சூரா 49: சுவர்கள் (அல்-ஹுஜுராத்)
[49:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[49:1] நம்பிக்கை கொண்டோரே, உங்களுடைய கருத்துக்களை கடவுள் மற்றும் அவருடைய தூதரின் கருத்துக்களுக்கு மேலாக வைக்காதீர்கள். நீங்கள் கடவுள் இடம் பயபக்தியோடிருக்க வேண்டும். கடவுள் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.
[49:2] நம்பிக்கை கொண்டோரே, வேதம் வழங்கப்பட்டவரின்* குரலுக்கு மேலாக உங்களுடைய குரல்களை உயர்த்தாதீர்கள், அன்றியும் நீங்கள் உணர்ந்து கொள்ளாத நிலையில் உங்களுடைய காரியங்கள் பயனற்ற தாக ஆகிவிடாதிருக்கும்பொருட்டு, நீங்கள் ஒருவர் மற்றவரிடம் கூச்சலிடுவதைப் போன்று அவரிடம் நீங்கள் கூச்சலிட வேண்டாம்.
அடிகுறிப்பு

[49:3] நிச்சயமாக, கடவுள்-உடைய தூதரிடத்தில் தங்களுடைய குரல்களைத் தாழ்த்திக் கொள் பவர்களுடைய இதயங்கள் தான் நன்னெறி யுடையவையாக இருப்பதற்காக கடவுள்-ஆல் தயார் செய்யப்படுகின்றன*. அவர்கள் மன்னிப் பிற்கும் மேலும் மகத்தானதொரு பிரதி பலனுக்கும் தகுதி பெற்று விட்டனர்.
அடிகுறிப்பு

[49:4] சுவர்களுக்கு வெளியே இருந்து கொண்டு உம்மை அழைப்பவர்களைப் பொறுத்தவரை, அவர்களில் அதிகமானோர் புரிந்து கொள்வதில்லை.
[49:5] நீர் அவர்களிடம் வெளியே வரும் வரை அவர்கள் பொறுமையாக இருந்திருந்தால், அது அவர் களுக்கு மேலானதாக இருந்திருக்கும். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

வதந்திகளை நம்புவதற்கு முன் அவற்றை விசாரித்துக் கொள்ளுங்கள்

[49:6] நம்பிக்கை கொண்டோரே, தீய மனிதன் ஒருவன் உங்களிடம் ஏதேனும் செய்தியைக் கொண்டு வந்தால், அறியாமையினால், சில மனிதர்களுக்கெதிராக நீங்கள் அநியாயம் புரிந்து விட்டு, பின்னர் நீங்கள் செய்தவற்றிற்காக வருத்தமும் மேலும் கவலையும் அடையாதிருக்கும் பொருட்டு, முதலில் நீங்கள் விசாரித்துக் கொள்ள வேண்டும்.
[49:7] மேலும் கடவுள்-ன் தூதர் உங்கள் மத்தியில் வந்திருக்கின்றார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். பல விஷயங்களில் அவர் உங்களுடைய பேச்சைக் கேட்டிருந்தால், காரியங் களை நீங்கள் உங்களுக்கே கடினமானதாக ஆக்கிக் கொண்டிருந்திருப்பீர்கள். ஆனால் கடவுள் உங்களை விசுவாசத்தை நேசிக்கும்படிச் செய்தார், மேலும் உங்கள் இதயங்களில் அதை அழகானதாக இருக்கும்படியும் மேலும் அவர் உங்களை நம்ப மறுத்தல், தீய நடத்தை மற்றும் கீழ்ப்படியாமை ஆகியவற்றை வெறுக்கும்படியும் செய்தார். இவர்கள்தான் வழிநடத்தப்பட்டவர்களாக இருக்கின்றனர்.
[49:8] கடவுள்-உடைய அருளும் மேலும் அவருடைய அருட்கொடைகளும் இத்தகையதேயாகும். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.

நம்பிக்கையாளர்களை சமாதானப்படுத்துங்கள்

[49:9] நம்பிக்கையாளர்களில் இருபிரிவினர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டால், நீங்கள் அவர்களை சமாதானப் படுத்த வேண்டும். ஒரு பிரிவு மற்றதற்கு எதிராக அத்துமீறல் செய்தால், அவர்கள் கடவுள்-ன் கட்டளைக்கு அடிபணியும் வரை, அத்துமீறும் பிரிவினருடன் நீங்கள் சண்டையிட வேண்டும். அவர்கள் அடிபணிந்தவுடன், இரு பிரிவினரையும் நீங்கள் நீதத்துடன் சமாதானப் படுத்த வேண்டும். நீங்கள் நீதியைப் பராமரிக்க வேண்டும்; நீதமாக இருப்பவர்களைக் கடவுள் நேசிக்கின்றார்.

உண்மையான குடும்பம்

[49:10] நம்பிக்கையாளர்கள் ஒரு குடும்பத்தின் அங்கத்தினர்கள் ஆவர்; நீங்கள் கருணையை அடையும் பொருட்டு, உங்களுடைய குடும்பத் திற்குள் நீங்கள் சமாதானம் பேணவும், மேலும் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்கவும் வேண்டும்.

