப்பு

[30:2] நிச்சயமாக, ரோமானியர்கள் தோற்கடிக்கப் படுவார்கள்.
[30:3] மிக அருகில் உள்ள இடத்தில். அவர்களுடைய தோல்விக்குப் பின்னர், அவர்கள் மீண்டும் எழுச்சி கொண்டு வெற்றி பெறுவார்கள்.
[30:4] சில பல வருடங்களுக்குள். முதல் முன்னறி விப்பு, மற்றும் இரண்டாவது ஆகிய இரண் டிலும், கடவுள்-ன் தீர்மானம் இவ்விதமான தாகும். அந்நாளில், நம்பிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள்.
[30:5] கடவுள் உடைய வெற்றியில். தான் நாடுகின்ற எவருக்கும் அவர் வெற்றியை வழங்குகின்றார். அவர்தான் சர்வ வல்லமையுடையவர், மிக்க கருணையாளர்.

தவறான வாழ்வில் மூழ்கிவிடுதல்

[30:6] கடவுள்-ன் வாக்குறுதி இவ்விதமானதாகும்-மேலும் கடவுள் ஒருபோதும் தன் வாக்குறுதி யை முறிப்பதில்லை-ஆனால், மனிதர்களில் அதிகமானோர் அறியமாட்டார்கள்.
[30:7] அவர்களால் காணமுடிகின்ற இவ்வுலக விஷயங்களைப் பற்றி மட்டுமே அவர்கள் அக்கறை கொள்கின்றார்கள், அதே சமயம் மறுவுலகின்பால் முற்றிலும் அலட்சியமாக இருக்கின்றார்கள்.
[30:8] அவர்கள் ஏன் தங்களைப் பற்றியே சிந்தித்துப் பார்க்கவில்லை? மேலும் வானங்களையும் மற்றும் பூமியையும் இன்னும் அவற்றிற் கிடையில் உள்ள ஒவ்வொன்றையும், ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவும், மேலும் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைத் தவணைக்காகவுமே தவிர, கடவுள் படைக்கவில்லை. எப்படியிருப் பினும், அதிகமான மக்கள், தங்களுடைய இரட்சகரைச் சந்திப்பதைக் குறித்து, நம்ப மறுப்பவர்களாக உள்ளனர்.
[30:9] பூமியில் சுற்றித் திரிந்து, தங்களுக்கு முன்னிருந்தவர்களுக்கு நேர்ந்த விளைவு களை அவர்கள் கவனித்துப் பார்க்க வில்லையா? அவர்கள் மிகவும் வலிமை நிறைந்தவர்களாகவும் மிகவும் வளமானவர் களாகவும், மேலும் பூமியின் மீது அதிகம் உற்பத்தி செய்யக்கூடியவர்களாகவும் இருந் தனர். அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடன் சென்றனர். அதன் விளைவாக, அவர்களுக்கு அநீதி யிழைத்தது கடவுள் அல்ல, அவர்கள் தான் தங்களுடைய சொந்த ஆன்மாக்களுக்கே அநீதியிழைத்துக் கொண்டனர்.
[30:10] தீமைகள் புரிந்தவர்களுக்குரிய பின் விளைவு கள் தீயவையாகவே இருந்திருத்தல் வேண்டும். இது ஏனெனில் அவர்கள் கடவுள்-ன் வெளிப் பாடுகளை ஏற்க மறுத்தனர், மேலும் அவற்றைக் கேலி செய்தனர்.

இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்கள் தங்கள் இணைத்தெய்வங்களைக் கைவிட்டு விடுகின்றனர்

[30:11] கடவுள் தான் படைப்பைத் துவக்கி, பின்னர் அதனை மீண்டும் செய்கின்றார். இறுதியாக, அவரிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.
[30:12] அந்தநேரம் நிகழ்ந்தேறும் அந்நாளில், குற்ற வாளிகள் அதிர்ச்சியடைந்து விடுவார்கள்.
[30:13] அவர்கள் சார்பாகப் பரிந்துரைக்க அவர் களுடைய இணைத் தெய்வங்களுக்கு சக்தி எதுவுமிருக்காது; அதற்கு மாறாக, தங்களு டைய இணைத்தெய்வங்களை அவர்கள் கைவிட்டு விடுவார்கள்.
[30:14] அந்தநேரம் நிகழ்ந்தேறும் அந்நாளின் போது, அவர்கள் பிரிந்து விடுவார்கள்.
[30:15] நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை, அவர்கள் மகிழ்ச்சியுடன், சுவனத்தில் இருப்பார்கள்.
[30:16] நம்ப மறுத்து, மேலும் நமது வெளிப்பாடு களையும் மற்றும் மறுவுலகின் சந்திப்பையும் ஏற்றுக்கொள்ள மறுத்தவர்களைப் பொறுத்த வரை, அவர்கள் தண்டனையில் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்.

எந்நேரமும் கடவுளை நினைவு கூருங்கள்

[30:17] ஆகையால், இரவில் நீங்கள் ஓய்வெடுக்கும் போதும், மேலும் காலையில் நீங்கள் விழித் தெழும் போதும் நீங்கள் கடவுள்-ஐத் துதிக்க வேண்டும்.
[30:18] மாலை முழுவதும், அவ்வண்ணமே உங்களு டைய நாளின் நடுவிலும், வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்துப் புகழும் அவருக்குரியது.
[30:19] இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை அவர் உற்பத்தி செய்கின்றார், மேலும் உயிருள்ள வற்றிலிருந்து இறந்தவற்றை உற்பத்தி செய்கின்றார், மேலும் நிலத்தை அது இறந்து விட்ட பின்னர் அவர் மீண்டும் உயிர்ப்பிக் கின்றார்; அதைப்போலவே நீங்களும் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவீர்கள்.

திருமணம்: ஒரு தெய்வீகச் சட்டம்

[30:20] உங்களை அவர் தூசியிலிருந்து படைத் திருப்பதும், பின்னர் நீங்கள் இனவிருத்தி செய்கின்ற மனிதர்களானதும் அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும்.
[30:21] நீங்கள் ஒருவரைக் கொண்டு மற்றவர் மன அமைதியும் மற்றும் திருப்தியும் அடைவதற் காக, உங்களிலிருந்தே உங்கள் வாழ்க்கைத் துணைகளை அவர் படைத்திருப்பதும் அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும், மேலும் உங்கள் இதயங்களில் உங்களுடைய வாழ்க்கைத் துணைகளின் பால் அன்பையும் மேலும் அக்கறையையும் அவர் அமைத்தார். இதில், சிந்திக்கின்ற மக்களுக்குப் போதுமான சான்றுகள் உள்ளன.

அதிகமான சான்றுகள்

[30:22] வானங்கள் மற்றும் பூமியின் படைப்பும், மேலும் உங்களுடைய மொழிகளிலும் உங்களுடைய நிறங்களிலும் உள்ள வேறுபாடுகளும் அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும். இவற்றில், அறிவுடையோருக்கு அத்தாட்சிகள் உள்ளன.
[30:23] இரவுப் பொழுதில் அல்லது பகலில் நீங்கள் உறங்குவதும், மேலும் அவருடைய வாழ்வாதாரங்களைத் தேடி நீங்கள் வேலை செய்வதும் அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும். இதில், செவியேற்க இயலும் மக்களுக்குப் போதுமான சான்றுகள் உள்ளன.
[30:24] அச்சத்திற்கும் அவ்வண்ணமே எதிர்பார்ப்பிற்கும் மூலாதாரமாக மின்னலை அவர் உங்களுக்குக் காட்டுவதும், பின்னர் இறந்து போயிருந்த ஒரு நிலத்தை மீண்டும் உயிர்ப்பிப்பதற்காக விண்ணிலிருந்து தண்ணீரை அவர் இறக்குவதும், அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும். இவற்றில், புரிந்து கொள்கின்ற மக்களுக்குப் போதுமான சான்றுகள் உள்ளன.
[30:25] வானமும் மற்றும் பூமியும் அவருடைய ஏற்பாட்டின்படி நின்று கொண்டிருப்பது அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும். இறுதியில், பூமியை விட்டு வெளியே அவர் உங்களை அழைக்கும் போது, ஒரே அழைப்பு, நீங்கள் உடனடியாக வெளியே வருவீர்கள்.
[30:26] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொருவரும் அவருக்குரியவர்கள்; அனை வரும் அவருக்கு அடங்கி நடப்பவர்களாகவே இருக்கின்றனர்.
[30:27] மேலும் அவர்தான் படைப்பைத் துவக்குபவர், மேலும் அதனை மீண்டும் செய்பவர்; இது அவருக்கு இன்னமும் எளிதானதேயாகும். வானங்கள் மற்றும் பூமியில் உள்ள கம்பீரமான உவமானங்கள் அவருக்குரியது, மேலும் அவர்தான் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.

