சூரா 64: பரஸ்பரம் பழித்துக் கொள்ளுதல் (அல்-தகாபுன்)
[64:0] கடவுளின் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
[64:1] வானங்களில் உள்ள ஒவ்வொன்றும் மேலும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-ஐத் துதித்துக் கொண்டிருக்கின்றன. அனைத்து அரசுரிமையும் அவருக்கேயுரியது, மேலும் அனைத்துப் புகழும் அவருக்கேயுரியது, மேலும் அவர் சர்வ சக்தியுடையவர்.
[64:2] அவர்தான் உங்களைப் படைத்தவர், பின்னர் உங்களுக்கிடையில் நம்பமறுப்பவரும், நம்பிக்கை யாளரும் உள்ளனர். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் பார்ப்பவராக இருக்கின்றார்.
[64:3] வானங்கள் மற்றும் பூமியை குறிப்பிட்டதொரு காரணத்திற்காகவே* அவர் படைத்தார், உங்களை வடிவமைத்தார், மேலும் மிகச் சரியாக வடிவமைத் தார், பின்னர் உங்களுடைய இறுதி விதி அவரிடமே உள்ளது.
அடிகுறிப்பு

[64:4] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன் றையும் அவர் அறிகின்றார், மேலும் நீங்கள் மறைக் கின்ற ஒவ்வொன்றையும் மற்றும் நீங்கள் அறிவிக் கின்ற ஒவ்வொன்றையும் அவர் அறிகின்றார். ஆழ்மனதின் எண்ணங்களைக் கடவுள் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.
[64:5] கடந்த காலத்தில் நம்ப மறுத்து, பின்னர் தங்களுடைய தீர்மானங்களின் பின் விளைவு களை அனுபவித்தவர்களை நீங்கள் கவனித்திருக் கின்றீர்களா? வலி நிறைந்ததொரு தண்டனைக்கு அவர்கள் உள்ளானார்கள்.
[64:6] இது ஏனெனில் அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் தெளிவான சான்றுகளுடன் சென்றனர், ஆனால் அவர்கள், “நம்மைப் போன்ற மனிதர்களையா நாம் பின்பற்ற வேண்டும்?” என்று கூறினார்கள். அவர்கள் நம்ப மறுத்தனர், மேலும் திரும்பிச் சென்று விட்டனர். கடவுள்-க்கு அவர்கள் தேவை இல்லை. கடவுள் எந்தத் தேவையுமற்றவர், புகழ்ச்சிக்குத் தகுதியானவர்.
[64:7] நம்பமறுப்பவர்கள் தாங்கள் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்பட மாட்டோம் என்று உறுதியுடன் கூறுகின்றனர்! ஆம், உண்மையில், என் இரட்சகர் மீது ஆணையாக, நீங்கள் மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படுவீர்கள், மேலும் நீங்கள் செய்த ஒவ்வொன்றிற்கும் நீங்கள் பொறுப்பாக்கப்படுவீர்கள். இதனைச் செய்வது கடவுள்-க்கு எளிதானதேயாகும்.
[64:8] ஆகையால், நீங்கள் கடவுள் மற்றும் அவரு டைய தூதர் மீதும், மேலும் இதில் நாம் வெளிப் படுத்தியுள்ள இந்த ஒளியின் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும். நீங்கள் செய்கின்ற ஒவ்வொன்றையும் கடவுள் முற்றிலும் நன்கறிந்தவராக இருக்கின்றார்.
[64:9] ஒன்று கூட்டுகின்ற அந்நாளுக்காக உங்களை அவர் வரவழைக்கின்ற அந்நாள் வரும். அதுதான் பரஸ்பரம் பழித்துக் கொள்கின்ற நாளாகும். எவரொருவர் கடவுள் மீது நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியான தொரு வாழ்வு நடத்துகின்றாரோ, அவருடைய பாவங்களை அவர் தள்ளுபடி செய்வார், மேலும் ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களுக்குள் அவரை அனுமதிப்பார். அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். இதுவே மகத்தான மாபெரும் வெற்றியாகும்.
[64:10] நம்ப மறுத்து மேலும் நம்முடைய வெளிப் பாடுகளை ஏற்க மறுப்பவர்களைப் பொறுத்த வரை, அவர்கள் தான் நரக நெருப்பில் வசிப் பவர்கள் ஆவார்கள்; அங்கே அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். என்ன ஒரு துன்பகரமான விதி!

தெய்வீகச் சட்டம்

[64:11] கடவுள்-ன் நாட்டத்திற்கு இணங்கவே தவிர எந்த ஒன்றும் உங்களுக்கு நிகழ்வதில்லை. எவரொரு வர் கடவுள் மீது நம்பிக்கை கொள்கின்றாரோ, அவருடைய இதயத்தை அவர் வழிநடத்துவார். கடவுள் அனைத்து விஷயங்களையும் முற்றிலும் அறிந்திருக்கின்றார்.
[64:12] நீங்கள் கடவுள்-க்குக் கீழ்ப்படிய வேண்டும், மேலும் நீங்கள் தூதருக்குக் கீழ்ப்படிய வேண்டும். நீங்கள் திரும்பிச் சென்று விட்டால், பின்னர் நம்முடைய தூதரின் ஒரே இறைப்பணி தூதுச் செய்தியை ஒப்படைப்பதேயாகும்.
[64:13] கடவுள்: அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை. நம்பிக்கையாளர்கள் கடவுள் மீதே பொறுப்பேற்படுத்த வேண்டும்.
[64:14] நம்பிக்கை கொண்டோரே, உங்களுடைய வாழ்க்கைத் துணைகளும் மற்றும் உங்களு டைய பிள்ளைகளும் உங்களுடைய விரோதி களாக இருக்கக்கூடும்; எச்சரிக்கை. நீங்கள் பிழை பொறுத்து, மறந்து, மேலும் மன்னித்து விட்டால், பின்னர் கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.
[64:15] உங்களுடைய பணம் மற்றும் பிள்ளைகள் ஒரு சோதனையாகும், மேலும் மகத்தானதொரு பிரதிபலன் கடவுள் வசமுள்ளது.
[64:16] ஆகையால், நீங்கள் உங்களால் இயன்றவரை கடவுள்-இடம் பயபக்தியோடிருக்கவும், கவ னத்துடன் செவியேற்கவும், கீழ்ப்படியவும், மேலும் உங்களுடைய சொந்த நலனிற்காக (தர்மம்) கொடுக்கவும் வேண்டும். எவரொருவர் தன் சொந்தக் கஞ்சத்தனத்திலிருந்து பாது காக்கப்படுகின்றாரோ, இவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்.
[64:17] நீங்கள் கடவுள்-க்கு நன்னெறியின் கடனைக் கடனளித்தால், அவர் உங்களுக்குரிய வெகு மதியைப் பன்படங்காகப் பெருக்குவார், மேலும் உங்களை மன்னிப்பார். கடவுள் நன்றி பாராட்டு பவர், கனிவானவர்.
[64:18] அனைத்து இரகசியங்களையும் மற்றும் அறிவிப்புகளையும் அறிந்தவர்; சர்வ வல்லமை யுடையவர், ஞானம் மிக்கவர்.