சூரா 5: விருந்து (அல்-மா’யிதாஹ்)
[5:0]கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்

[5:1]நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் உங்களது உடன்படிக்கைகளை நிறைவேற்றுங்கள். குறிப்பிட்டு இதில் தடுக்கப்பட்டுள்ளவற்றைத் தவிர, கால் நடைகளை உண்ணுவதற்கு உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஹஜ் புனிதயாத்திரை முழுவதிலும் வேட்டை யாடுவதை நீங்கள் அனுமதிக்க வேண்டாம். கடவுள் அவர் விரும்பியவற்றைக் கட்டளை யிடுகின்றார்.

[5:2]நம்பிக்கை கொண்டோரே, கடவுள்-ஆல் ஏற்படுத்தப்பட்ட சடங்குகளை மீறாதீர்கள், அன்றி புனித மாதங்களுக்கும், பலியிடப் படவேண்டிய பிராணிகளுக்கும், அவற்றை அடையாளம் காட்டும் மாலைகளுக்கும், தங்களுடைய இரட்சகரிடமிருந்து அருட் கொடைகளையும் மேலும் அங்கீகாரத்தையும் தேடிப் புனிதஸ்தலத்தை (கஃபா) நோக்கிச் செல்பவர்களுக்கும் கெடுதல் செய்யாதீர்கள். நீங்கள் புனித யாத்திரையை நிறைவு செய்து விட்டால் நீங்கள் வேட்டையாடலாம். * புனித மஸ்ஜிதிற்கு நீங்கள் செல்வதை முன்னொரு சமயம் தடுத்த மக்களின் மீதுள்ள பகைமை யினால் சினம் கொண்டவர்களாகி, வலுச் சண்டையில் ஈடுபடாதீர்கள். நன்னெறி மற்றும் பயபக்தியின் விஷயங்களில் நீங்கள் ஒத் துழைத்துக் கொள்ளுங்கள், பாவகரமான மற்றும் தீய விஷயங்களில் ஒத்துழைக்காதீர்கள். நீங்கள் கடவுள்-ஐக் கவனத்தில் கொள்ளுங்கள். கடவுள் தண்டனையை நிறை வேற்றுவதில் கண்டிப்பானவர்.

அடிகுறிப்பு

நான்கு வகை உணவுகள் மட்டுமே தடுக்கப்பட்டுள்ளன “தானாக இறந்து போகும் பிராணிகள்” வரையறுக்கப்பட்டுள்ளது

[5:3]தானாக இறந்து போன பிராணிகள், இரத்தம், பன்றிகளின் இறைச்சி*, மேலும் கடவுள் அல்லாத மற்றவைக்குப் படைக்கப்பட்ட பிராணிகள் ஆகியவை உங்களுக்கு தடுக்கப் பட்டுள்ளன. குரல்வளை நெறித்து ஒரு பொருளால் தாக்கப்பட்டு, உயரத்திலிருந்து விழுந்து, குத்திக் கிழிக்கப்பட்டு, வன விலங்கி னால் தாக்கப்பட்டு இறந்தவைகள் - அவை இறப்பதற்கு முன்பு நீங்கள் உங்கள் பிராணி யைக் காப்பாற்றினாலன்றி-மேலும் பலி பீடங் களில் பலியிடப்பட்ட பிராணிகள் ஆகியவை (தானாக இறந்து போன பிராணிகளில் உட்பட்டவை). மேலும் ஒரு அதிர்ஷ்ட விளை யாட்டின் மூலம் இறைச்சியைப் பங்கிடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது; இது ஒரு மிகவும் அருவருப்பானதாகும். இன்று நம்பமறுப்பவர்கள் உங்களுடைய மார்க்கத்தை (அடியோடு அழிப்பது) குறித்து நம்பிக்கை இழந்து விட்டார்கள், அவர்களுக்கு அஞ்சாதீர்கள், மாறாக எனக்கே அஞ்சுங்கள். இன்று உங்களு டைய மார்க்கத்தை நான் நிறைவு செய்து விட்டேன். உங்கள் மீது என்னுடைய அருட்கொடையை பூரணமாக்கினேன், மேலும் உங்களுக்கான மார்க்கமாக அடிபணிதலை நான் விதித்துள்ளேன். வேண்டுமென்றே பாவகரமாக இல்லாமல், பஞ்சத்தினால் ஒருவன் (தடுக்கப்பட்ட உணவை உண்பதற்கு) நிர்ப் பந்திக்கப்பட்டால், பின்னர் கடவுள் மன்னிப் பவர், கருணையாளர்.

அடிகுறிப்பு

[5:4]அவர்களுக்குச் சட்டபூர்வமாக அனுமதி க்கப்பட்டவை குறித்து உம்மிடம் அவர்கள் ஆலோசிக்கின்றனர்; “பயிற்றுவிக்கப்பட்ட நாய்கள் மற்றும் வல்லூறுகள் உங்களுக்காகப் பிடித்து வருபவை உட்பட, நல்லவை அனைத்தும் உங்களுக்குச் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளன” என்று கூறுவீராக. கடவுள்-ன் போதனைகளுக்கு இணங்க அவற்றை நீங்கள் பயிற்றுவியுங்கள். அவை உங்களுக்காகப் பிடித்து வருபவற்றை நீங்கள் உண்ணலாம், மேலும் அவற்றின் மீது கடவுள்-ன் பெயரைக் குறிப்பிடுங்கள். நீங்கள் கடவுள்-ஐக் கவனத்தில் கொள்ளுங்கள். கணக்கிடுவதில் கடவுள் மிகத் திறன் வாய்ந்தவர்.

[5:5]இன்று, நல்ல உணவுகள் அனைத்தும், உங்களு க்குச் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதத்தை உடைய மக்களின் உணவுகளும் உங்களுக்குச் சட்டபூர்வமாக ஆகுமாக்கப் பட்டுள்ளது. இன்னும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய வரதட்சணைத் தொகையை அவர்களிடம் கொடுத்துவிடும் பட்சத்தில், நம்பிக்கையாளர்களில் கற்புள்ள பெண்களையும், அதே போல் முந்தைய வேதத்தைப் பின்பற்றுபவர்களில் கற்புள்ள பெண்களையும் நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம். விபச்சாரத்திற்குட்படாமலும், இரகசியக் காதலர்களை ஏற்படுத்திக் கொள்ளாமலும், நீங்கள் கற்பைப் பேணிக் கொள்ளுங்கள். எவரொருவர் விசுவாசத்தை நிராகரிக்கின்றாரோஅவருடையஅனைத்துக் காரியங்களும் வீணானதாகிவிடும், மேலும் மறுவுலகில் அவர் நஷ்டம் அடைந்தவர்களுடன் இருப்பார்.

அங்க சுத்தி

[5:6]நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப் பிடிக்கும் போது நீங்கள்: (1) உங்கள் முகங்களை கழுவிக் கொள்ளுங்கள், (2) உங்கள் கைகளை முழங்கை கள் வரை கழுவிக்கொள்ளுங்கள், (3) உங்கள் தலைகளைத் தடவிக் கொள்ளுங்கள் மேலும் (4) உங்களுடைய பாதங்களைக் கணுக்கால்கள் வரை கழுவிக் கொள்ளுங்கள். புணர்ச்சியின் பரவசத் தால் நீங்கள் சுத்தமற்றவர்களாக இருந்தால் நீங்கள் குளிக்க வேண்டும். நீங்கள் நோயுற்றோ அல்லது பயணத்திலோ இருந்தால், அல்லது செரி மானம் சார்ந்த ஏதேனும் கழிவு ஏற்பட்டிருந்தால் (சிறுநீர், மலம் அல்லது வாயு), அல்லது பெண் களுடன் (பாலியல்) உறவு கொண்டுவிட்டால், மேலும் உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காமல் போனால், சுத்தமான காய்ந்த மணலைத் தொட்டு, பின்னர் உங்களது முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்வதன் மூலம் உலர்ந்த அங்க சுத்தி (தயம்மும்) செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு மார்க்கத்தைக் கடினமானதாக்கு வதற்கு கடவுள் விரும்பவில்லை. நீங்கள் நன்றி உடையோராய் இருக்கும் பொருட்டு உங்களை சுத்தப்படுத்துவதற்கும், உங்கள் மீது தன்னுடைய அருட்கொடையை முழுமையாக்குவதற்குமே அவர் விரும்புகின்றார்.

[5:7]உங்கள் மீதுள்ள கடவுள்-ன் அருட் கொடையையும், மேலும் உங்களுடன் உடன் படிக்கை செய்து கொண்ட அவருடைய உடன் படிக்கையையும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் “ நாங்கள் கேட்கின்றோம், மேலும் நாங்கள் கீழ்படிகின்றோம்” என்று கூறினீர்கள். நீங்கள் கடவுள்-ஐக் கவனத்தில் கொள்ளுங்கள்; கடவுள் ஆழ்மனதின் எண்ணங்களையும் முழுமையாக அறிவார்.

நீங்கள் பொய்சாட்சி அளிக்கக்கூடாது

[5:8]நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் சாட்சி யாளர்களாக பணிபுரியும்போது, நீங்கள் முற்றிலும் நடுநிலையோடிருங்கள். மேலும் கடவுள்-ஐக் கவனத்தில் கொள்ளுங்கள், மக்களில் சிலர் மீது நீங்கள் கொண்டுள்ள விரோதங்களால் சினம் கொண்டவர்களாகி, அநீதியிழைத்துவிடாதீர்கள். நீங்கள் முற்றிலும் நேர்மையோடிருங்கள், ஏனெ னில் அதுவே மிகவும் நன்னெறியானது. நீங்கள் கடவுள்-ஐக் கவனத்தில் கொள்ளுங்கள் நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.

[5:9]கடவுள் நம்பிக்கை கொண்டு, நன்னெறியான தொரு வாழ்வு நடத்துபவர்களுக்கு பாவமன்னிப்பையும், பெரியதொருவெகுமதியையும் வாக்களிக்கின்றார்.