இணைவழிபாட்டின் அபத்தமான நிலை

[30:28] உங்களிலிருந்தே ஓர் உதாரணத்தை அவர் உங்களுக்கு எடுத்துரைக்கின்றார்: நீங்கள் உங்களுடைய ஊழியர்களையோ அல்லது உங்களுக்குக் கீழுள்ளவர்களையோ, அவர்கள் உங்களுக்கே போட்டியாக ஆகும் அளவிற்கு, உங்களுக்குக் கொடுக்கப்படும் அதே அளவு மரியாதையை அவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் அளவிற்கு எப்பொழுதாவது உயர்த்து கின்றீர்களா? புரிந்து கொள்கின்ற மக்களுக்கு இந்த வெளிப்பாடுகளை இவ்விதமாக நாம் விவரிக்கின்றோம்.
[30:29] உண்மையில், வரம்பு மீறியவர்கள் அறிவின்றி, தங்களுடைய சுய அபிப்பிராயங்களைப் பின் பற்றினார்கள். கடவுள்-ஆல் வழி கேட்டிற்கு அனுப்பப்பட்டவர்களைப் பின்னர் எவரால் வழிநடத்த இயலும்? எவரும் எக்காலத்திலும் அவர்களுக்கு உதவ இயலாது.

ஏகத்துவம்: இயற்கையான உள்ளுணர்வு*

[30:30] ஆகையால், சரியான ஏகத்துவ மார்க்கத்திற்கு உங்களை நீங்கள் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். கடவுள்-ஆல் மனிதர்களுக்குள் வைக்கப்பட்ட இயற்கை உள்ளுணர்வு இவ்வித மானதே. கடவுள்-ன் இவ்விதமான படைப்பு ஒருபோதும் மாறாது. இதுவே முழுமையான மார்க்கமாகும், ஆனால் பெரும்பாலான மக்கள் அறியமாட்டார்கள்.
அடிகுறிப்பு

[30:31] நீங்கள் அவருக்கு அடிபணியவும், அவரிடம் பயபக்தியோடிருக்கவும், மேலும் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப் பிடிக்கவும் வேண்டும், மேலும்-நீங்கள் என்ன செய்தாலும்-இணைத்தெய்வ வழிபாட்டிற்குள் மட்டும் எக்காலத்திலும் விழுந்து விடாதீர்கள்.

பிரிவினைவாதம் தண்டனைக்குரியது

[30:32] தங்களுடைய மார்க்கத்தைப் பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டவர்களைப் போல், (இணைத்தெய்வ வழிபாட்டில் விழுந்து விடாதீர்கள்); ஒவ்வொரு பிரிவும் தங்களிடம் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியடைகின்றது.