நம்பிக்கையாளர்கள் முன்மாதிரி அமைக்கின்றார்கள்

[49:11] நம்பிக்கை கொண்டோரே, எந்த சமூகத்தவரும் மற்ற சமூகத்தவரைக் கேலி செய்ய வேண்டாம், ஏனெனில் அவர்களை விட அவர்கள் சிறந்தவர்களாக இருக்கக் கூடும். அன்றி எந்தப் பெண்களும் மற்றப் பெண்களை கேலி செய்ய வேண்டாம், ஏனெனில் அவர்களை விட அவர்கள் சிறந்தவர்களாக இருக்கக் கூடும். அன்றியும் நீங்கள் ஒருவர் மற்றவரைப் பரிகாசம் செய்யவோ, அல்லது உங்களுடைய பெயர்களில் வேடிக்கை செய்யவோ வேண்டாம். விசுவாசத்தை அடைந்து விட்ட பின்னர் தீய நடத்தையின் பால் திரும்புவது உண்மையில் கெட்டதாகும். எவரொருவர் இதன் பின்னரும் வருந்தித்திருந்தவில்லையோ, அவர்கள் தான் வரம்பு மீறுபவர்கள் ஆவர்.

சந்தேகம் பாவகரமானது

[49:12] நம்பிக்கை கொண்டோரே, எந்தச் சந்தேகத்தையும் நீங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும், ஏனெனில் ஒரு சிறிதளவு சந்தேகம் கூடப் பாவகரமானதாகும். நீங்கள் ஒருவர் மற்றவரை வேவு பார்க்க வேண்டாம், அன்றி நீங்கள் ஒருவர் மற்றவரைப் புறங்கூறவும் வேண்டாம்; இது உங்களுடைய இறந்து போன சகோதரனுடைய மாமிசத்தைத் தின்பதைப் போல வெறுப்பிற் குரியதாகும். நீங்கள் நிச்சயமாக இதனை வெறுப்பீர்கள். நீங்கள் கடவுள்-ஐ கவனத்தில் கொள்ள வேண்டும். கடவுள் மீட்பவர், மிக்க கருணையாளர்.

மக்களுக்கிடையில் வேறுபடுத்திக் காண்பதற்கான ஒரே அளவுகோல்

[49:13] மக்களே, ஒரே ஆண் மற்றும் பெண்ணிலிருந்து உங்களை நாம் படைத்தோம், மேலும் நீங்கள் ஒருவர் மற்றவரை அடையாளம் கண்டு கொள் வதற்காக, உங்களை வெவ்வேறு சமூகங் களாகவும் மற்றும் இனங்களாகவும் ஆக்கினோம். கடவுள்-ன் பார்வையில் உங்களில் மிகவும் சிறந்தவர், மிகவும் நன்னெறியுடையவரே ஆவார். கடவுள் எல்லாம் அறிந்தவர், நன்கறிந்தவர்.

முஸ்லிமும் முஃமினும்

[49:14] அரேபியர்கள் “நாங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்கள்)” என்று கூறினார்கள். “நீங்கள் நம்பிக்கை கொள்ளவில்லை; நம்பிக்கை உங்கள் இதயங்களில் நிலைபெறும் வரை, நீங்கள், ‘நாங்கள் முஸ்லிம்கள் (அடிபணிந்தவர்கள் ) என்று தான் கூற வேண்டும்‘” என்று கூறுவீராக. நீங்கள் கடவுள்-க்கும் மற்றும் அவருடைய தூதருக்கும் கீழ்படிந்தால், உங்களுடைய காரியங்களில் எதனையும் அவர் வீணாக்கி விட மாட்டார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[49:15] முஃமின்கள் (நம்பிக்கையாளர்கள்) எவர்கள் என்றால் கடவுள் மற்றும் அவருடைய தூதர் மீது நம்பிக்கை கொண்டு, பின்னர் எத்தகைய சந்தேகமுமற்ற நிலைப்பாட்டை அடைந்து, மேலும் தங்களுடைய பணத்தையும் மேலும் தங்களுடைய வாழ்வுகளையும் கொண்டு கடவுள்-ன் நிமித்தம் பாடுபடுபவர்களேயாவர். இவர்கள்தான் உண்மையாளர்கள் ஆவர்.
[49:16] “உங்களுடைய மார்க்கத்தைப் பற்றி கடவுள்-க்கே நீங்கள் தெரியப்படுத்துகின்றீர்களா? வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ் வொன்றும் கடவுள்-க்குத் தெரியும். கடவுள் எல்லாம் அறிந்தவர்” என்று கூறுவீராக.

யாருக்கு யார் சலுகை புரிகின்றார்?

[49:17] அடிபணிதலைத் தழுவுவதன் மூலம் உமக்கு ஏதோ சலுகை புரிந்து விடுவதைப் போல் அவர்கள் நடந்து கொள்கின்றனர்! “அடிபணித லைத் தழுவுவதன் மூலம் நீங்கள் எனக்கு எந்த சலுகைகளும் புரிந்து விடவில்லை. நீங்கள் நேர்மையானவர்களாக இருந்தால், விசுவாசத் தின் பால் உங்களை வழிநடத்தியதன் மூலம் கடவுள் தான் உங்களுக்கு மகத்தானதொரு சலுகை புரிந்துள்ளார்” என்று கூறுவீராக.
[49:18] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்து இரகசியங்களும் கடவுள்-க்குத் தெரியும்; கடவுள் நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் பார்ப்பவராக இருக்கின்றார்.