[5:10]நம்ப மறுத்து மேலும் நம்முடைய வெளிப்பாடுகளை நிராகரிப்பவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்.

கடவுள் நம்பிக்கையாளர்களைப் பாதுகாக்கின்றார்

[5:11]நம்பிக்கை கொண்டோரே, உங்கள் மீதுள்ள கடவுள்-ன் அருட்கொடைகளை நினைவு கூருங்கள்; மக்களில் சிலர் உங்களுக்கு எதிராக வலுச்சண்டைக்கு தங்களுடைய கைகளை நீட்டிய போது, அவர் உங்களைப் பாதுகாத்தார், மேலும் அவர்களுடைய கைகளைத் தடுத்து நிறுத்தினார். நீங்கள் கடவுள்-ஐக் கவனத்தில் கொள்ளுங்கள்; கடவுள்-ன் மீது நம்பிக்கையாளர்கள் பொறுப்பு ஏற்படுத்தட்டும்.

கடவுளின் பாதுகாப்பிற்குள் இருப்பதற்கான நிபந்தனைகள்

[5:12]இஸ்ரவேலின் சந்ததியினரிடமிருந்து ஒரு உடன்படிக்கையை கடவுள் எடுத்திருந்தார், மேலும் அவர்களுக்கிடையில் பன்னிரண்டு குலத் தலைவர்களை நாம் எழுப்பினோம், மேலும் கடவுள், “தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடித்து, கடமையான தர்மத்தை (ஜகாத்) கொடுத்து, மேலும் என்னுடைய தூதர்களின் மீது நம்பிக்கை கொண்டு, அவர்களை கண்ணியம் செய்து, மேலும் நன்னெறியினை கடனாக கடவுள் -க்கு தொடர்ந்து கொடுக்கும் வரையிலும் நான் உங்களுடன் இருக்கின்றேன். அதன் பின்னர் நான் உங்களுடைய பாவங்களைத் தள்ளுபடி செய்வேன், மேலும் ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களில் உங்களை பிரவேசிக்கச் செய்வேன். இதன் பின்னரும் எவனொருவன் நம்ப மறுக்கின்றானோ, அவன் உண்மையில் நேரான பாதையிலிருந்து வழி தவறி விட்டான்” என்று கூறினார்.

அடிகுறிப்பு

கடவுளின் உடன்படிக்கையை மீறுவதன் விளைவுகள்

[5:13]அவர்களுடைய உடன்படிக்கை மீறலின் ஒரு விளைவாகவே நாம் அவர்களை தண்டித்தோம், மேலும் அவர்களுடைய இதயங்களை இறுகும்படி செய்தோம். அதன் விளைவாக அவர்கள் வார்த்தைகளை அவற்றின் சூழ்நிலைகளுக்கு அப்பாற்பட்டு எடுத்துக் கொண்டார்கள், மேலும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகளில் சிலவற்றை அலட்சியம் செய்தார்கள். அவர்களில் சிலரைத் தவிர, அவர்களிடமிருந்து துரோகத்தை நீங்கள் தொடர்ந்து காண்பீர்கள். நீங்கள் அவர்களுடைய பிழைகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டும், மேலும் அவர்களை புறக்கணித்து விட வேண்டும். பரந்த உள்ளமுடையவர்களை கடவுள் நேசிக்கின்றார்.

கிறிஸ்தவர்களும், கடவுளின் தூதருக்கு கீழ்படிந்தாக வேண்டும்

[5:14]“நாங்கள் கிறிஸ்தவர்கள்” என்று கூறியவர் களிடமிருந்தும், அவர்களுடைய உடன்படிக் கையை நாம் எடுத்தோம். ஆனால் அவர் களுக்கு கொடுக்கப்பட்ட சில கட்டளைகளை அவர்கள் அலட்சியம் செய்தனர். அதன் விளைவாக மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாள் வரையிலும் அவர்களுக்கிடையில் விரோதத்தையும், பகைமையும் கொண்டு அவர் களை நாம் தண்டித்தோம். கடவுள் அதன் பின்னர் அவர்கள் செய்த அனைத்தையும் அவர்களுக்கு அறிவிப்பார்.

குர்ஆன்: யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் கடவுளின் செய்தி

[5:15]வேதத்தையுடைய மக்களே, வேதத்தில் நீங்கள் மறைத்த ஏராளமான விஷயங்களை உங்களு க்கு அறிவிப்பதற்காகவும், மேலும் நீங்கள் செய்த மற்ற ஏராளமான வரம்பு மீறல்களை மன்னிப்பதற்காகவும் உங்களிடம் நம்முடைய தூதர் வந்திருக்கின்றார். உங்களுக்குக் கடவுள்-இடமிருந்து ஓர் ஆழ்ந்த வேதமும், ஒரு வழிகாட்டியும் வந்திருக்கின்றது.

[5:16]இதனைக் கொண்டு, அவருடைய அங்கீ காரத்தை தேடுபவர்களைக் கடவுள் வழி நடத்துகின்றார். அவர்களை, அமைதியான பாதைகளை நோக்கி அவர் வழி நடத்துகின்றார், தன்னுடைய அனுமதியின்படி அவர்களை இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின்பால் நடத்துகின்றார். மேலும் அவர்களை நேரான பாதையில் வழி நடத்துகின்றார்.

மிகப்பெரும் இறைநிந்தனை

[5:17]மேரியின் மகன் மெசையாஹ்வை கடவுள் எனக் கூறுபவர்கள் உண்மையில் நம்பமறுப் பவர்களே.“மேரியின் மகன் மெசையாஹ் மற்றும் அவருடைய தாயார் மற்றும் பூமியில் உள்ள அனைவரையும் அழிப்பதற்கு அவர் நாடிவிட்டால், கடவுள்-ஐ எவரால் எதிர்க்க இயலும்?” என்று கூறுவீராக. வானங்கள் மற்றும் பூமி இன்னும் அவற்றிற்கு இடையில் உள்ள அனைத்தின் ஆட்சியதிகாரமும் கடவுள்-க்கே உரியது. தான் நாடுகின்ற எதையும் அவர் படைக்கின்றார். கடவுள் சர்வ சக்தியுடையவர்.

யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு கடவுளுடைய தூதர்

[5:18]யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் “ நாங்கள் கடவுள்-ன் குழந்தைகள், மேலும் அவருடைய அன்பிற்குரியவர்கள்”. என்று கூறினார்கள். “பின்னர் ஏன் உங்களுடைய பாவங்களுக்காக உங்களை அவர் தண்டிக்கின்றார்? அவர் படைத்த மற்ற மனிதர்களைப் போல நீங்களும் சாதாரண மனிதர்களே,” என்று கூறுவீராக. தான் நாடுகின்றவர்களை அவர் மன்னிக்கின்றார் மேலும் தான் நாடுகின்றவர்களை தண்டிக்கின்றார். வானங்கள் மற்றும் பூமி, மேலும் அவற்றிற்கு இடையில் உள்ள அனைத்தின் ஆட்சியதிகாரமும் கடவுள் -க்கே உரியது. மேலும் இறுதி விதி அவரிடமே உள்ளது.

கடவுளின் உடன்படிக்கைத் தூதர்

[5:19]வேதத்தையுடைய மக்களே, “எந்தவொரு உபதேசிப்பவரையோ அல்லது எச்சரிப் பவரையோ நாங்கள் பெறவில்லை” என நீங்கள் கூறாதிருக்கும் பொருட்டு, தூதர்கள் இல்லாததொரு காலகட்டத்திற்கு பிறகு, விஷயங்களை உங்களுக்கு விளக்கி கூறுவதற்கு, நம்முடைய தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். ஒரு உபதேசிப்பவர் மேலும் எச்சரிப்பவர் இப்பொழுது உங்களிடம் வந்திருக்கின்றார். கடவுள் சர்வ சக்தியுடையவர்.*

அடிகுறிப்பு

[5:20]மோஸஸ் அவருடைய மக்களிடத்தில், கூறியதை நினைவு கூருங்கள். “என்னுடைய மக்களே, உங்களின் மீதுள்ள கடவுள்-ன் அருட்கொடைகளை நினைவில் கொள் ளுங்கள்; வேதம் வழங்கப்பட்டவர்களை உங்களில் இருந்து அவர் நியமித்தார், உங்களை அரசர்களாக்கினார், மேலும் எந்த ஒரு மக்களுக்கும் ஒருபோதும் வழங்கிடாதவற்றை உங்களுக்கு அவர் வழங்கினார்.

கடவுள் இஸ்ரவேலர்களுக்கு புனித நிலத்தை கொடுக்கின்றார்

[5:21]“என்னுடைய மக்களே, கடவுள் உங்களுக் காக விதித்துள்ள புனித தேசத்திற்குள் நுழையுங்கள், மேலும் நீங்கள் நஷ்டவாளிகள் ஆகாதிருக்கும் பொருட்டு, கலகம் செய்யாதீர்கள்.”

[5:22]அவர்கள் “ மோஸஸே, சக்திமிக்க மக்கள் அதனுள் இருக்கின்றார்கள், அவர்கள் அதனை விட்டும் வெளியேறாத வரையில், நாங்கள் அதனுள் நுழைய மாட்டோம். அவர்கள் வெளியேறிவிட்டால், நாங்கள் நுழைகின் றோம்” என்று கூறினார்கள்.

[5:23]பயபக்தியுடையவர்களான மற்றும் கடவுள்-ஆல் அருள்பாலிக்கப்பட்ட இரு மனிதர்கள், “வாயி லினுள் மட்டும் நுழைந்து விடுங்கள், நீங்கள் அதனுள் நுழைய மட்டும் செய்துவிட்டால் நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், கடவுள்-ன் மீதே நீங்கள் உறுதியாய் நம்பிக்கை கொள்ள வேண்டும்.” என்று கூறினார்கள்.