கஷ்ட காலத்தில் நண்பர்கள்

[30:33] துன்பம் மக்களை வருத்தும் பொழுது, தங்களை முற்றிலும் அவருக்கு அர்ப்பணித்தவர்களாக, அவர்கள் தங்கள் இரட்சகரின் பால் திரும்பு கின்றனர். ஆனால் பின்னர், அவர்கள் மீது அவர் கருணையைக் கொண்டு பொழிந்தவுடன், அவர்களில் சிலர் இணைவழிபாட்டிற்கு மீண்டும் திரும்பி விடுகின்றனர்*.
அடிகுறிப்பு

[30:34] நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிற்கு அவர்கள் நன்றி கெட்டவர்களாக இருந்து கொள்ளட்டும். தற்காலிகமாகச் சுகமனுபவியுங்கள்; நீங்கள் நிச்சயமாக கண்டு கொள்வீர்கள்.
[30:35] அவர்களுடைய இணைவழிபாட்டை நியாயப் படுத்துகின்ற அதிகாரத்தை நாம் அவர்களுக்குக் கொடுத்திருக்கின்றோமா?
[30:36] மனிதர்கள் மீது நாம் கருணையை அளிக்கும் பொழுது ,அவர்கள் அதில் மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால் அவர்களுடைய சொந்த செயல்களின் விளைவாக, அவர்களுக்குத் துன்பம் நேரிடும் பொழுது, அவர்கள் நிராசை அடைந்து விடுகின்றனர்.
[30:37] கடவுள், அவர் நாடுகின்ற எவருக்கும் வாழ் வாதாரங்களை அதிகரிக்கின்றார், அல்லது குறைக்கின்றார் என்பதை அவர்கள் உணர வில்லையா? நம்பிக்கை கொண்ட மக்களுக்கு இவை படிப்பினைகளாக இருக்க வேண் டும்.
[30:38] ஆகையால், உறவினர்களுக்கும் அவ்வாறே ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், அவர்களுக்கு உரிமையுள்ள (தர்மப்) பங்கை கொடுக்க வேண்டும். மெய்யாகவே கடவுள்-ன் பொருத்தத்தைத் தேடுபவர்களுக்கு இதுவே மிகச் சிறந்ததாகும்; அவர்களே வெற்றியாளர்கள்.
[30:39] சில மனிதர்களின் செல்வத்தைப் பெருக்கு வதற்காக நடைமுறைப்படுத்தப்படும் பெரு வட்டியானது, கடவுள்-இடம் எந்த ஒரு லாபத்தையும் அடைவதில்லை. ஆனால் நீங்கள் கடவுள்-ன் பொருத்தத்தைத் தேடியவர்களாக, தர்மம் வழங்கினால், இவர்கள் தான் தங்களுடைய வெகுமதியைப் பன்மடங்காக்கிப் பெற்றுக் கொள்பவர்கள்.

வழிபடத் தகுதியானவர் யார்?

[30:40] கடவுள் தான் உங்களைப் படைத்தவர். அவர்தான் உங்களுக்கு வழங்குபவர். அவர் தான் உங்களை மரணத்தில் ஆழ்த்துபவர். அவர்தான் உங்களை மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புபவர். உங்களுடைய இணைத் தெய்வங்கள் எவைவேனும் இவ்விஷயங்களில் எதையேனும் செய்ய இயலுமா? அவர் துதிப்பிற்குரியவர். எந்த பங்குதாரர்களையும் கொள்வதற்கு அப்பாற்பட்டு அவர் மிகவும் மேலானவர்.
[30:41] மனிதர்கள் செய்தவற்றின் காரணத்தால், நிலம் மற்றும் கடல் எங்கிலும் பேரழிவுகள் பரவி விட்டன. அவர்கள் (சரியான காரியங்களுக்கு) திரும்பும் பொருட்டு, இவ்விதமாக அவர்களுடைய சில செயல்களின் பின் விளைவுகளை அவர்கள் சுவைக்கும்படி அவர் செய்கின்றார்.