அவர்கள் அனைத்து அற்புதங்களையும் பார்த்த போதிலும்

[5:24]அவர்கள், “மோஸஸே, அவர்கள் அதனுள் இருக்கும் வரை, ஒரு போதும் அதனுள் நாங்கள் நுழைய மாட்டோம். ஆகையால், செல்லுங்கள்-நீரும் உம்முடைய இரட்சகரும்-மேலும் சண்டையிடுங்கள். நாங்கள் இங்கேயே உட்கார்ந்திருக்கின்றோம்,” என்று கூறினார்கள்.

[5:25]அவர் “என்னுடைய இரட்சகரே, என்னையும் என் சகோதரரையும் மட்டுமே என்னால் கட்டுப் படுத்த இயலும். ஆகையால், தீய மக்களுடைய சகவாசத்தை விட்டுப்பிரிவதற்கு எங்களுக்கு அனுமதியளியுங்கள்” என்று கூறினார்.

[5:26]அவர், “இப்பொழுதிலிருந்து இது அவர் களுக்கு நாற்பது வருடங்கள் தடுக்கப் பட்டுள்ளது, இதற்கு இடைப்பட்ட காலத்தில் அவர்கள் குறிக்கோளின்றி பூமியைச் சுற்றித் திரிவார்கள். இத்தகைய தீய மக்களுக்காக வருத்தப்படாதீர்கள்” என்று கூறினார்.

முதல் கொலை

[5:27]ஆதாமுடைய இரண்டு மகன்களின் உண்மை யான சரித்திரத்தை அவர்களுக்கு எடுத்துக் கூறுவீராக. அவர்கள் ஒரு நேர்த்திக் கடனை செய்தனர், அவர்களில் ஒருவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆனால் மற்றவரி டத்திலிருந்து ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அவன், “நான் நிச்சயமாக உன்னைக் கொன்று விடுவேன்”என்று கூறினான். அவர் கூறினார், “கடவுள் நன்னெறியாளர்களிடமிருந்து மட்டுமே ஏற்றுக் கொள்கின்றார்.

அடிகுறிப்பு

[5:28]“நீ என்னை கொல்வதற்காக உன்னுடைய கரத்தை நீட்டினால், நான் உன்னை கொல் வதற்காக என்னுடைய கரத்தை நீட்ட மாட்டேன். ஏனெனில் நான் பிரபஞ்சத்தின் இரட்சகராகிய கடவுள்-இடம் பயபக்தியோடு இருக்கின்றேன்.

[5:29]“என்னுடைய பாவங்களையும் மேலும் உன்னுடைய பாவங்களையும் நான் அல்ல, நீயே சுமந்திட வேண்டும் என நான் விரும்புகின்றேன், பின்னர் நீ நரகத்தில் வசிப்பவர்களுடன் சேர்ந்திடுவாய். வரம்பு மீறுபவர்களுக்கான பிரதிபலன் இத்தகையதேயாகும்”.

[5:30]அவனுடைய அகந்தை அவனுடைய சகோதரனைக் கொல்வதற்கு அவனைத் தூண்டியது. அவன் அவரை கொன்றான், மேலும் நஷ்டவாளிகளுடன் சேர்ந்து கொண்டான்.

[5:31]அவனுடைய சகோதரனின் பிணத்தை எவ்வாறு புதைப்பது என அவனுக்கு கற்றுத்தருவதற் காகக் கடவுள் பின்னர் ஓர் அண்டங்காக் கையை அனுப்பி மண்ணைத் தோண்டச் செய்தார். அவன் “ எனக்கு கேடுதான், இந்த அண்டங்காக்கையின் அளவு கூட புத்தி சாலியாக இருந்து, என்னுடைய சகோதரனின் பிணத்தை புதைப்பதற்கு நான் தவறி விட்டேன்” என்று கூறினான். அவன் குற்ற முணர்ந்ததால் ஏற்படும் வருத்தத்தில் மூழ்கியவன் ஆனான்.

கொலையின் பெரும் இழிவு

[5:32]இதன் காரணமாக, கொலையோ அல்லது பயங்கரக் குற்றங்களோ செய்யாத ஒருவரை எவனொருவன் கொலை செய்கின்றானோ, அவன் எல்லா மக்களையும் கொலை செய்தவன் போலாவான் என்று இஸ்ரவேலின் சந்ததியினருக்கு நாம் கட்டளையிட்டோம். மேலும் எவரொருவர் ஓர் உயிரைக் காப்பாற்றி வாழ விட்டு விடுகின்றாரோ, அவர் எல்லா மக்களையும் வாழவிட்டவர் போலாவார். நம்முடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகள் மற்றும் வெளிப்பாடுகளுடன் சென்றார்கள், ஆனால், இவை அனைத்திற்குப் பிறகும், அவர்களில் பெரும்பாலோர் வரம்பு மீறல்களிலேயே நிலைத்திருக்கின்றார்கள்.

மரண தண்டனை: எப்போது நியாயமானதாகும்?

[5:33]கடவுள் மற்றும் அவருடைய தூதரோடு சண்டையிடுபவர்களுக்கும், மேலும் பயங்கர மான குற்றங்கள் செய்பவர்களுக்கும், நியாய மான தண்டனை அவர்கள் கொல்லப்படுவது, அல்லது சிலுவையில் அறையப்படுவது, அல்லது அவர்களுடைய மாறுகைகள் மற்றும் மாறுகால்கள் வெட்டப்படுவது, அல்லது நாடு கடத்தப்படுவது. இது அவர்களை இந்த வாழ்க்கையில் இழிவு படுத்துவதற்காக, பின்னர் மறுவுலகில் அவர்கள் இதை விட மிக மோசமான தண்டனையை அனுபவிப்பார்கள்.

[5:34]நீங்கள் அவர்களைத் தோற்கடிப்பதற்கு முன், எவர்கள் வருந்தித்திருந்தி விடுகின்றார்களோ, அவர்கள் விலக்களிக்கப்பட்டவர்கள். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

[5:35]நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்க வேண்டும், மேலும் அவரிடம் செல்லும் வழிகளையும், உபாயங்களையும் தேடிக் கொள்ள வேண்டும், மேலும் நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு அவருக்காகப் பாடுபடவேண்டும்.

நம்பிக்கையின்மையின் விலை

[5:36]நிச்சயமாக நம்பமறுத்தவர்கள், அவர்கள் பூமியில் உள்ள அனைத்தையும் உடையவர் களாக, அதைப் போல் இரண்டு மடங்கை உடையவர்களாக இருந்தாலும், மேலும் அதை மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் அந்த நாளில் தண்டனையில் இருந்து தப்பிப்பதற்குப் பகரமாக கொடுத்தாலும், அது அவர்களிட மிருந்து ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவர் கள் ஒரு வலி மிகுந்த தண்டனைக்குள்ளாகி விட்டார்கள்.

[5:37]அவர்கள் நரகத்தை விட்டு வெளியேறு வதற்கு விரும்புவார்கள். ஆனால் அந்தோ, அவர்கள் அதிலிருந்து ஒரு போதும் வெளியேற இயலாது; அவர்களுடைய தண்டனை நிரந்தர மானது.

குர்ஆனின் நீதிக்கு கணித சான்று ஆதரவு அளிக்கின்றது

[5:38]திருடியவர், ஆணோ அல்லது பெண்ணோ, அவர்களுடைய குற்றத்திற்குத் தண்டனை யாகவும்,* மேலும் கடவுள்-இடமிருந்து ஒரு உதாரணமாகத் திகழவும் நீங்கள் அவர்களுடைய கரங்களில் அடையாளமிட வேண்டும். கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.

அடிகுறிப்பு

[5:39]ஒருவர் இந்தக் குற்றத்தைச் செய்ததற்குப் பின்னால் வருந்தித்திருந்தி மேலும் சீர் திருத்திக் கொண்டால், கடவுள் அவரை மீட்டுக் கொள்வார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

[5:40]வானங்கள் மற்றும், பூமியின் ஆட்சியதி காரத்தைத் தன்வசம் வைத்திருப்பவர் கடவுள் தான் என்பது உங்களுக்குத் தெரியாதா? அவர் நாடுவோரை அவர் தண்டிக்கின்றார், மேலும் அவர் நாடுவோரை அவர் மன்னிக் கின்றார் கடவுள் சர்வ சக்தியுடையவர்.

[5:41]தூதரே, அவர்களுக்கிடையில் “நாங்கள் நம்புகின்றோம்” என்று தங்கள் வாயால் கூறி, அதே சமயம் அவர்களுடைய இதயங்கள் நம்பிக்கை கொள்ளாமல், நம்ப மறுப்பதின்பால் விரைந்து செல்பவர்களால் நீர் துன்பம் அடையாதீர். யூதர்களுக்கிடையில் சிலர், பொய்களுக்கு செவி சாய்த்தனர். அவர்கள் மக்களில், உங்களை ஒருபோதும் சந்தித் திராதவர்களுக்கும் மற்றும் சூழ்நிலைக்கு மாற்றமாக வார்த்தைகளைச் சிதைத்துவிட்டு அதன் பின் “இது உங்களுக்கு கொடுக்கப் பட்டால் ஏற்றுக் கொள்ளுங்கள், ஆனால் வேறு ஏதாவது உங்களுக்கு கொடுக்கப்பட்டால் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்,” என்று கூறியவர்களுக்குச் செவி சாய்த்தனர். கடவுள் எவரை வேறு வழியில் திருப்ப நாடுகின்றாரோ, அவருக்கு, கடவுள்-க்கு எதிராக எவ்வித உதவியும் செய்ய உங்களால் இயலாது. அவர்களுடைய இதயங்களைத் தூய்மை படுத்தக் கடவுள் விரும்பவில்லை. இந்த உலகத்தில் அவர்கள் இழிவிற்குள்ளாவார்கள், மேலும் மறுவுலகில் அவர்கள் ஒரு பயங்கரமான தண்டனையை அனுபவிப்பார்கள்.

[5:42]அவர்கள் பொய்களின் ஆதரவாளர்கள்,மேலும் சட்டவிரோதமான சம்பாத்தியங்களை உண்பவர்கள். அவர்களுக்கிடையில் தீர்ப்பு அளிக்கும்படி உங்களிடம் அவர்கள் வந்தால், நீங்கள் அவர்களுக்கிடையில் தீர்ப்புச் செய்ய லாம் அல்லது அவர்களைப் புறக்கணிக்கலாம். நீங்கள் அவர்களைப் புறக்கணிப்பதைத் தேர்ந் தெடுத்தால், அவர்களால் உங்களுக்கு சிறிதளவும் தீங்கு செய்ய இயலாது. ஆனால் நீங்கள் அவர்களுக்கிடையே தீர்ப்பு அளித் தால், நீங்கள் நியாயமாகத் தீர்ப்பு அளிக்க வேண்டும். நியாயமானவர்களை கடவுள் நேசிக்கின்றார்.

[5:43]கடவுள்-உடைய சட்டங்களைக் கொண்ட தோரா அவர்களிடம் இருக்கும் போது, மேலும் அவர்கள் அதை புறக்கணிப்பதைத் தேர்ந்தெடுத்துவிட்ட பிறகு, அவர்களுக் கிடையில் தீர்ப்பளிக்க உம்மை ஏன் அவர்கள் கேட்கப்போகின்றார்கள்? அவர்கள் நம்பிக்கையாளர்கள் அல்ல.

முந்தைய வேதத்திற்கு கண்ணியம் அளிப்பது

[5:44]வழிகாட்டலும் மற்றும் ஒளியும் கொண்டதாகத் தோராவை* நாம் இறக்கி அனுப்பினோம். அதற்கு இணங்க யூதர்களில் வேதம் வழங்கப் பட்டவர்களும், அவ்வாறே மதகுருமார்களும் மற்றும் பாதிரியார்களும் கடவுள்-ன் வேதத்தில் அவர்களுக்கு உத்தரவிட்டிருந்தபடியும், மேலும் அவர்கள் சாட்சியாக இருந்தபடியும் தீர்ப்பளித்தார்கள். ஆகையால், மனிதர்களிடம் பயபக்தியோடு இருக்காதீர்கள்; பதிலாக என்னிடமே பயபக்தியோடு இருக்க வேண்டும். மேலும் என்னுடைய வெளிப்பாடுகளை ஒரு மலிவான விலைக்கு வியாபாரம் செய்துவிடா தீர்கள். எவர்கள் கடவுள்-ன் வெளிப்பாடுகளுக்கு இணங்க தீர்ப்பு அளிக்கவில்லையோ அவர்கள் நம்பமறுப்வர்கள் ஆவர்.

அடிகுறிப்பு

சமநீதிச்சட்டம்

[5:45]மேலும், உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்கிற்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல், மேலும் காயத்திற்குச் சமமான காயம் என்று அதில் நாம் அவர்களுக்கு கட்டளையிட்டிருந் தோம். ஒருவர் தனக்கு உரியதை தர்மமாக விட்டுக் கொடுத்தால் அது அவருடைய பாவங்களுக்கு பரிகாரமாக ஆகும். எவர்கள் கடவுள்-ன் வெளிப்பாடுகளுக்கு இணங்க தீர்ப்பு செய்யவில்லையோ அவர்கள் நேர்மையற்றவர்கள் ஆவர்.

இயேசுவின் சுவிசேஷம்: வழிகாட்டுதலும், ஒளியும்

[5:46]அவர்களைத் தொடர்ந்து, மேரியின் மகனாகிய இயேசுவை, முந்தைய வேதமான தோராவை உறுதிப்படுத்துபவராக நாம் அனுப்பினோம். நாம் அவருக்கு வழிகாட்டுதலையும், மேலும் ஒளியையும் கொண்ட, மேலும் முந்தைய வேதங்களையும், தோராவையும் உறுதிபடுத்து வதாகவும் மேலும் அதன் வழிகாட்டுதலையும், ஒளியையும் அதிகப்படுத்துவதாகவும் மேலும் நன்னெறியாளர்களுக்கு அறிவூட்டலாகவும் இருந்த சுவிசேஷத்தைக் கொடுத்தோம்.

[5:47]சுவிசேஷத்தையுடைய மக்கள்,அதிலுள்ள கடவுள்-ன் வெளிப்பாடுகளுக்கு இணங்க தீர்ப்பளிக்க வேண்டும். எவர்கள் கடவுள்-ன் வெளிப்பாடுகளுக்கு இணங்க தீர்ப்பளிக்க வில்லையோ, அவர்கள் தீயவர்கள் ஆவர்.

குர்ஆன்: ஆதாரமாக கொள்ள வேண்டிய இறுதி புத்தகம்

[5:48]அதன்பிறகு நாம் உமக்கு, சத்தியம் நிறைந்த தாகவும், முந்தைய வேதங்களை உறுதிபடுத்து வதாகவும், மேலும் அந்த வேதங்களை ரத்து செய்து விட்டு அவற்றிற்குப் பதிலாகவும், இந்த வேதத்தை நாம் உமக்கு வெளிப்படுத்தினோம். கடவுள்-ன் வெளிப்பாடுகளுக்கு இணங்க நீங்கள் அவர்களுக்கிடையே தீர்ப்பளிக்க வேண்டும். மேலும் உங்களிடம் வந்திருக்கக் கூடிய சத்தியத்திற்கு அவர்கள் முரண்பட்டால் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றா தீர்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் நாம் சட்டங்களையும் மாறுபட்ட சடங்குகளையும், கட்டளையிட்டுள்ளோம். கடவுள் நாடி இருந் தால், அவரால் உங்களை ஒரே கூட்டத்தினராக ஆக்கியிருக்க இயலும். ஆனால், அவர் உங்கள் ஒவ்வொருவருக்கும்கொடுத்த வெளிப்பாடு களின் மூலமாக, உங்களை இவ்வாறு அவர் சோதனைக்குள்ளாக்குகின்றார். நீங்கள் நன்னெறியில் போட்டியிடுங்கள். உங்க ளுடைய-உங்கள் அனைவருடைய-இறுதி விதி கடவுள்-இடமே உள்ளது, பின்னர் நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்த அனைத்தையும் அவர் உங்களுக்கு அறிவிப்பார்.

[5:49]நீங்கள், உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கடவுள்-ன் வெளிப்பாடுகளுக்கு இணங்க தீர்ப்பு அளிக்க வேண்டும். அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றாதீர்கள். மேலும் அவர்கள் கடவுள்-ன் சில வெளிப்பாடுகளை விட்டும் உங்களைத் திருப்பி விடாதவாறு எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டால், அவர்களுடைய சில பாவங்களுக்காக அவர்களைக் கடவுள் தண்டிக்க நாடுகின்றார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். உண்மையில், பெரும்பாலான மக்கள் தீயவர்களாக இருக்கின்றனர்.

[5:50]அவர்கள் அறியாமைக் காலத்தின் சட்டங் களை ஆதரிக்க நாடுகின்றார்களா? உறுதியை அடைந்து விட்டவர்களுக்கு கடவுள்-உடைய சட்டத்தைவிட யாருடைய சட்டம் சிறந்தது?

குறிப்பிட்ட யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் நண்பர்களாக இருக்க இயலாது

[5:51]நம்பிக்கை கொண்டோரே, குறிப்பிட்ட சில யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் நண்பர் களாக்கிக் கொள்ளாதீர்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் நண்பர்களாவர். உங்களில் எவர்கள் அவர்களை நண்பர்களாக்கிக் கொள் கின்றார்களோ அவர்களும், அவர்களைச் சார்ந்தவர்களே ஆவர். வரம்பு மீறுபவர்களை கடவுள் வழி நடத்தமாட்டார்.

அடிகுறிப்பு

[5:52]தங்கள் இதயங்களில் சந்தேகத்தைத் தாங்கிய வர்கள், “நாங்கள் தோற்கடிக்கப்பட்டு விடுவோம் என்று அஞ்சுகின்றோம்” என்று கூறியவாறு அவர்களுடன் சேர்வதற்கு விரைவதை நீங்கள் காண்பீர்கள். அவர்களுடைய இரகசிய எண்ணங்களுக்காக அவர்கள் வருந்துவதற்கு காரணமாகக்கூடிய ஒரு வெற்றியையோ, அல்லது அவரிடமிருந்து ஒரு கட்டளையையோ கடவுள் கொண்டு வரக்கூடும்.

[5:53]அதன்பிறகு நம்பிக்கையாளர்கள், “ நாங்கள் உங்களுடன் இருக்கின்றோம் என்று உறுதியுடன் கடவுள் மீது சத்தியம் செய்த அதே மக்களா இவர்கள்”? என்று கூறுவார்கள். அவர்கள் செயல்கள் அனைத்தும் பயனற்ற தாகிவிட்டது; அவர்கள் தான் நஷ்டவாளிகள்.

[5:54]நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் உங்களுடைய மார்க்கத்தை விட்டு பழைய நிலைக்கு திரும்பிவிட்டால், அதன் பிறகு கடவுள் அவர் நேசிக்கும் மேலும் அவரை நேசிக்கும் மக்களை உங்களுடைய இடத்தில், உங்களுக்குப் பதிலாக அமர்த்திவிடுவார். அவர்கள் நம்பிக்கையாளர்களிடம் கனிவாக வும், நம்பிக்கையற்றவர்களிடம் கடுமையாக வும் இருப்பார்கள், மேலும் எந்த நிந்தனைக்கும் அஞ்சாது, கடவுள்-க்காகப் பாடுபடுவார்கள். கடவுள்-உடைய அருட்கொடை இத்தகையதே; அதை அவர் தான் நாடுகின்றவர்களுக்கு கொடுக்கின்றார். கடவுள் தாராளமானவர், எல்லாம் அறிந்தவர்.

[5:55]உங்களுடைய உண்மையான நண்பர்கள் யாரென்றால் கடவுள்-ம் மற்றும் அவருடைய தூதரும் மேலும் தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடித்து, மற்றும் கடமையான தர்மத்தையும் (ஜகாத்) கொடுத்து வரக்கூடிய, நம்பிக்கையாளர்களும்தான், மேலும் அவர்கள் குனிந்து வழிபடுகின்றனர்.