சரித்திரத்திலிருந்து கற்றுக் கொள்ளுதல்

[30:42] “பூமியில் சுற்றித் திரிந்து உங்களுக்கு முன்னர் இருந்தவர்களுக்கு நேர்ந்த பின்விளைவுகளைக் கவனித்துப் பாருங்கள்” என்று கூறுவீராக. அவர்களில் பெரும்பாலோர் இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்களாக இருந்தனர்.
[30:43] ஆகையால், தவிர்க்கப்பட முடியாததாக கடவுள்-ஆல் ஆக்கப்பட்டிருக்கின்ற அந் நாள் வருவதற்கு முன்னர், பூரணமான இந்த மார்க்கத்திற்கு நீங்கள் உங்களை முற்றிலும் அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். அந்நாளில், அவர்கள் அதிர்ச்சியடை வார்கள்.
[30:44] நம்ப மறுக்கின்ற எவரொருவரும், தன் சொந்த ஆன்மாவிற்குக் கேடாகவே நம்பமறுக்கின்றார், அதே சமயம் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோர், தங்களுடைய சொந்த ஆன்மாக்களை பலப்படுத்திக் கொள்ளவும் மேலும் வளர்த்துக் கொள்ளவுமே அவ்வாறு செய்கின்றார்கள்.
[30:45] ஏனெனில் நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோருக்குத் தன்னுடைய தயாளத்திலிருந்து அவர் தாராளமாக பிரதிபலனளிப்பார். நம்ப மறுப்பவர்களை அவர் நேசிப்பதில்லை.
[30:46] நீங்கள் நன்றியுடையவர்களாக இருக்கும் பொருட்டு, தன்னுடைய கருணையை உங்கள் மீது பொழிவதற்காகவும், மேலும் அவருடைய சட்டங்களுக்கு இணங்க கடலில் கப்பல்கள் செல்ல அனுமதிப்பதற்காகவும், மேலும் (வணிகத்தின் மூலமாக) அவருடைய தயாளங்களை நீங்கள் தேடிக் கொள்வதற்காகவும், நற்சகுனங்களுடன் காற்றை அவர் அனுப்புவது என்பது அவருடைய சான்றுகளில் உள்ளவையாகும்.

நம்பிக்கையாளர்களுக்கு வெற்றி உத்தரவாதமானதாகும்

[30:47] உமக்கு முன்னரும் தூதர்களை அவர்களுடைய சமூகத்தாருக்கு, ஆழ்ந்த அத்தாட்சிகளுடன் நாம் அனுப்பியுள்ளோம். அதனைத் தொடர்ந்து, வரம்பு மீறியவர்களை நாம் தண்டித்தோம். நம்பிக்கையாளர்களுக்கு வெற்றியை அளிப்ப தென்பது நம்முடைய கடமையாகும்.
[30:48] கடவுள் தான் அவருடைய நாட்டத்திற்கேற்ப, ஆகாயம் முழுவதும் பரவி இருக்கும் பொருட்டு, மேகங்களை கலைப்பதற்காக காற்றுகளை அனுப்புகின்றவர். பின்னர் அவர் மேகங்களை அடுக்குகின்றார், பின்னர் அதிலிருந்து மழை இறங்கி வருவதை நீங்கள் காண்கின்றீர்கள். அவருடைய அடியார்களில் அவர் தேர்ந்தெடுத்த எவர் மீதும் அது விழும் பொழுது, அவர்கள் மகிழ்ச்சியடைகின்றார்கள்.
[30:49] அவர்கள் மீது அது விழுவதற்கு முன்னர், அவர்கள் விரக்தியில் தஞ்சமடைந்து இருந்தனர்.
[30:50] கடவுள்-ன் தொடர் கருணையையும், மேலும் இறந்து போன நிலத்தை அவர் எவ்வாறு மீண்டும் உயிர்ப்பிக்கின்றார் என்பதையும் நீங்கள் உணர்ந்து போற்றிட வேண்டும். நிச்சயமாக அதைப்போலவே இறந்தவர்களை அவர் மீண்டும் உயிர்ப்பித் தெழுப்புவார். அவர் சர்வ சக்தியுடையவர்.
[30:51] அதற்குப்பதிலாக ஒரு மஞ்சள் நிற மணற்புயலை அவர்கள் மீது நாம் அனுப்பியிருந்தால், அவர்கள் தொடர்ந்து நம்பமறுத்துக் கொண்டிருந்திருப் பார்கள்.
[30:52] இறந்தவர்களையோ, அன்றிச் செவிடர்களையோ, அவர்கள் ஒரு தடவை திரும்பிச் சென்று விட்டால், அழைப்பைச் செவியேற்கும்படிச் செய்ய உம்மால் இயலாது.
[30:53] அன்றி குருடர்களை அவர்களுடைய வழிகேட்டை விட்டு வெளியே வழிநடத்தவும் உம்மால் இயலாது. நம்முடைய வெளிப்பாடுகள் மீது நம்பிக்கை கொண்டு, மேலும் அடிபணிந்தோராக ஆவதென்று தீர்மானித்தவர்களால் மட்டுமே நீர் செவியேற்கப் படஇயலும்.