[5:56]எவர்கள் தங்களை, கடவுள்-க்கும், அவரது தூதருக்கும் மேலும் நம்பிக்கை கொண் டோருக்கும் நண்பர்களாக்கிக் கொண்டார் களோ, அவர்கள் கடவுள்-உடைய கட்சியைச் சார்ந்தவர்கள்; நிச்சயமாக அவர்கள்தான் வெற்றியாளர்கள்.

எந்த யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்

[5:57]நம்பிக்கை கொண்டோரே, உங்களுடைய மார்க்கத்தைப் பரிகாசமும், கேலியும் செய்கின்ற முந்தைய வேதத்தைப் பெற்றவர்களுடனும், நம்பிக்கையற்றவர்களுடனும் நட்புக் கொள்ளா தீர்கள். நீங்கள் உண்மையிலேயே நம்பிக்கை யாளர்களாக இருந்தால், நீங்கள் கடவுள்-இடம் பயபக்தியுடன் இருக்க வேண்டும்.

வேதங்களைப் பெற்றவர்கள் வரம்பு மீறுகின்றார்கள்

[5:58]நீங்கள் தொடர்புத் தொழுகைகளுக்காக (ஸலாத்) அழைத்தால், அதை அவர்கள் பரிகாசமும், கேலியும் செய்கின்றார்கள். அவர்கள் புரிந்து கொள்ளாத மக்களாக இருப்பதே இதற்கு காரணமாகும்.

[5:59]“வேதத்தையுடைய மக்களே, நாங்கள் கடவுள் -ஐயும், எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதையும், எங்களுக்கு முன்னர் வெளிப்படுத்தப் பட்டதையும் நம்புகின்ற காரணத்தாலும், மேலும் உங்களில் பெரும்பாலோர் நன்னெறியாளர் களாக இல்லாத காரணத்தினாலும் தான், நீங்கள் எங்களை வெறுக்கின்றீர்கள் அல்லவா?” என்று கூறுவீராக.

[5:60]“கடவுள்-உடைய பார்வையில் எவர்கள் மிகவும் கெட்டவர்கள் என்று நான் உங்களுக்கு கூறுகின்றேன்.அவர்கள் (மிகவும் இழிவடைந்த) குரங்குகளாகவும், பன்றிகளாகவும், மேலும் இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்களாகவும் அவரால் ஆக்கப்படும்வரை அவருடைய கோபத்திற்குள்ளாகி பின்னர் கடவுள்-ஆல் தண்டிக்கப்பட்டவர்களாவர். அவர்கள் மிக மிக மோசமானவர்கள், மேலும் நேரான பாதையி லிருந்து வெகுதூரம் விலகிப்போனவர்கள்” என்று கூறுவீராக.

[5:61]முற்றிலும் நம்பிக்கையின்றி நுழைந்து, மேலும் முற்றிலும் நம்பிக்கையின்றி வெளியேறும் போதும் அவர்கள் உம்மிடம் வரும்போது, “நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம்,” என்று கூறுகின்றார்கள். அவர்கள் மறைக்கும் அனைத்தையும் கடவுள் முழுவதும் அறிந்த வராக இருக்கின்றார்.

[5:62]அவர்களில் பலர், பாவங்கள் செய்வதற்கும், வரம்புமீறுவதற்கும், மேலும் சட்டத்திற்கு புறம்பான சம்பாத்தியங்களிலிருந்து உண்பதற் கும் தயாராக இருப்பதை நீங்கள் காண்பீர்கள். அவர்கள் செய்வது உண்மையில் துக்ககரமானது ஆகும்.

[5:63]யூத மத போதகர்களும், பாதிரியார்களும் மட்டும் அவர்களுடைய பாவம் நிறைந்த கூற்றுக்களையும் மேலும் சட்டத்திற்குப் புறம்பான சம்பாத்தியங்களையும் தடுத்துக் கட்டளையிட்டி ருப்பார்களேயானால்! அவர்கள் செய்வது உண்மையில் துக்ககரமானது ஆகும்.

கடவுளுக்கு எதிராக நிந்தனை செய்வது

[5:64]“கடவுள்-ன் கை கட்டப்பட்டுள்ளது” என்று கூட யூதர்கள் கூறினார்கள். அவர்களுடைய கைகள்தான் கட்டப்பட்டுள்ளன. இதுபோன்ற ஒரு நிந்தனையைக் கூறியதற்காக அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள். மாறாக அவருடைய கைகள் விசாலமாக திறந்த நிலையில் அவருடைய விருப்பப்படி செலவு செய்து கொண்டிருக்கின்றது. உறுதியாக, உம்முடைய இரட்சகர் உமக்கு வெளிப்படுத்தியவை, அவர்களில் பெரும்பாலோர் வரம்பு மீறல் மற்றும் நம்பிக்கையின்மையில் ஆழமாக மூழ்கிவிடக் காரணமாகிவிடும். அதன் விளைவாக மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் அந்தநாள் வரை அவர்களுக்கிடையில் கடும் பகையும், வெறுப்பும் ஏற்படும் படி நாம் செய்துவிட்டோம். அவர்கள் போரின் நெருப்பை மூட்டும் போதெல்லாம் கடவுள் அவற்றை அணைத்து விடுகின்றார். அவர்கள் பூமியில் தீயவர்களாக சுற்றித்திரிகின்றார்கள், மேலும் தீமை செய்பவர்களை கடவுள் வெறுக்கின்றார்.

யூதர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் மீட்சி

[5:65]வேதத்தையுடைய மக்கள் மட்டும் நம்பிக்கைக் கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்தினால் நாம் அவர்களுடைய பாவங்களை மன்னித்து மேலும் அவர்களை பேரானந்தமான தோட்டங்களுக்குள் அனுமதிப்போம்.

அவர்கள் இந்த குர்ஆனின் மீது நம்பிக்கை கொண்டாக வேண்டும்

[5:66]அவர்கள் தோராவையும், சுவிசேஷத்தையும் மேலும் அவர்களுடைய இரட்சகரிடமிருந்து, அவர்களுக்கு இதில் இறக்கப்பட்டதையும் பின்பற்றி இருப்பார்களேயானால் அவர்களு க்கு மேலிருந்தும், அவர்கள் பாதங்களுக்கு கீழிருந்தும் அவர்கள் அருட்கொடைகளால் பொழியப்பட்டிருப்பார்கள். அவர்களில் சிலர் நன்னெறியாளர்கள், ஆனால் அவர்களில் பெரும்பாலோர் பாவம் செய்பவர்கள்.

தூதர் அறிவித்தாக வேண்டும்

[5:67]தூதரே, உங்கள் இரட்சகரிடமிருந்து உங்களு க்கு வெளிப்படுத்தப்பட்டதை அறிவித்து விடுங்கள் - அவ்வாறு நீர் செய்யாதவரை, அவருடைய செய்தியை நீர் அறிவித்தவராக மாட்டீர்-மேலும் மக்களிடமிருந்து கடவுள் உங்களை பாதுகாப்பார். கடவுள் நம்பிக்கை யற்ற மக்களை வழிநடத்த மாட்டார்.

[5:68]“வேதத்தையுடைய மக்களே, நீங்கள் தோராவையும், சுவிசேஷத்தையும் மற்றும் உங்கள் இரட்சகரிடமிருந்து இதில் இறக்கப் பட்டுள்ளதையும் பின்பற்றாத வரை உங்களுக்கு எந்த அடிப்படையும் கிடையாது” என்று கூறுவீராக. நிச்சயமாக, உங்கள் இரட்சகரிடமிருந்து வந்துள்ள இந்த வெளிப்பாடுகள் அவர்களில் பெரும்பாலோர் வரம்பு மீறல்களிலும், நம்பிக்கையின்மையிலும் ஆழமாக முழ்கிப் போவதற்கு காரணமாகின்றன. ஆகையால், நம்பமறுக்கும் மக்களுக்காக வருத்தப் படாதீர்கள்.

மீட்சிக்கான குறைந்தபட்சத் தேவைகள்

[5:69] நிச்சயமாக, நம்பிக்கை கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், மதம் மாறியவர்களாயினும், மேலும் கிறிஸ்தவர்களாயினும்; அவர்களில் எவர்கள், (1) கடவுள் மீது நம்பிக்கை கொண்டு மேலும் (2) இறுதிநாள் மீது நம்பிக்கைகொண்டு மேலும் (3) நன்னெறியானதொரு வாழ்வு நடத்து கின்றார்களோ, அவர்கள் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை, அவர்கள் துக்கப்பட மாட்டார்கள்.

[5:70]இஸ்ரவேலின் சந்ததியினரிடமிருந்து நாம் ஒரு உடன்படிக்கை எடுத்துக்கொண்டு, மேலும் அவர்களுக்குத் தூதர்களை அனுப்பினோம். தூதர் ஒருவர் அவர்கள் விரும்பாத எதை யேனும் அவர்களிடம் கொண்டு வந்த போதெல் லாம் அவர்களில் சிலரை, அவர்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள், மேலும் சிலரைக் கொன்று விட்டார்கள்.

[5:71]அவர்கள், தாங்கள் சோதிக்கப்பட மாட்டோம் என்று நினைத்தார்கள், ஆகையால் அவர்கள் குருடர்களாகவும், செவிடர்களாகவும் மாறி விட்டார்கள். பின்னர் கடவுள் அவர்களை மீட்டுக் கொண்டார். ஆனால் அதன் பிறகும் அவர்களில் பெரும்பாலோர் குருடர்களாகவும் செவிடர்களாகவும் மீண்டும் மாறிவிட்டார்கள். அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுள் பார்க்கின்றவராக இருக்கின்றார்.

இன்றைய கிறிஸ்தவ மதம் இயேசுவின் மார்க்கம் அல்ல

[5:72]மேரியின் மகன் மெசையாஹ்வை, கடவுள் என கூறுபவர்கள் உண்மையில் நம்பமறுப்பவர்கள் ஆவர். அந்த மெசையாஹ்வே, “இஸ்ரவேலின் சந்ததியரே, என்னுடைய இரட்சகரும்,* உங்களு டைய இரட்சகருமான கடவுள்-ஐ நீங்கள் வழிபட வேண்டும்,” என்றுதான் கூறினார். எவரொருவர் கடவுள்-க்கு இணையை ஏற்படுத்துகின்றாரோ, அவருக்கு கடவுள் சுவனத்தைத் தடை செய்து விட்டார், மேலும் அவருடைய விதி நரகமே. தீயவர்களுக்கு உதவியாளர்கள் இல்லை.

அடிகுறிப்பு

[5:73]கடவுள் திரித்துவத்தில் மூன்றாமவர் என்று கூறுபவர்கள் உண்மையில் நம்பமறுப்பவர்கள் ஆவர். ஒரு தெய்வத்தைத்தவிர வேறு தெய்வம் இல்லை. இவ்வாறு கூறுவதை விட்டும் அவர்கள் விலகிக் கொள்ளாதவரை, அவர்களிடையே உள்ள நம்ப மறுப்பவர்கள் ஒரு வேதனை மிகுந்த தண்டனைக் குள்ளாவார்கள்.

[5:74]அவர்கள் கடவுள்-இடம் வருந்தித்திருந்தி மேலும் அவரிடம் பாவமன்னிப்பு கேட்கமாட்டார்களா? கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

[5:75]மேரியின் மகனாகிய மெசையாஹ், அவருக்கு முன் வந்த தூதர்கள் போன்ற ஒரு தூதரே அல்லாமல் வேறில்லை. மேலும் அவருடைய தாயார் ஒரு புனிதர் ஆவார். அவர்கள் இருவரும் உணவு உண்பவர்களாக இருந்தார்கள். நாம் எவ்வாறு வெளிப்பாடுகளை அவர்களுக்கு விளக்கு கின்றோம் என்பதையும், அவ்வாறு இருந்தபோதும் அவர்கள் எவ்வாறு விலகிச் செல்கின்றார்கள் என்பதையும் கவனித்துப்பாரும்!

[5:76]“உங்களுக்கு எந்த தீங்கும் செய்யவோ அல்லது உங்களுக்கு எந்த நன்மையும் செய்யவோ சக்தியற்ற இணைகளை கடவுள்-உடன் சேர்த்து வழிபடுவீர்களா? கடவுள் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்” என்று கூறுவீராக.

உங்கள் நண்பர்களை கவனமாகத் தேர்ந்தெடுங்கள்

[5:77]“வேதத்தையுடைய மக்களே, உண்மைக்குப் புறம்பாக உங்கள் மார்க்கத்தின் எல்லைகளை மீறாதீர்கள், இன்னும் வழிகேட்டிற்குச் சென்று விட்ட மேலும் ஏராளமான மக்களை வழிகேட்டில் செலுத்திவிட்ட மக்களின் அபிப்பிராயங்களைப் பின்பற்றாதீர்கள்; அவர்கள் நேரான பாதையில் இருந்து விலகி வழிகேட்டில் வெகுதூரத்தில் இருக்கின்றார்கள்” என்று கூறுவீராக.

[5:78]டேவிட் மற்றும் மேரியின் மகன் இயேசுவின் நாவால், இஸ்ரவேலின் சந்ததியர்களில் உள்ள நம்பமறுப்பவர்கள் கண்டனம் செய்யப்பட்டார் கள். அவர்கள் கீழ்ப்படியாதவர்களாகவும், வரம்பு மீறியவர்களாகவும் இருந்ததே இதற்குக் காரணமாகும்.

அக்கறையின்மை, தண்டனைக்குரியது

[5:79]அவர்கள் ஒருவருக்கொருவர் தீமை செய்வதி லிருந்து தடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் செய்தது உண்மையில் துக்ககரமானது ஆகும்.

[5:80]அவர்களில் பெரும்பாலோர், நம்ப மறுப்பவர்களோடு தங்களைக் கூட்டாளிகளாக்கிக் கொள்வதை நீங்கள் கண்டிருப்பீர்கள். அவர் களுடைய ஆன்மாக் களுக்காக அவர்களது கைகள் முற்படுத்தி அனுப்பியவை உன்மையில் துக்ககரமானவை ஆகும். கடவுள் அவர்களிடம்கோபம் கொள் கின்றார். மேலும் அதன் விளைவாக அவர்கள் தண்டனையில் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.

[5:81]அவர்கள் கடவுள்-ஐயும், மற்றும் வேதம் வழங்கப்பட்டவரையும், மேலும் அவருக்கு இதில் வெளிப்படுத்தப்பட்டதையும் நம்பி இருந்தால், அவர்களுடன் நட்புக் கொண்டிருக்கமாட்டார் கள். ஆனால் அவர்களில் பெரும்பாலோர் தீயவர்கள்.

ஓர் உண்மை அறிக்கை

[5:82]நம்பிக்கையாளர்களின் மிக மோசமான எதிரிகளாக யூதர்களையும், இணைத்தெய்வ வழிபாடு செய்பவர்களையும் நீங்கள் காண்பீர்கள். மேலும் நம்பிக்கையாளர் களுக்கு நட்பில் மிகவும் நெருக்கமான மக்களாக “நாங்கள் கிறிஸ்தவர்கள்” என்று கூறுபவர்கள் இருப்பதையும் நீங்கள் காண்பீர்கள். இது ஏனெனில் அவர்களுக்கிடையில் மதகுருமார்களும், பாதிரியார்களும் அவர்களுக்கு இருக்கின்றனர், மேலும் அவர்கள் கர்வமற்றவர்களாக இருக்கின்றனர்.

[5:83]தூதருக்கு வெளிப்படுத்தியதை அவர்கள் கேட்கும்போது அதிலுள்ள உண்மையை அவர் கள் அடையாளம் கண்டு கொண்டவர்களாக, அவர்களுடைய கண்களில் கண்ணீர் வெள்ளத் தை நீங்கள் காண்பீர்கள். மேலும் அவர்கள் கூறுவார்கள், “எங்கள் இரட்சகரே, நாங்கள் நம்பிக்கை கொண்டுவிட்டோம், ஆகையால் எங்களை சாட்சியாளர்களுடன் கணக்கிடுவீராக.

[5:84]“நாங்கள் ஏன் கடவுள்-ன் மீதும், மேலும் எங்களிடம் வந்திருக்கக்கூடிய உண்மையின் மீதும் நம்பிக்கை கொள்ளக் கூடாது, இன்னும் எங்களுடைய இரட்சகர் எங்களை நன்னெறி யான மக்களுடன் ஏற்றுக் கொள்ளக்கூடும் என்றும் ஏன் எதிர்பார்க்கக் கூடாது?”

[5:85]இதனைக் கூறியதற்காக கடவுள் அவர் களுக்கு வெகுமதியளித்தார்; அவர்களை ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களில் அவர் பிரவேசிக்கச் செய்வார். அதில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். நன்னெறியாளர்களுக்கு இதுதான் வெகுமதி ஆகும்.

[5:86]நம்பமறுத்து மேலும் நம்முடைய வெளிப் பாடுகளை ஏற்க மறுத்தவர்களைப் பொறுத் தவரை, அவர்கள் நரகவாசிகளாவார்கள்.

சட்டபூர்வமான பொருட்களைத் தடை செய்யாதீர்கள்

[5:87]நம்பிக்கை கொண்டோரே, கடவுள் -ஆல் சட்டபூர்வமானதாக ஆக்கப்பட்ட நல்ல பொருட் களைத் தடை செய்யாதீர்கள், மேலும் வலுச் சண்டை செய்யாதீர்கள்; வலுச்சண்டை செய்பவர் களைக் கடவுள் வெறுக்கின்றார்.

[5:88]மேலும் கடவுள் உங்களுக்கு அளித்திருக்கின்ற நல்லவற்றில் இருந்தும், மேலும் சட்டபூர்வமான வைகளில் இருந்தும் உண்ணுங்கள். எவர் மீது நீங்கள் நம்பிக்கையாளர்களோ அந்தக் கடவுள் இடம் பயபக்தியுடன் இருக்க வேண்டும்.

கடவுளின் பெயரை வீணிற்கு எடுக்காதீர்கள்

[5:89]சாதாரணமாகக் கூறும் சத்தியங்களுக்கு கடவுள் உங்களை பொறுப்பாளியாக்க மாட்டார், உங்களுடைய உண்மையான நோக்கங்களுக்கு அவர் உங்களை பொறுப்பாளியாக்குவார். நீங்கள் ஒரு சத்தியத்தை மீறினால், நீங்கள் உங்கள் சொந்த குடும்பத்திற்கு எந்த உணவு அளிப்பீர்களோ அதிலிருந்து பத்து ஏழை மக்களுக்கு உணவளித்து அல்லது அவர் களுக்கு ஆடை அணிவித்து அல்லது ஒரு அடிமையை விடுவித்து பரிகாரம் செய்ய வேண்டும். இதைச் செய்ய உங்களால் முடியாவிட்டால், பின்னர் நீங்கள் மூன்று நாட்கள் நோன்பு இருக்க வேண்டும். இது நீங்கள் நிறைவேற்றுவதாகச் சத்தியம் செய்த வாக்குறுதி களை மீறியதற்குப் பிராயச்சித்தமாகும். உங்க ளுடைய சத்தியங்களை நீங்கள் நிறை வேற்றுங்கள். நீங்கள் நன்றி செலுத்தக் கூடிய வர்களாக ஆகும் பொருட்டு, கடவுள் அவரு டைய வெளிப்பாடுகளை இவ்வாறு உங்களுக்கு விளக்குகின்றார்.