இந்த வாழ்வு மிகவும் குறுகியது

[30:54] கடவுள் தான் உங்களை பலஹீனமாகப் படைத்தார், பிறகு பலஹீனத்திற்குப் பின்னர் உங்களுக்கு பலத்தை அளித்தார், அதன் பிறகு பலத்திற்குப் பின்னர் பலஹீனத்தையும், நரை முடியையும் மாற்றியமைத்தார். தான் நாடுகின்ற எதனையும் அவர் படைக்கின்றார். அவர் எல்லாம் அறிந்தவர், சர்வ சக்தியுடையவர்.
[30:55] அந்த நேரம் நிகழ்ந்தேறும் அந்நாள் வரும் போது, குற்றவாளிகள் ஒரு மணிநேரம் மட்டுமே (இவ்வுலகில்) நிலைத்திருந்ததாகச் சத்தியம் செய்வார்கள். அவர்கள் அவ்வளவு தவறாக இருந்தனர்.
[30:56] அறிவையும் மற்றும் விசுவாசத்தையும் கொண்டு அருள்பாலிக்கப்பட்டவர்கள், “கடவுள்-ன் கட்டளைக்கிணங்க, மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப் படும் நாள் வரை நீங்கள் நிலைத்திருந்தீர்கள். இப்பொழுது, இதுதான் மீண்டும் உயிர்ப்பித் தெழுப்பப்படும் நாளாகும், ஆனால் நீங்கள் இதனை அடையாளம் காண தவறிவிட்டீர்கள்” என்று கூறுவார்கள்.
[30:57] ஆகையால், சாக்குபோக்கு எதுவும் அந்நாளில், வரம்பு மீறுபவர்களுக்குப் பலனளிக்காது, அன்றி அவர்கள் பிழைபொறுக்கப் படவும் மாட்டார்கள்.
[30:58] இவ்விதமாக, எல்லாவிதமான உதாரணங் களையும் இந்தக் குர்ஆனில் மக்களுக்காக நாம் எடுத்துரைத்துள்ளோம். இருப்பினும், எந்த விதமான சான்றை நீங்கள் நம்ப மறுப்பவர்களுக்குக் காட்டினாலும் பொருட்டல்ல, அவர்கள், “நீங்கள் பொய்யுரைப்பவர்கள்” என்று கூறுவார்கள்.

தெய்வீகத்தலையீடு

[30:59] இவ்விதமாகக் கடவுள் அறியாதவர்களின் இதயங்களை முத்திரையிட்டு விடுகின்றார்.
[30:60] ஆகையால், நீங்கள் உறுதியாய் விடா முயற்சியுடன் இருக்க வேண்டும்-ஏனெனில் கடவுள்-ன் வாக்குறுதி உண்மையானதாகும்-மேலும் உறுதிப்பாட்டை அடையாதவர்களால் கலக்கமடைந்து விடக் கூடாது.