போதையூட்டும் பொருட்களும், சூதாட்டமும் தடை செய்யப்பட்டுள்ளன

[5:90]நம்பிக்கை கொண்டோரே, போதையூட்டும் பொருட்களும் மேலும் சூதாட்டமும், மேலும் விக்கிரகங்களின் பலி பீடங்களும், மேலும் அதிர்ஷ்டப் பந்தயங்களும் சாத்தானுடைய அருவருப்பான செயல்களாகும். நீங்கள் வெற்றி யடையும் பொருட்டு, நீங்கள் அவைகளைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

[5:91]போதையூட்டக் கூடிய பொருட்கள் மற்றும் சூதாட்டம் மூலமாக உங்களுக்கிடையில் கடும் பகையையும், வெறுப்பையும் தூண்டி மேலும் உங்களைக் கடவுள் -ஐ நினைவு கூறுவதை விட்டும், தொடர்புத் தொழுகைகளை (ஸலாத்) கடைப்பிடிப்பதை விட்டும் திருப்பி விட சாத்தான் விரும்புகின்றான். இதன் பிறகும் நீங்கள் விலகிக் கொள்ளமாட்டீர்களா?

[5:92]நீங்கள் கடவுள் -க்கு கீழ்ப்படியவேண்டும், மேலும் நீங்கள் தூதருக்கு கீழ்ப்படிய வேண்டும், மேலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் திரும்பிச் சென்று விட்டால், பின்னர் நம்முடைய தூதரின் ஒரே கடமை செய்தியைத் திறம்பட அறிவிப்பது மட்டுமே, என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

[5:93]நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்துகின்றவர்கள், கட்டளைகளைக் கடைப்பிடித்து, நம்பிக்கை கொண்டு நன்னெறியானதொரு வாழ்வு நடத்தி, பின்னர் அவர்களுடைய தெய்வ பக்தி மற்றும் நம்பிக்கையை பராமரித்து மேலும் தெய்வ பக்தியை கவனத்தில் கொண்டும் நன்னெறியில் நீடித்தும் இருக்கும் காலம் வரை, அவர் எந்த உணவை உண்பதாலும் குற்றம் செய்தவராக மாட்டார். நன்னெறியாளரைக் கடவுள் நேசிக்கின்றார்.

வேட்டைப்பிராணிகளின் பாதுகாப்பு

[5:94]நம்பிக்கை கொண்டோரே, (புனித யாத்திரையின் போது) உங்களுடைய கைகளுக்கும், உங்களு டைய அம்புகளுக்கும் எட்டும் தூரத்தில் சில வேட்டைப் பிராணிகளைக் கொண்டு, கடவுள் உங்களைச் சோதிப்பார். கடவுள் உங்களுக் கிடையில், எவர்கள் தனிமையிலும் அவரைக் கவனத்தில் கொள்கின்றனர் என்பதை இவ்வாறு பிரித்துக்காட்டுகின்றார். இதன்பிறகு எவர்கள் வரம்பு மீறுகின்றார்களோ, அவர்கள் வேதனை நிறைந்த தண்டனைக்குள்ளாகி விட்டார்கள்.

[5:95]நம்பிக்கை கொண்டோரே, புனித யாத்திரை யின் போது எந்த வேட்டைப் பிராணிகளையும் கொல்லாதீர்கள். எவரேனும் வேண்டுமென்றே ஏதேனும் வேட்டைப் பிராணியைக் கொன்று விட்டால், எத்தனை வேட்டைப் பிராணிகளை அவர் கொன்றாரோ, அதற்குச் சமமான எண்ணிக்கையிலான கால்நடைகள் அவருக்கு அபராதமாகும். உங்களில் உள்ள மக்களில், நீதமான இருவர் இந்த தீர்ப்பை அளிக்க வேண்டும். அவர்கள் அந்தப்பிராணிகள் கஃபாவைச் சென்று சேர்வதை உறுதிசெய்ய வேண்டும். இல்லாவிடில், அவர் ஏழை மக்களுக்கு உணவளித்து அல்லது அவரது குற்றத்திற்கு சமமான அளவு நோன்பு இருந்து பரிகாரம் செய்து பிராயச்சித்தம் தேடிக் கொள்ளலாம். முந்தைய குற்றங்களை கடவுள் மன்னித்துவிட்டார். ஆனால் எவரேனும் இப்படிப்பட்ட குற்றத்தை திரும்பவும் செய்தால், கடவுள் அதற்குப் பழி தீர்ப்பார். கடவுள் சர்வ வல்லமையுடையவர், பழிதீர்ப்பவர்.

கடல்வாழ் உயிரினங்கள் அனைத்தும் உண்பதற்கு சட்டப்பூர்வமானது

[5:96]கடலில் உள்ள எல்லா மீன்களும் நீங்கள் உண்பதற்கு சட்டபூர்வமானதாக ஆக்கப்பட்டு ள்ளது. புனித யாத்திரையின் போது, நீங்கள் பயணத்தில் இருக்கும்போது, இது உங்களுக்கு உணவாக வழங்கப்படலாம். புனித யாத்திரை முழுவதும் நீங்கள் வேட்டையாடக்கூடாது. எவருக்கு முன்னால் நீங்கள் வரவழைக்கப்படுவீர்களோ, அந்தக் கடவுள்-இடம் நீங்கள் பயபக்தியுடன் இருக்க வேண்டும்.

[5:97]கடவுள் புனித மஸ்ஜிதான* கஃபாவை, மனி தர்களுக்கும், இன்னும் புனித மாதங் களுக்கும், (புனித மஸ்ஜிதிற்குரிய) பலிப்பிரா ணிகளுக்கும், அவற்றை அடையாளங் காட்டும் மாலைகளுக்கும் புகலிடமாக ஆக்கி யுள்ளார். வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றையும் கடவுள் அறிந்திருக் கின்றார், மேலும் கடவுள் எல்லாம் அறிந்தவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

அடிகுறிப்பு

[5:98]கடவுள் தண்டனையை நிறைவேற்றுவதில் கண்டிப்பானவர் மேலும் கடவுள் மன்னிப் பவர், மிக்க கருணையாளர் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

[5:99]தூதரின் ஒரே கடமை செய்தியை ஒப்படைப் பதே, மேலும் நீங்கள் வெளிப்படுத்தும் அனைத் தையும், நீங்கள் மறைக்கும் அனைத்தையும் கடவுள் அறிகின்றார்.

[5:100]பிரகடனம் செய்வீராக: “கெட்டவை அபரிமிதமாக இருப்பது உங்களைக் கவர்ந்தபோதிலும், கெட்டவையும், நல்லவையும் சமமாகாது. அறிவுக் கூர்மை உடையோரே, (நீங்கள் சிறுபான்மை யினராக இருந்தாலும்) நீங்கள் வெற்றி அடையும் பொருட்டு, கடவுள்-இடம் பயபக்தியுடன் இருக்க வேண்டும்.

[5:101]நம்பிக்கை கொண்டோரே, சில விஷயங் களைப்பற்றி கேட்காதீர்கள். அவை அவற்றின் சரியான நேரத்திற்கு முன்னால் உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டால் உங்களுக்குத் தீங்கி ழைத்துவிடும். நீங்கள் குர்ஆனின் ஒளியில் அவற்றைப் பற்றி கேட்டால், அவை உங்களுக்குத் தெளிவாகிவிடும். கடவுள் அவற்றை வேண்டு மென்றே பொருட்படுத்தாது விட்டுவிட்டார். கடவுள் மன்னிப்பவர், இரக்கம் மிக்கவர்.

[5:102]உங்களுக்கு முன்பு மற்றவர்களும் இதே கேள்விகளை கேட்டார்கள், பின்னர் அவற்றை நம்ப மறுத்தவர்களாகிவிட்டார்கள்.

[5:103]கடவுள் குறிப்பிட்ட வகையான ஆண்குட்டி களையும், பெண்குட்டிகளையும் கலந்து ஈன்றெடுக்கும் கால்நடைகளையோ, சத்தியம் செய்து விடுவிக்கப்பட்ட கால்நடைகளையோ, இரு ஆண்குட்டிகளைத் தொடர்ந்து பெற்றெடுத்ததையோ, பத்துக் குட்டிகளுக்கு வித்திட்ட எருதையோ தடைசெய்யவில்லை. நம்ப மறுப்பவர்கள் தான் கடவுள் -ஐப் பற்றி இது போன்ற பொய்களை நூதனமாக கண்டுபிடித்துள்ளார்கள், அவர்களில் பெரும்பாலோர் புரிந்துகொள்ளமாட்டார்கள்.

உங்கள் பெற்றோர்களின் மார்க்கத்தை கண்மூடித்தனமாக பின்பற்றாதீர்கள்

[5:104]“கடவுள் வெளிப்படுத்தியவற்றின்பாலும், மேலும் தூதரின் பாலும் வாருங்கள்” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள், “எங்களுடைய பெற்றோர்கள் செய்து கொண்டிருந்ததில் எதை நாங்கள் கண்டோ மோ, அதுவே எங்களுக்குப் போதுமானது” என்று கூறுகின்றார்கள். என்ன, அவர் களுடைய பெற்றோர்கள் ஒன்றும் அறியாதவர் களாகவும், வழிநடத்தப்படாதவர்களாகவும் இருந்தாலுமா?

[5:105]நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் உங்கள் கழுத்துக்களைப் பற்றி மட்டுமே கவலைப்பட வேண்டும். மற்றவர்கள் வழிகேட்டில் சென் றாலும், நீங்கள் நேர்வழியில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் வரை, அவர்களால் உங்களுக்கு தீங்கு செய்ய இயலாது. உங்களுடைய உங்கள் எல்லோருடைய இறுதி விதியும் கடவுள்- இடம் உள்ளது, பின்னர் அவர் நீங்கள் செய்த அனைத்தையும் உங்களுக்கு அறிவிப்பார்.

உயிலுக்கு சாட்சி அளித்தல்

[5:106]நம்பிக்கை கொண்டோரே, உங்களில் ஒருவர் இறக்கும் தருவாயில், உயிலுக்குச் சாட்சியாக உங்களுக்கிடையே உள்ள நியாயமான இருவர் இருக்க வேண்டும். நீங்கள் பிரயாணத்தில் இருந்தால், அப்போது இரண்டு வேறு நபர்கள் சாட்சியாக செயல்படலாம். உங்கள் சந்தேகங் களை அவர்கள் நிவர்த்தி செய்வதற்காக தொடர்புத் தொழுகையை (ஸலாத்) நிறைவு செய்த பின்னர், கடவுள் மீது சத்தியம் செய்து, “உயில் எழுதியவர் எங்களுடைய உறவினராக இருந்தாலும் நாங்கள் இதை சுயலாபம் அடைவதற்காக பயன்படுத்த மாட்டோம், அன்றி கடவுள்-உடைய அத்தாட்சியை மறைக்கவும் மாட்டோம், அவ்வாறு மறைத்தால் நாங்கள் பாவிகளாகி விடுவோம்”, என்று கூற வேண்டும்.

[5:107]சாட்சிகள் பாரபட்சம் காட்டும் குற்றவாளி களாகக் கண்டுபிடிக்கப்பட்டால், அப்போது வேறு இருவரை அவர்களுடைய இடத்தை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ள வேண்டும். முதல் சாட்சிகளால் பாதிக்கப்பட்ட இரண்டு நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், மேலும் அவர்கள் கடவுள் மீது சத்தியம் செய்து; “எங்களுடைய சாட்சி அவர்களுடையதைக் காட்டிலும் உண்மை யானது; நாங்கள் பாரபட்சமாக இருக்க மாட்டோம். இல்லையேல், நாங்கள் வரம்பு மீறியவர்களாகி விடுவோம்” என்று கூற வேண்டும்.

[5:108]இது அவர்கள் புறமிருந்து ஒரு நாணயமான சாட்சியத்தை ஊக்கப்படுத்துவதற்கும், அவர் களுடைய சாட்சி பிரமாணமும், அவர்களுக்கு முந்தைய சாட்சிகளின் பிரமாணம் போன்று புறக்கணிக்கப்பட்டு விடும் என்ற பயத்தையும் ஏற்படுத்த மிகவும் ஏற்றது. நீங்கள் கடவுள் -ஐக் கவனத்தில் கொள்ளவேண்டும் மேலும் கவனமாக கேட்க வேண்டும், கடவுள் தீயவர்களை வழி நடத்துவதில்லை.

இறந்து விட்ட தூதர்கள் முற்றிலும் அறியாதவர்களே

[5:109]கடவுள் தூதர்களை அழைத்து, “உங்களுக் குரிய மறுமொழி எவ்வாறு இருந்தது?” என்று கேட்கும் அந்த நாள் வரும், அதற்கு அவர்கள், “அது பற்றிய அறிவு எங்களுக்கு இல்லை, நீரே எல்லா இரகசியங்களையும் அறிந்தவர்”, என்று கூறுவார்கள்.

[5:110]கடவுள் கூறுவார், “மேரியின் மகனாகிய இயேசுவே, உம்மீதும் உம்முடைய தாயார் மீதும் என்னுடைய அருட்கொடைகளை நினைவு கூர்வீராக. நீர் தொட்டிலில் இருந்த போதும் மேலும் வாலிபரான போதும் மக்களிடம் பேசுவதற்கான ஆற்றலைத் தர பரிசுத்த ஆவியைக் கொண்டு நான் உதவி செய்தேன். நான் உமக்கு வேதத்தையும், ஞானத்தையும், தோராவையும், சுவிசேஷத்தையும் கற்றுக் கொடுத்தேன். நீர் என்னுடைய அனுமதியின்படி களிமண்ணிலிருந்து ஒரு பறவை உருவத்தை உருவாக்கினீர், பின்னர் அதனுள் ஊதினீர், அப்போது அது என்னுடைய அனுமதியின்படி ஓர் உயிருள்ள பறவையாக மாறியதை நினைவு கூர்வீராக. நீர் என்னுடைய அனுமதியின்படி குருடரையும், குஷ்டரோகியையும் குணப் படுத்தினீர், மேலும் என்னுடைய அனுமதியின் படி இறந்தவரை உயிர்ப்பித்தீர். ஆழ்ந்த அற்புதங்களை நீர் அவர்களுக்கு காட்டிய போதும் உமக்கு தீங்கு செய்ய விரும்பிய இஸ்ரவேலின் சந்ததியரிடம் இருந்து உம்மை நான் பாதுகாத்ததை”, நினைவு கூர்வீராக. அவர்களுக்கிடையே இருந்த நம்பிக்கையற்ற வர்கள். ‘இது தெளிவான மாயாஜாலம்’, என்று கூறினார்கள்.

[5:111]“நான் சீடர்களுக்கு, ‘நீங்கள் என்மீதும் என்னுடைய தூதர்மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும்’ என்று உள்ளுணர்வு அளித்ததை நினைவு கூர்வீராக. அவர்கள் ‘நாங்கள் நம்பிக்கை கொண்டோம் மேலும் நாங்கள் அடிபணிந்தவர்கள் என்று சாட்சி கூறுகின் றோம்’ என்று கூறினார்கள்.”

விருந்து

[5:112]சீடர்கள், “மேரியின் மகன் இயேசுவே, உம்முடைய இரட்சகரால் வானத்திலிருந்து எங்களுக்கு ஒரு விருந்தை அனுப்ப முடியுமா?” என்று கூறியதை நினைவு கூர்வீராக. அவர், “நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், கடவுள்-இடம் பயபக்தியுடன் இருக்க வேண்டும்” என்று கூறினார்.

[5:113]அவர்கள், “நாங்கள் அதிலிருந்து உட்கொள்ளவும், மேலும் எங்களுடைய இதயங்களை மறுஉறுதி செய்து கொள்ளவும், மேலும் நீங்கள் எங்களிடம் கூறியது சத்தியம் தான் என்று உறுதியாகத் தெரிந்து கொள்ளவும் விரும்புகின்றோம். அவற்றிற்குச் சாட்சிகளாக நாங்கள் பணிபுரிவோம்” என்று கூறினார்கள்.

பெரிய அற்புதங்கள் பெரிய பொறுப்புகளைக் கொண்டு வருகின்றன*

[5:114]மேரியின் மகனாகிய இயேசு, “எங்கள் தெய்வமே, எங்கள் இரட்சகரே, எங்களுக்கு வானத் திலிருந்து ஒரு விருந்தை அனுப்புவீராக. அது எங்களில் உள்ள ஒவ்வொருவருக்கும், தாராளமாகவும் மேலும் உம்மிடமிருந்து ஒரு அடையாளத்தையும் கொண்டுவருவதாகவும் இருக்கட்டும். எங்களுக்கு வழங்குவீராக; நீரே வழங்குவதில் சிறந்தவர்” என்று கூறினார்.

அடிகுறிப்பு

[5:115]கடவுள், “ நான் அதனைக் கீழே அனுப்புகின் றேன். இதற்குப் பிறகு உங்களில் எவரேனும் நம்ப மறுத்தால் மற்ற எவரையும்* ஒரு போதும் தண்டித்திராத அளவு, அவரை நான் தண்டிப்பேன்” என்று கூறினார்.

மீண்டும் உயிர்ப்பித்து எழுப்பப்படும் நாளில்

[5:116]கடவுள், “மேரியின் மகனாகிய இயேசுவே, * நீர் மக்களிடம், “ என்னையும், என்னுடைய தாயாரையும் கடவுள்-உடன் இணையாக்கி வைத்து வழிபடுங்கள் என்று கூறினீரா?” என்று கூறுவார். அதற்கு அவர் கூறுவார், “நீரே துதிப்பிற்குரியவர். எது சரியில்லையோ அதை நான் கூறியிருக்க இயலாது. அவ்வாறு நான் கூறியிருந்தால், நீர் அதை முன்பே தெரிந்திருப்பீர். என்னுடைய எண்ணங்களை நீர் அறிவீர், உம்முடைய எண்ணங்களை நான் அறியமாட்டேன். அனைத்து இரகசியங் களையும் நீர் அறிவீர்.

அடிகுறிப்பு

[5:117]“நான் எதைக் கூறவேண்டும் என்று நீர் எனக்கு கட்டளையிட்டீரோ அதை மட்டுமே அவர்களுக்கு நான் கூறினேன், அது: ‘என்னு டைய இரட்சகரும் மேலும் உங்களுடைய இரட்சகருமாகிய கடவுள்-ஐ நீங்கள் வழிபட வேண்டும்’ என்பதே. அவர்களோடு நான் வாழ்ந்த காலம் வரை, அவர்களுக்கிடையில் நான் ஒரு சாட்சியாக இருந்தேன். பூமியில் என்னுடைய வாழ்க்கையை நீர் முடிவடையச் செய்தபோது, நீர் அவர்கள் மீது கண்காணிப் பாளர் ஆகிவிட்டீர். அனைத்திற்கும் நீரே சாட்சியாளர்.

[5:118]“நீர் அவர்களைத் தண்டித்தால், அவர்கள் உம்முடைய கட்டுப்பாட்டில் உள்ளவர்கள்.நீர் அவர்களை மன்னித்தால், நீர் சர்வவல்லமை யுடையவர், ஞானம் மிக்கவர்”.

[5:119] கடவுள், “சத்தியவான்கள் அவர்களுடைய சத்தியத்தன்மையின் பொருட்டு காப்பாற்றப் படும் நாள் இதுவாகும்” எனப் பிரகடனம் செய்வார். ஓடிக்கொண்டிருக்கும் நீரோடை களைக் கொண்ட தோட்டங்களுக்கு அவர்கள் தகுதி பெற்றுவிட்டார்கள். அதில் அவர்கள் என்றென்றும் தங்கி இருப்பார்கள். கடவுள் அவர்களைக் கொண்டு திருப்தி அடைந்தார், மேலும் அவர்கள் அவரைக் கொண்டு திருப்தி அடைந்தார்கள். இதுதான் மகத்தான மாபெரும் வெற்றியாகும்.

[5:120]வானங்கள் மற்றும் பூமி மேலும் அவற்றில் உள்ள அனைத்தின் ஆட்சி அதிகாரமும் கடவுள்-க்கே உரியது. அவர் சர்வ சக்தியுடையவர்.